31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

வயிறு கோளாறுகளை குணமாக்கும் பூண்டு துவையல்

வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் குணமாக்கும் சக்தி பூண்டிற்கு உண்டு. இன்று பூண்டை வைத்து துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

வயிறு கோளாறுகளை குணமாக்கும் பூண்டு துவையல்
தேவையான பொருட்கள் :

உரித்த பூண்டு – 20 பல்,
காய்ந்த மிளகாய் – 2,
புளி – சிறிதளவு,
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி,
கடுகு, உளுந்தம்பருப்பு, பெருங்காயம் – தலா கால் டீஸ்பூன்,
உப்பு, நல்லெண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை :

* வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு வதக்கி ஆற வைக்கவும்.

* அனைத்தும் நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

* மற்றொரு வாணலியில் கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து அரைத்த துவையலில் தாளித்தவற்றை சேர்த்து ஒரு கிளறு கிளறி பரிமாறவும்.

* சூப்பரான பூண்டு துவையல் ரெடி.

Related posts

தினை இடியாப்பம்

nathan

பூரி ஸ்வீட் ரோல்ஸ்

nathan

பிரெட் வெஜிடபிள் புலாவ்

nathan

மரவள்ளிக்கிழங்கு கொழுக்கட்டை

nathan

இலந்தை பழ வடாகம்

nathan

சுவையான குடைமிளகாய் சாண்ட்விச்

nathan

கேழ்வரகு உளுந்து தோசை

nathan

சத்து நிறைந்த கொள்ளு கார அடை

nathan

கம்பு இட்லி

nathan