மருத்துவ குறிப்பு

உங்களுக்கு ஆஸ்துமா தீவிரமாகிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!

ஆஸ்துமா ஒருவரை அமைதியாக கொல்லக்கூடிய ஒரு மோசமான ஆரோக்கிய பிரச்சனை. இப்பிரச்சனை தனக்கு இருப்பதைக் கண்டறிந்தவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் இது மெதுவாக மோசமாகி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். பல ஆண்டுகளாக ஆஸ்துமாவின் தீவிரம் இரவு நேரத்தில் தான் மோசமடைகிறது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தரவுகளின் படி, சுமார் 75% பேர் இரவு நேரத்தில் ஆஸ்துமாவின் தீவிரத்தை அனுபவிப்பதாக தெரிவித்துள்ளனர்.

இப்படிப்பட்ட ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள், அந்த ஆஸ்துமாவைக் குறித்து நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியம். எனவே தமிழ் போல்ட் ஸ்கை ஆஸ்துமா குறித்து ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை உங்களுக்காக கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்து உஷாராக இருங்கள்.

ஆஸ்துமா என்றால் என்ன?

ஆஸ்துமா என்பது ஒரு கடுமையான நிலை. இந்நிலையில் சுவாசப்பாதைகள் வீங்கி சுருக்கமடைந்து, சுவாசிக்கும் செயல்முறையில் இடையூறு ஏற்படுகிறது. மேலும் இந்த நிலையானது சுவாசப் பாதையின் உள்ளே சளி உற்பத்திக்கு வழிவகுக்கும். இந்நிலையைக் கொண்டவர்கள் சுவாசப் பிரச்சனையால் அவதிப்படுவார்கள். அதே நேரம் இது வேறு சில கடுமையான உடல்நல பிரச்சனைகளையும் தூண்டலாம்.

ஆஸ்துமாவை எது தூண்டுகிறது?

இரவு நேரத்தில் ஆஸ்துமா தூண்டப்படுவதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. இந்த காரணிகளில் நடத்தை, சுற்றுச்சூழல், உடற்பயிற்சி, காற்றின் வெப்பநிலை, தோரணை மற்றும் தூங்கும் இடத்தின் சூழல் ஆகியவை அடங்கும். இவை அனைத்துமே ஆஸ்துமாவின் தீவிரத்திற்கு முக்கிய காரணிகளாகும்.

ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாத எச்சரிக்கை அறிகுறிகள்

முன்பே கூறியது போல, ஆஸ்துமா இரவில் அதன் அறிகுறிகளைத் தூண்டலாம். ஒருவரை அமைதியாக கொல்லும் இந்நிலையைக் கட்டுப்படுத்த ஒரே வழி, அதன் அறிகுறிகளைக் கண்டறிந்து சிகிச்சையை வேகமாக தொடங்குவதாகும். கீழே ஆஸ்துமாவின் சில எச்சரிக்கை அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அறிகுறிகளை அனுபவித்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

மூச்சுத் திணறல்

ஆஸ்துமாவின் மிகவும் பொதுவான அறிகுறிகளில் ஒன்று பாதிக்கப்பட்டவர்கள் சுவாசிப்பதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். எப்போதுமே சுவாசிப்பதில் ஒருவர் சிரமத்தை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. சொல்லப்போனால், ஆஸ்துமா நிலை மிகவும் தீவிரமடைந்துள்ளதற்கான முதல் எச்சரிக்கை அறிகுறியாக மூச்சுத் திணறல் இருக்கலாம்.

நாள்பட்ட நெஞ்சு வலி

நள்ளிரவில் திடீரென்று நெஞ்சு வலியை அனுபவித்தால், அதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக ஆஸ்துமா இருந்து நெஞ்சு வலியை சந்தித்தால், அது ஆஸ்துமா தீவிரமடைகிறது என்பதற்கான அறிகுறியாகும். எனவே இந்த அறிகுறியை சாதாரணமாக எடுக்காதீர்கள்.

தூங்குவதில் சிரமம்

ஆஸ்துமா தீவிரமாக இருக்கும் போது இரவு நேரத்தில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறுவதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். எனவே நீங்கள் திடீரென இரவில் தூங்க முடியாமல் கஷ்டப்பட்டால், அதை ஒரு எச்சரிக்கை அறிகுறியாக கருதி, விரைவில் மருத்துவரை அணுகி சிகிச்சைப் பெறுங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button