31.9 C
Chennai
Monday, May 19, 2025
01 1501581062 6hair
சரும பராமரிப்பு

எல்லாவிதமான சரும பிரச்சினைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் அருமையான அழகுக் குறிப்புகள்!!

எப்படி நமக்கு ஏற்படும் சளி, இருமல் போன்றவற்றை வீட்டிலிருந்தே சரி பண்ணுவது போல சில சரும பிரச்சினைகளையும் வீட்டிலிருந்தே சரி செய்யலாம் . சில வகையான சரும பிரச்சினைகள் ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி பொதுவானதாக இருக்கும்.

எனவே இதற்காகத்தான் 100% இயற்கை முறைகளை கொடுத்துள்ளோம். சரும பிரச்சினைக்கு நிறைய தீர்வுகள் இருந்தாலும் இது 100 % இயற்கையானது என்பதால் உங்களுக்கு எந்த வித பக்க விளைவும் ஏற்படாது.

இந்த முறைகளை பயன்படுத்துவதற்கு முன்னாடி உங்கள் சரும பிரச்சினைகளை சரியாக கண்டறிந்து சரியான முறையை பின்பற்றினால் கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும்.
இங்கே 100 % இயற்கையான முறைகள் கொடுக்கப்பட்டுள்ளது . இதனால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது.

எண்ணெய் சருமம்
நமது சருமத்தின் மேல் உள்ள எண்ணெய் சுரப்பிகளால் நமது சருமம் எண்ணெய் பசை கொண்டு காணப்படுகிறது.
செய்முறை :
எண்ணெய் சருமத்திற்கான 100% இயற்கையான முறை பிரஞ்சு பச்சை களிமண். இந்த பிரஞ்சு பச்சை களிமண் பவுடர் வடிவத்தில் வருகிறது. இதனுடன் சிறிது ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்ட் மாதிரி கலக்கி முகத்தில் தினமும் ஒரு தடவை தடவி வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

பாதிப்படைந்த சருமம் :
சுற்றுச்சூழல், மன அழுத்தம், புகைப்பிடித்தல் போன்ற செயல்களால் உங்கள் சருமம் பாதிப்படைகிறது.
எனவே இந்த பாதிப்படைந்த சருமத்தில் தேங்காய் எண்ணெய், டீ ட்ரி ஆயில் மற்றும் லாவண்டர் எண்ணெய் ஆகியவற்றுடன் விட்டமின் ஈ மாத்திரைகள் சேர்த்து தேய்த்தால் பாதிப்படைந்த சருமம் அழகாகும்.

தீப்புண் சருமம்
உங்கள் சருமம் அடுப்பில் சமைக்கும் போது ஏற்படும் கவனக் குறைவு மற்றும் அதிக வெப்பத்தினால் எரிய வாய்ப்புள்ளது. அதே போல் ஐயன் பாக்ஸ் பயன்படுத்தும் போதும் இந்த மாதிரி ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு இந்த இயற்கையான முறை தீர்வளிக்கும்

செய்முறை :
இதற்கு டீ தூள் பேக் உதவியாக இருக்கும். க்ரீன் டீ பேக் என்றால் மிகவும் சிறந்தது. எரிந்த சருமத்தில் டீ தூள் பேக்கில் உள்ள எல்லா ஜூஸையும் பிழிந்து கேஜ் போட்டு கட்டிக் கொள்ளவும். இந்த முறையை தொடர்ந்து செய்து வந்தால் தீப்புண் மற்றும் அதன் தழும்பும் காணாமல் போகும்.

வறண்ட சருமம் :
வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு சோரியாஸிஸ் ஒரு பொதுவான பிரச்சினையாக உள்ளது. இதனால் தோல் வறட்சி, தோலில் அரிப்பு, எரிச்சல் ஏற்படுகின்றன. எனவே இந்த வறண்ட சரும பிரச்சினையை உங்க வீட்டிலிருந்தே சரி செய்யலாம்.

செய்முறை :
100% இயற்கையான முறை ஓட்மீல் பாத். ஓட்மீல் பாத் எடுப்பதற்கு முன்னாடி ஓட்ஸ்யை பவுடராக்கி கொள்ள வேண்டும். இந்த பவுடரை வெதுவெதுப்பான சூட்டில் உள்ள தண்ணீரில் கலந்து கொஞ்சம் நேரம் ரிலாக்ஸ் அல்லது அந்த நீரில் குளித்தால் நல்ல பலன் கிடைக்கும். சூடான தண்ணீரை பயன்படுத்த வேண்டாம். அது வறண்ட சரும பிரச்சினையை மேலும் அதிகரிக்கும்.

