1502107987 7203
சிற்றுண்டி வகைகள்

மீல் மேக்கர் பக்கோடா செய்ய…!

தேவையான பொருட்கள்:

மீல் மேக்கர் – 20 உருண்டைகள்
கடலைப் பருப்பு – ஒரு கப்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
பச்சை மிளகாய் – 2
தேங்காய் துருவல் – ஒரு மேஜைக்கரண்டி
மிளகாய்த் தூள் – ஒரு தேக்கரண்டி
பிரெட் ஸ்லைஸ் – 3
எலுமிச்சை சாறு – ஒரு மேஜைக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
கொத்துமல்லித் தழை – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

மீல் மேக்கரை கொதி நீரில் போட்டு, ஐந்து நிமிடம் கழித்து அதை பிழிந்து, பின் பச்சை தண்ணீரில் அலசி, மிக்சியில் அடித்து உதிர்க்கவும்.

கடலை பருப்பை ஒரு விசில் வரும் வரை வேக விடவும். வாணலியில் எண்ணெய் விட்டு, வெங்காயம், தேங்காய் துருவல், இஞ்சி, பூண்டு விழுதை லேசாக வதக்கவும்.

பிறகு, மீல் மேக்கர், கடலைப் பருப்பு, உப்பு, பிரெட் ஸ்லைஸ், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறி, மிக்சியில் அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அரைத்த கலவையை கிள்ளிப் போட சூடான, சுவையான பக்கோடா தயார்.1502107987 7203

Related posts

பீச் மெல்பா

nathan

சத்து நிறைந்த சாமை மிளகுப் பொங்கல்

nathan

சுவையான சுண்டல் கிரேவி

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான இட்லி டிக்கா

nathan

சுவையான சத்தான வேர்க்கடலை தயிர் பச்சடி

nathan

கேழ்வரகுப் பணியாரம்-பாரம்பர்ய உணவுப் பயணம்!

nathan

மூங்தால் தஹி வடா

nathan

சுவையான கார மிக்ச‌ர் அவலை வைத்து செய்வது எப்படி?

nathan

சுவையான ஸ்நாக்ஸ் கோதுமை மாவு தட்டை

nathan