31.9 C
Chennai
Monday, May 19, 2025
r5te
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

ஆரஞ்சுப் பழ சருமப் பராமரிப்பிற்கு

ஆரஞ்சுத் தோல் கிருமி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் தொற்றுத் தன்மைகளை கொண்டுள்ளதால் உங்களுடைய எண்ணெய் பசை மற்றும் பருக்கள் நிறைந்த சருமத்திற்கு நல்ல பலன் தரும். சருமத்தை வெண்மையாக்கும் பொருளாகவும் இது பயன்படும். இந்த ஆரஞ்சுத் தோலைக் கொண்டு உங்கள் தினசரி சருமப் பராமரிப்பை எப்படி செய்வது என்பதை நீங்கள் அறிய விரும்பினால் இதோ உங்களுக்காக சில வழிகள்.

r5te1. ஆரஞ்சுத் தோல் மற்றும் பாதாம் ஸ்க்ரப் :

ஆரஞ்சுத் தோலும் பாதாமும் உங்கள் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவது மட்டுமின்றி உங்களுக்கு புத்துணர்வான மிளிரும் சருமத்தையும் தர உதவும். ஒரு ஆரஞ்சுப் பழத்தை உறித்து தோலை வெயிலில் காயவைத்துக் கொண்டு 10 முதல் 20 பாதம் பருப்புகளை உடைத்துப் பொடியாக்கிக் கொள்ளுங்கள். ப்ளெண்டரில் இரண்டையும் போட்டு ரவை போன்ற பக்குவத்தில் அரைத்துக் கொள்ளுங்கள். இதை தினமும் சிறிதளவு பாலுடன் சேர்த்து பூசி வந்தால் அப்பழுக்கற்ற சருமம் பெற முடியும். தேவைப் பட்டால் இந்த கலவையைக் கொண்டு சிறிதளவு தேன் சேர்த்து முகத்தில் மசாஜும் செய்யலாம்.

2. தயிர் மற்றும் ஆரஞ்சுத் தோல்

ஆரஞ்சுத் தோல் மற்றும் தயிர் கலவை ஒரு அற்புதமான சருமப் பராமரிப்பிற்கு உதவும். இது சுருக்கங்களையும் கோடுகளையும் நீக்குவதோடு உங்கள் சருமத்தின் இறந்த செல்களை நீக்கி எக்ஸ்போலியேட் செய்கிறது. ஆரஞ்சுத் தோலைக் கொஞ்சம் எடுத்து காயவைத்து பொடி செய்து கொள்ளவும். பின்னர் இதை ஒரு கப் தயிரில் கலந்து உங்கள் முகத்தில் சுழற்சி முறையில் மசாஜ் செய்யவும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடவும்.

3. ஆரஞ்சுத் தோல் மற்றும் சர்க்கரை ஸ்க்ரப்

இந்த ஸ்க்ரப் உங்கள் சருமத்தை புத்துணர்வுடனும் சுத்தமாகவும் எப்போதும் வைத்திருக்க உதவும். வறண்ட மற்றும் ஈரப்பதமற்ற சருமத்திற்கு இது மிகவும் உதவும். ஆரஞ்சுத் தோலை துருவி அதனுடன் சர்க்கரை சேர்த்து ஒரு பௌலில் எடுத்துக் கொள்ளவும். இதில் சிறிது தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் மற்றும் தேன் ஒரு ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். இந்த ஸ்க்ரப்பை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும்.

4. ஆரஞ்சுத் தோல் – பால் ஃபேஸ் மாஸ்க்

இந்த மாஸ்க் உங்கள் சருமத்தை தூய்மையாகவும், ஈரப்பதத்துடனும் புத்துணர்வுடனும் வைக்க உதவுகிறது. சருமத்தை வெண்மையாக்கவும் இது ஒரு சிறந்த தீர்வாக இருப்பதுடன் ஆரஞ்சுத் தோலில் செய்யக்கூடிய பல்வேறு பராமரிப்பு முறைகளில் சிறந்தது இதுவே. முகத்தில் உள்ள பெரிய பள்ளங்கள் மற்றும் பருக்களை போக்கவும் இது உதவுகிறது. இரண்டு ஸ்பூன் ஆரஞ்சு தோல் பவுடரையும் பால் அல்லது பால் கீரீமையும் கலந்துகொள்ளுங்கள். இதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து உங்கள் முகத்தில் பரவலாக மசாஜ் செய்யவும். இதை 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடவும்.

5. ஆரஞ்சுத் தோல் மற்றும் வேம்பு

ஆரஞ்சுத் தோல் மற்றும் வேம்புக் கலவை பருவை எதிர்த்துப் போராட உதவும். இந்த ஸ்கின் பேக் மூலம் நாசூக்கான, எண்ணெய் பசை மிகுந்த மற்றும் பருக்கள் ஏற்படக்கூடிய சருமத்திற்கு நல்ல பலன் பெற முடியும். ஆரஞ்சு தோல் பவுடர் கொஞ்சம் எடுத்து அதை வேப்ப இலை பவுடருடன் சேர்த்து சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பசை போல் செய்து கொள்ளவும். இதை நன்றாகக் கலந்து முகத்தில் தேய்த்துவர நல்ல பலன்கள் கிடைக்கும்.

Related posts

அடேங்கப்பா! கருப்பு அழகியா நீங்க? இந்த மாதிரி மேக்கப் பண்ணுங்க!

nathan

ஒரே மாதத்தில் பருக்கள், கருவளையங்கள் மற்றும் சுருக்கங்களைப் போக்கும் அற்புத ஃபேஸ் பேக்!

nathan

பெண்கள் சிவப்பழகை பெற

nathan

Super tips.. முகத்தில் அசிங்கமா தோன்றும் கரும்புள்ளிக்கு சூப்பர் தீர்வு..!

nathan

உங்களுக்கு சிறந்த‌ 10 ஆரோக்கியமான முக பேஷியல் குறிப்புகள்

nathan

தேங்காய்ப்பாலை பயன்படுத்தி எப்படி பேஸ்பேக் தயாரிப்பது

nathan

பனிக்காலத்தில் சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க…..

sangika

சூப்பர் டிப்ஸ் உங்க மேல் உதட்டில் இருக்கும் முடிய எப்படி ஈஸியா எடுக்கலன்னு தெரியுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…முகம் கழுவும் போது செய்யக்கூடியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள்!

nathan