26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
12 1507788640 4
ஆரோக்கிய உணவு

சோடா குடிப்பதனால் உடலுக்குள் இதெல்லாம் நடக்கிறதா! விபரீத விளைவுகள்!!

உங்களுடைய உடல் ஆரோக்கியம் குறித்து யாரெல்லாம் அக்கறையுடன் இருக்கிறீர்கள் என்று கேட்டால் எல்லாருமே கையைத் தூக்குவார்கள். அப்படி எல்லா சூழலிலும் நீங்கள் ஆரோக்கியம் குறித்து சிந்தித்து உடலுக்கு கேடு தருபவற்றை தவிர்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் நிச்சயம் இல்லை.

இன்று ஒரு நாள் மட்டும்,ஒரு நாள் சாப்பிடுவதால் என்ன ஆகிடப் போகிறது என்று சொல்லி சொல்லியே வருடக் கணக்கில் சாப்பிட்டுக் கொண்டிருப்போம். அதிலும் குறிப்பாக துரித உணவுகளை சாப்பிடுவோருக்கு இதன் பாதிப்பு இரட்டிப்பாக அமைந்திடும்.

இன்றைக்கு பலரும் நாகரிகம் கருதி பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு வகைகளையே பெரிதும் விரும்புகிறார்கள். ஆனால் இது உடலுக்கு பெரும் தீங்கினை விளைவிக்க கூடியது.

இன்றைக்கு ஹோட்டல்,தியேட்டர்,பார்க் என்று எங்கு சென்றாலும் ஸ்நாக்ஸ் மற்றும் உணவுடன் சேர்த்து சோடா குடிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடயே இப்பழக்கம் அதிகமாக காணப்படுகிறது. உடலுக்கு தீங்கு தரக்கூடியது என்று தெரிந்தும் சுவைக்காக தொடர்ந்து குடித்துக் கொண்டிருக்கிறோம். சிலருக்கு சோடா குடிப்பதில் அடிக்‌ஷனே ஏற்ப்பட்டு அதனை நிறுத்த முடியாத சூழலில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் கூட சோடாவுடன் இன்னொரு தின்பண்டத்தை சேர்த்து சாப்பிட்டதால் உடலில் ஏற்ப்பட்ட கெமிக்கல் மாற்றத்தினால் ஒருவர் உயிரிழந்தார் என்ற செய்தியை படித்திருப்போம் ஆனால் இன்னமும் தொடர்ந்து சோடா குடித்துக் கொண்டிருக்கிறோம். தனக்கு நடக்காத வரையில் எதுவும் நம்மை பாதிப்பதில்லை. ஏதேனும் நடந்தால் அய்யோ அம்மா என்று சமூகத்தை நோக்கி திட்ட ஆரம்பிக்கிறோம். முதலில் மாற்றங்களை நீங்கள் உங்களிடமிருந்துதான் தொடங்க வேண்டும்.

இதனுடைய பின் விளைவுகள் பற்றி எதுவும் யோசிக்காமல் தொடர்ந்து குடித்துக் கொண்டிருப்பதால் நம்முடைய உடலுக்கு எத்தகைய தீங்கு ஏற்படுகிறதோ அதேயளவு சுற்றுச்சூழலுக்கும் கேடு ஏற்படுகிறது. அதை விட தவறான தகவல்களால் மருத்துவம் என்று நினைத்து சில தவறான பழக்கங்களை கடை பிடித்துக் கொண்டிருக்கிறோம். அஜீரணம் ஏற்ப்பட்டால் சோடா குடித்தால் சரியாகும். உணவு எளிதாக செரிக்கும் என்று அடிக்கடி சொல்லக் கேட்டிருப்போம். இது உண்மையா? சோடா உடலுக்குள் சென்றால் என்ன பாதிப்புகள் எல்லாம் ஏற்படுத்தக்கூடும் என்று தெரிந்து கொள்ளுங்கள்

