நீங்கள் தாயான உடன், பல ஆனந்தம், கொண்டாட்டங்கள், பரிசுகள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் வருகை என நீங்கள் உற்சாகத்தின் எல்லையில் இருந்து கொண்டிருப்பீர்கள். நீங்கள் கனவில் குழந்தை பிறந்தவுடன் இருக்கும் வாழ்க்கையை பற்றி என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ தெரியாது… ஆனால் குழந்தை வளர்ப்பு என்பது ஒவ்வொரு தாய்க்கும் மிகவும் சிரமமான வேலை தான். நம் உயிரின் ஒரு பாதியல்லவா…. எனவே சிரமம் பாராமல் வளர்த்து ஆளாக்க வேண்டியது நம் கடமை தானே..! பிரசவத்திற்கு பிறகு வாழும் வாழ்க்கை முற்றிலும் வேறுபட்டது. ஆனால் இதை பற்றி யாரும் உங்களிடன் சொல்லமாட்டார்கள். அந்த விஷயங்களை நீங்கள் இந்த பகுதியில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
நீங்கள் இரவு முழுவதும் தூக்கம் இல்லாமலோ அல்லது குறைவாக மட்டுமோ தான் தூங்க முடியும். உங்களது குழந்தையை பார்த்துக்கொள்ள உங்களுக்கு யாராவது உதவி, உங்களை சற்று நேரம் ஆழ்ந்து தூங்க அனுமதித்தால் அவருக்கு நீங்கள் காலம் முழுவதும் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.
தோற்றம்
உங்களுக்கு பிரசவத்திற்கு பிறகும் கூட கர்ப்பமாக உள்ளது போன்ற தோற்றமே இருக்கும். பழைய தோற்றத்தை திரும்ப பெற நீங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். நிச்சயமாக உங்களது பழைய தோற்றத்தை சில தினங்களில் அடைந்துவிடலாம்.
தழும்புகள்
உங்களது வயிற்றை சுற்றி பிங்க் நிறத்தில் தழும்புகள் இருக்கும். சுருங்கங்கள் விழுந்தும் காணப்படும். இது போக இயற்கை வழிமுறைகள் நிறைய இருக்கின்றன. இவற்றை செய்வதே போதுமானது. இதை விட எளிதான வழிமுறை என்னவென்றால் நல்லெண்ணெய் உடன் மஞ்சள் சேர்த்து கர்ப்பமாக இருக்கும் போதே வயிற்றில் மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் இருந்தாலும் கூட எளிதில் மறையும்.
காலணியின் அளவு மாறும்
உங்களது காலணியின் அளவானது, பிரசவத்திற்கு பிறகு சற்று அதிகரித்துவிடும். இதனை நீங்கள் என்ன செய்தாலும் மாற்ற முடியாது.
ஆடைகளின் அளவு
உங்களது ஜீன்ஸ் கண்டிப்பாக பிரசவத்திற்கு பிறகு உங்களுக்கு அளவாக இருக்காது. உங்களது உடல் எடை கூடும். நீங்கள் தாய்ப்பால் கொடுக்க வேண்டியிருப்பதால் அதிகமாக சாப்பிட்டு தான் ஆக வேண்டும். உடல் எடையை அதிகமானால் உடல் எடையை குறைக்க வேண்டும்.
முடி உதிர்வு
உங்களுக்கு முடி உதிர்வு பிரச்சனை ஏற்படும். ஆனால் இந்த பிரச்சனை கண்டிப்பாக சரியாகிவிட கூடியது தான். ஆனால் நீங்கள் உங்களது முடிக்கு போதுமான பராமரிப்பை தர வேண்டியது அவசியம்.
பசி எடுக்கும்
நீங்கள் பால் கொடுக்கும் தாயாக இருந்தால் உங்கள் நிச்சயம் அதிகமாக பசி எடுக்கும். நீங்கள் குழந்தையை பராமரிக்கும் அதே நேரத்தில் நீங்கள் நன்றாக சாப்பிட வேண்டும். வேலையை மட்டுமே செய்து கொண்டிருக்க கூடாது.