மருத்துவ குறிப்பு

இந்தியர்கள் துளசி செடியை சுற்றி வருவதற்கான அறிவியல் காரணங்கள் என்னவென்று தெரியுமா?

நாம் இந்தியாவில் பாரம்பரியமாக செய்து வரும் சில தெய்வ சடங்குகள் அதிக நன்மைகளை தருவதாக இருக்கின்றன. இவை நமது ஒழுக்கத்தை மேம்படுத்துவதோடு மட்டுமில்லாமல், நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவியாக இருக்கின்றன.
11 29 1501306225
இதில் நாம் காலம் காலமாக துளசி செடியை சுற்றி வந்து வணங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். அதற்கு என்ன காரணம் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த பகுதியில் நாம் துளசி செடியை ஏன் சுற்றி வருகிறோம் என்பதற்கான காரணங்களையும், அதன் பின் உள்ள அறிவியல் உண்மைகளையும் பற்றி தெரிந்து கொள்வோம்.
29 1501305791 1
மருத்துவ குணம்:
செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. இது கோவில் பூசைகளில்அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. அதுவும் பெருமாள் கோயில்களில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் கோயிற் பூந்தோட்டங்களில் வழக்கமாகக் காணப்படுகிறது.
29 1501305801 2
வீடுகளில் துளசி செடி
பலரது வீடுகளில் துளசி செடி வளர்க்கப்படுகிறது. துளசி செடிக்கு விளக்கேற்றி, மஞ்சள், குங்குமம் வைத்து பூஜை செய்யும் வழக்கம் உள்ளது. வீடுகள் மற்றும் கோவில்களின் முற்றங்களில் துளசி செடி வளர்க்கப்படுகிறது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா என கேட்கீறீர்களா? ஆம் துளசி செடியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.
29 1501305817 3
சக்தி வாய்ந்தது
தாவர இனங்களில் துளசி மிகவும் மருத்துவ சக்தி வாய்ந்தது. பொதுவாக தாவரங்கள் காற்றில் உள்ள கார்பன்டை ஆக்சைடை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடும். இதில் துளசிச் செடி மற்ற தாவரங்களை விட மிக அதிகமாக, ஆக்ஸிஜனை வெளியிடும் தன்மை கொண்டது. சுற்றுச்சூழலில் உள்ள காற்று மண்டலத்தையே, சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.
29 1501305834 6
அதிகாலையில் சுற்றி வருதல்
இந்துக்கள் அதிகாலையில் துளசி செடியை சுற்றி வந்து வழிபடும் முறையை வைத்துள்ளனர். அதிகாலை மூன்று மணி முதல், ஐந்து மணி வரை பிரம்ம முகூர்த்தம் என்று சொல்வார்கள். இந்த வேளையில் தான், இயற்கையின் அத்தனை அம்சங்களும் மிகவும் புதிதாகச் சுத்திகரிக்கப்பட்டதைப் போல் இருக்கும்.
29 1501305834 6 1
ஓசோன் அதிகமாக இருக்கும் நேரம்
இந்த அதிகாலை நேரத்தை தான் ஓசோன் அதிகமிருக்கும் நேரம் என அறிவியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இயற்கையாகவே, காற்றில் ஆக்ஸிஜன் அதிகமாக இருக்கும் நேரமான அதிகாலை வேளையில், துளசிச் செடியைச் சுற்றி வந்தால் பரிசுத்தமான ஆக்ஸிஜனை சுவாசிக்கலாம் என்பது இதன் சாராம்சம்.
29 1501305845 7
துளசி இல்லா மருத்துவமா?
மருத்துவத்தில் துளசிக்கு மிக முக்கிய இடம் உண்டு. துளசி இல்லாத ஆயுர்வேத் மற்றும் சித்த மருத்துவமே கிடையாது. குழந்தைகளின் சளி, இருமல் பிரச்னைகளுக்கு, துளசி போல் சிறந்த மருந்து கிடையாது. துளசி இலைகளை நசுக்கி பிழிந்து, இஞ்சிச்சாறு, தேனுடன் கலந்து கொடுத்தால், நெஞ்சு கபம் காணாமல் போய் விடும்.
29 1501305855 8
சம்பிரதாயம்
பல மருத்துவ குணங்களை கொண்ட அற்புதச் செடியின் பயங்களை மக்கள் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு வாழிபாட்டு சம்பிரதாயம் கடைபிடிக்கப்படுகிறது.
29 1501305867 9
எந்த திசையில் வைக்கணும்?
துளசியை கிழக்கு திசையில், தரைமட்டத்தில் வைத்தால், பெண்களின் ஆரோக்கியம் நன்கு அமையும். வடக்குப் பக்கம் தாழ்வாக இருந்து, அங்கே துளசி மாடத்தை வைத்தாலும் நற்பலனே. துளசி மாடம் வீட்டு வாசலுக்குக் குத்தலாக அமையக்கூடாது.
29 1501305877 10
ஆயுள் நீடிக்கும்
ஆண்டு முழுவதும் பசுமையாக இருக்கும் மரங்களை வைத்து, வீட்டினுள் வளர்த்தால் ஆயுள் நீடிக்கும். இலை உதிர்க்கும் மரங்கள் ஓரளவுதான் நற்பலனை கொடுக்கும். சில மாதங்கள் மட்டுமே வாழக்கூடிய மரங்களை வளர்க்காமல் இருப்பது நல்லது. கூர்மையான ஊசியிலை கொண்ட காட்டு மரங்களை, வீட்டைச் சுற்றிலும் வளர்க்கக்கூடாது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button