அமெரிக்காவில் இதுதொடர்பாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வில், நாள் ஒன்றுக்கு 10 சிகரெட் புகைப்பவர்களுக்கு தாம்பத்திய வாழ்க்கையில் சிக்கல் உருவாகும் என்பதை கண்டறிந்துள்ளனர். இவர்களுக்கு தாம்பத்திய உறவின் போது ஏற்படும் விறைப்புத்தன்மையில் சிக்கல் எழும் என்றும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.
இதற்கு காரணம் புகைப் பிடிக்கும் போது நமது உடலுக்குள் செல்லும் நிக்கோட்டின் உறிஞ்சும் திசுக்களை பாதிப்புக்கு உள்ளாக்குவதுடன் அதனை சுருங்கச் செய்கின்றன. இது சம்மந்தப்பட்டவரின் தாம்பத்திய வாழ்க்கையை பாதிப்புக்கு உள்ளாக்குகின்றது. புகைப் பிடிப்பதைப் போன்று மது அருந்துவதும் பாலியல் சிக்கல்களை உருவாக்கவல்லது.
பல்வேறு உறவு சிக்கலுக்கும், முரண்பாடான நடவடிக்கை ஆகிய பிரச்சனைகளுக்கு மூல காரணமே தாம்பத்திய உறவில் ஏற்படும் அதிருப்திதான் என்று கண்டறியப்பட்டு உள்ளது. இநத சிக்கல்கள் தகவல் தொழில் நுட்பம், அயல் அலுவலக சேவை குறைகளில் பணியாற்றுபவர்களிடையே அதிகம் காணப்படுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதற்கு காரணம் மேற்கத்திய கலாச்சாரத்தின் மீதான மோகம், வாழ்க்கை முறையில் மாற்றம், பரபரப்பான, அழுத்தத்தை ஏற்படுத்துகின்ற வேலை சூழலும்தான்.
உலகமயமாதல், கணினிமயமாதல் ஆகியவற்றின் விளைவும், பெருகி வரும் இணையத்தள கலாச்சாரமும் மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கை முறையையே மாற்றி அமைத்து உள்ளதோடு, மக்களை அதிக அழுத்தத்தையும், பளுவையும் கொண்ட வாழ்க்கைக்கு அழைத்து செல்வதோடு மக்களின் தாம்பத்திய வாழ்க்கையையும் பாதிக்கின்றது.
துரித உணவுக் கலாச்சாரம், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை அதிகம் பயன் படுத்துபவர்களுக்கு தொப்பை உள்ளிட்ட உடலின் பல இடங்களில் உருவாகும் ஊளைச் சதையாலும் ஒருவரின் தாம்பத்திய உறவு பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.
திருமணமான தம்பதிகளில் 15 விழுக்காட்டினரே கருவளர்ச்சி இன்மை சிக்கலுக்கு உள்ளாவதாகவும், இந்த பிரச்சனைக்கு 35 விழுக்காடு பெண்களும், 30 விழுக்காடு ஆண்களும் காரணிகளாக அமைகின்றனர். சில நேரங்களில் கரு வளர்ச்சியின்மைக்கு ஆணும், பெண்ணும் காரணமாக உள்ளனர்.