சிற்றுண்டி வகைகள்

சூப்பரான முட்டை கொத்து பரோட்டா

ஹோட்டலில் தான் கொத்து பரோட்டா வாங்கி சாப்பிட முடியும் என்று நினைக்க வேண்டும். வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.

சூப்பரான முட்டை கொத்து பரோட்டா
தேவையான பொருட்கள் :

புரோட்டா – 2
முட்டை – 1
வெங்காயம் – 2
தக்காளி – 1
பச்சைமிளகாய் – 1
உப்பு – தேவைக்கு
என்ணெய் – 4 ஸ்பூன்
கெட்டிச்சால்னா – 1 1/2 குழிக்கரண்டி
பூண்டு – 8 பல்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :

* புரோட்டாவை கையால் பிய்த்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

* கொத்தமல்லி, வெங்காயம், தக்காளி, பூண்டு, மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்,

* கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து தாளித்த பின் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

* அனைத்தும் நன்றாக வதங்கியதும் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறவேண்டும்.

* முட்டை நன்றாக வதங்கியதும அதில் சால்னா அல்லது கிரேவி சேர்த்து ஒருசேர கிளறவும். தேவைக்கு உப்பும் சேர்த்துக்கொள்ளவும்.

* சால்னா ஒருசேர சுருண்டதும் பிய்த்து வைத்துள்ள புரோட்டாவை சேர்த்து எல்லா இடங்களிலும் மசாலா சேரும் படி நன்றாக பிரட்டவும்.

* அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் நன்றாக கிளறவும்.

* கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

* சுவையான சூப்பரான முட்டை கொத்து பரோட்டா ரெடி.

* இதில் சிக்கன், மட்டன் சேர்த்தும் செய்யலாம்.

Related posts

பிரட் ட்ரை குலாப் ஜாமூன்: தீபாவளி ஸ்பெஷல்!

nathan

பொங்கல் ஸ்பெஷல்: கல்கண்டு பொங்கல்

nathan

முட்டை இட்லி உப்புமா

nathan

சில்லி -  கார்லிக் ஆனியன் லோட்டஸ்

nathan

சுவைக்க சுவைக்க சுவையான முள்ளங்கி சப்பாத்தி

nathan

கருப்பட்டி ஆப்பம்

nathan

சத்துக்கள் மிகுந்த காய்கறி வடை!!

nathan

சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ்

nathan

பொரி உருண்டை

nathan