கிட்னி : ஹார்வோர்டு மருத்துவப் பள்ளியில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இது நிரூபணம் ஆகியிருக்கிறது. தொடர்ந்து அடிக்கடி சோடா குடிப்பதால் கிட்னி சேதமடைகிறதாம். டயட் சோடாவாக இருந்தாலும் இதே பாதிப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது

சர்க்கரை நோய் : சோடாவில் அதிகமாக இருப்பது சர்க்கரை மட்டுமே. தொடர்ந்து சோடா குடிப்பதானால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதனைத் தவிர நீங்கள் அன்றாடம் எடுக்கும் உணவுகள் வேறு இருக்கிறது. தொடர்ந்து நம் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகிக் கொண்டேயிருந்தால் அது சர்க்கரை நோய்க்கு வழி வகுத்துவிடும்.

சோடா : சோடாவை அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பாட்டில் மற்றும் கேன்களில் எண்டோக்ரைன் டிஸ்ருப்டர் மற்றும் பிஸ்பினால் ஏ கோட்டிங் கொடுக்கப்பட்டிருக்கும். இது நாம் குடிக்கும் சோடாவிலும் சிறிதளவு கலக்கவே செய்கிறது. அதனை குடிப்பதன் மூலம் நம் உடலுக்குள்ளும் அந்த கெமிக்கல் சேருகிறது. இதனால் மூச்சுப் பிரச்சனையிலிருந்து இதயம் தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கு கூட வாய்ப்புண்டு.

தண்ணீர்ச் சத்து குறையும் : பொதுவாக கேஃபைன் பொருட்களில் டியூர்டிக் என்ற அமிலம் கலந்திருக்கும். அதனை தொடர்ந்து குடித்து வந்தால் அவை சிறுநீரின் உருவாக்குவதை துரிதப்படுத்தும் ஆற்றல் உடையது.வழக்கத்திற்கு மாறாக அடிக்கடி சிறுநீர் கழிப்பதினால் உடலில் உள்ள தண்ணீர் சத்தினை இழக்க நேரிடும். செல்கள் எல்லாம் புத்துணர்சியுடன் இருந்தால் மட்டுமே உணவுகளிலிருந்து கிடைக்ககூடிய சத்துக்களை பிரித்து மற்ற பாகங்களுக்கு அனுப்பும். அதோடு சோடா கழிவுகளை பிரிப்பதிலும் சிக்கலை ஏற்படுத்திடும்.

புற்றுநோய் : சோடாவின் வண்ணத்திற்காக பல கெமிக்கல் ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது. குறிப்பாக அதில் இருக்கும் இனிப்புச் சுவை என்பது அமோனியா மற்றும் சல்ஃபைட் இரண்டும் அதிக அழுத்ததிலும் மற்றும் அதிக வெப்பத்தினாலும் சேர்க்கப்பட்டிருக்கும். இதில் ஏற்படும் வேதியல் மாற்றங்களினால் methylimidazole உருவாகிறது எலிகள் மீது நடத்திய சோதனையில் இந்த ரசாயனத்தால் குடல்,கல்லீரல் மற்றும் தைராய்டு புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

எனாமல் : சோடாவில் இருக்கும் அமிலம் பற்களில் இருக்கும் எனாமலை நீக்கும் ஆற்றல் கொண்டது. பி எச் அளவு குறைவாக இருக்கும் போது தான் அமிலத்தன்மை அதிகமாக இருக்கும். நாம் குடிக்கும் தண்ணீர் பி எச் அளவு 7.0 ஆனால் சோடாவில் இருக்கும் பி எச் அளவோ 2.5 க்கும் குறைவாக இருக்கும்

கால்சியம் : சோடாவில் இருக்கும் போஸ்பொரிக் அமிலம் எலும்புகளில் இருக்கும் கால்சியம் சத்தை தளரச் செய்திடும். இதனால் கை கால்களில் வலி மற்றும் மூட்டுத் தேய்மானம் போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். கால்சியம் உணவினை எடுத்துக் கொண்டாலும் அதனை கிரகத்துக் கொள்ள விட்டமின் டி தேவை. தொடர்ந்து சோடா குடித்து வந்தால் சத்துக்கள் பிரித்தறிவதில் சிக்கல்கள் உண்டாகும்.