கருமையான சருமம் மற்றும் வெள்ளை சருமம்
இந்த பிரச்சனை பொதுவாக ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரிடமுமே காணப்படும் பிரச்சினை ஆகும். கரும் மற்றும் வெள்ளை சருமம் எண்ணெய் பசை உள்ள இடங்களான டி – ஜோன், தாடை மற்றும் பல இடங்களில் ஏற்படுகிறது.

செய்முறை :
இந்த கருமை மற்றும் வெள்ளை சரும பிரச்சினையை சரி செய்ய பேக்கிங் சோடா சிறந்தது. முதலில் பாதிப்படைந்த பகுதியில் தண்ணீரைக் கொண்டு நனைத்து கொள்ள வேண்டும். பிறகு பேக்கிங் சோடாவை எடுத்து அந்த பகுதியில் தடவி நன்றாக தேய்க்க வேண்டும். கருமை மற்றும் வெள்ளை சருமம் மாற்றம் அடைந்த பிறகு பேக்கிங் சோடாவை தேய்க்க வேண்டாம்.

தேவையற்ற முடியை நீக்க :
இந்த தேவையற்ற முடிகள் தோல் மடிக்கும் பகுதிகளான அக்குள், மார்பின் அடிப்பகுதி மற்றும் முகத்தில் வளர்ந்து அழகை கெடுக்கும் விதமாக இருக்கும்.
செய்முறை:
இதை நீக்குவதற்கு பார்லர் சென்று வேக்சிங் செய்யனும் அவசியம் இல்லை. வீட்டிலேயே இயற்கை முறையை பின்பற்றலாம். சர்க்கரை மற்றும் தேனை மைக்ரோவேவ் ஓவனில் வைத்து உருக்கி கொள்ள வேண்டும். முடி வளர்ந்த இடத்தில் இந்த கலவையை தடவி வேக்சிங் ஸ்ட்ரிப் வைத்து உரித்து எடுக்க வேண்டும். முடி வளர்ச்சிக்கு எதிர்திசையில் இந்த ஸ்ட்ரிப்பை உரிக்க வேண்டும் என்பது முக்கிய

சரும சுருக்கம் மற்றும் வயதாகுதல்
நமது வயது ஏற ஏற சருமத்தின் மீட்சித் தன்மையும் குறைய ஆரம்பித்து விடும். இதனால் சரும கோடுகள் மற்றும் சருமம் வயதாகுதல் போன்ற பிரச்சினைகளும் வருகின்றன.

செய்முறை :
முட்டை சருமம் வயதாகுதவதை தடுக்கும் 100% இயற்கை பொருளாகும். முட்டையின் வெள்ளை கருவை ஒரு பெளலில் எடுத்து கலக்கியை கொண்டு அடித்து பேஸ்ட்டாக்கி முகத்தில் தடவ வேண்டும். பிறகு நன்றாக காய்ந்ததும் நீரில் கழுவவும். முட்டையை ரெம்ப கடினமாக அடிக்க வேண்டாம்.

மருக்கள் மற்றும் பருக்கள்
ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சினை முகப்பரு மற்றும் மருக்கள் ஆகும். இது அவர்களின் முகழகையே கெடுத்து விடுகின்றன.
இது எதனால் வருகிறது என்று பார்த்தால் உடல் சூட்டால் வருகிறது. எனவே குளிர்ச்சியான கற்றாழை ஜெல்லை எடுத்து தினமும் 3 தடவை பருக்களின் மேல் வைத்தால் போதும் உங்கள் பருக்கள் காணாமல் போகும். செயற்கை கற்றாழை ஜெல் நல்ல பலனை அளிக்காது. எனவே இயற்கை கற்றாழை ஜெல்லை பயன்படுத்துங்கள்.01 1501581062 6hair

Related posts

தினமும் 10 நிமிடம் செலவழித்தாலே போதும், சருமமானது அழகாகவும், ஆரோக்கியமாகவும் காணப்படும்……

sangika

பெண்களுக்கு உண்டாகும் அழகு சார்ந்த பிரச்சனைகள் எவை?

nathan

சருமம் காப்பது சிரமம் அல்ல!

nathan

பதினைந்தே நாட்களில் வெள்ளையாக வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்!!!

nathan

நச்சுன்னு 4 டிப்ஸ்..! வறண்ட சருமத்திற்கு இப்படியும் செய்யலாமா?

nathan

அக்குள் மற்றும் தொடை நடுவில் வளரும் முடிகளை அகற்ற கூடாது ஏன் தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

சரும ஆரோக்கியத்தைப் பாதிக்கும் அன்றாட விஷயங்கள்!!!

nathan

பளபளப்பான சருமம் பெற…

nathan

பப்பாளியில் இருக்கும் அழகு குறிப்பு…

nathan