டயட் சோடா : இன்றைக்கு உடல் எடை குறித்த விழிப்புணர்வு பெரும்பாலானோருக்கு இருக்கிறது. டயட் என்ற பெயரில் பல முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவற்றில் ஒன்று டயட் சோடா டயட் சோடா குடிப்பதனால் எந்த கலோரியும் அதிகரிக்காது உடல் எடை குறையும் என்று நம்பப்பட்டு பலரும் தினமும் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதை விட இது குடிப்பதனால் எந்த ஆபத்தும் இல்லை என்றும் உறுதியாக நம்புகிறார்கள். இது முற்றிலும் தவறான போக்கு. சோடாவில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பது சர்க்கரைச் சுவை தான்.அதோடு இது குடிப்பதால் மட்டுமே உங்களின் உடல் எடை குறையாது.

சோடா தீயை அணைக்கும் : பற்றி எரியும் தீயை அணைக்க சில கெமிக்கல்களை பயன்படுத்துவார்களே அதே கெமிக்கல்கள் சில சோடாக்களிலும் பயன்படுத்தப்படுகிறது. சோடாவில் ப்ரோமினேட்டட் வெஜிடபிள் ஆயில் சேர்க்கப்படுகிறது. குறிப்பாக சிட்ரஸ் பழச்சுவையுடைய சோடா, ஸ்போர்ட்ஸ் டிரிங்கஸ்களில் இந்த கெமிக்கல் சேர்க்கப்படுகிறது. இந்த ப்ரோமினேட்டட் வெஜிடபிள் ஆயிலை பல கெமிக்கல் நிறுவனங்கள் தீ தடுப்பானாக பயன்படுத்துகிறார்கள். நூறுக்கும் மேற்ப்பட்ட நாடுகளில் இதனை உணவாக பயன்படுத்த தடை செய்யப்பட்டிருக்கிறது.

இயற்கை : சோடா குடிப்பது உங்களுடைய உடல் நலனுக்கு மட்டுமல்ல இயற்கைக்கும் பெரும் கேடு விளைவிக்கப்படுகிறது. இரண்டு லிட்டர் சோடா தயாரிக்க 400 லிட்டருக்கும் அதிகமான தண்ணீர் தேவைப்படுகிறது. இது நிரப்பி விற்கப்படும் பாட்டில்கள் பயன்படுத்திய பிறகு குப்பையாக டன் கணக்கில் சேருகிறது.சரியாக மட்கவும் முடியும் ஒவ்வொரு நாளும் டன் கணக்கில் சேருவதால் சுகாதரக் சீர்கேடு ஏற்படுகிறது. அதோடு சோடா தயாரித்தபிறகு வெளியேற்றப்படும் கழிவு நீரினால் பல்வேறு நீர்நிலைகள் பாதிக்கப்படுகிறது. மிக முக்கியமாக நிலத்தடி நீரும் அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டது.

12 1507788640 4

Related posts

ஆரோக்கியப் பலன்கள் அள்ளித் தருவதில் இது, `முந்திரிக்கொட்டை!’

nathan

உங்களுக்கு தெரியுமா அரிசி, பருப்புகளில் வண்டுகள், பூச்சிகள் வராமல் இருக்க என்ன செய்வது?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…நூறு மருத்துவர்களுக்கு சமமான இஞ்சி… எந்த நோய்க்கு எப்படி பயன்படுத்தலாம்?

nathan

புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சிறந்தது பசலைக்கீரை

nathan

பருவ மாற்றங்களுக்கேற்ப உண்ண வேண்டிய உணவுகள்!..

sangika

விரைவில் கர்ப்பமாக உதவும் மிகச்சிறந்த உணவுகள் :

nathan

ஆலிவ் ஆயிலை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் 7 நன்மைகள்!

nathan

எப்போதும் இளமை வேண்டுமா?

nathan

ஜாக்கிரதை…!மறந்தும் கூட காலை உணவாக இதை சாப்பிட்டு விடாதீர்கள்!

nathan