மருத்துவ குறிப்பு

உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருக்கா?அப்ப இத படிங்க!

ஒவ்வொருவரும் தங்களது வாழ்நாளில் ஒருமுறையாவது மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுவோம். மலச்சிக்கல் ஏற்படுவதற்கு உண்ணும் உணவுகளும், பழக்கவழக்கங்களும் தான் காரணம். ஒருவர் உடலுக்கு உழைப்பு ஏதும் கொடுக்காமல் உண்பது, உட்கார்ந்து வேலை செய்வது என்று இருந்தால், உணவுகள் சரியாக செரிமானமாகாமல், நாளடைவில் அது மலச்சிக்கலை உண்டாக்கும்.

அதிலும் ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகள் சூழ்ந்திருக்கும் தற்போதைய காலத்தில், ஒவ்வொருவரும் மலச்சிக்கலால் அன்றாடம் அவஸ்தைப்பட நேரிடுகிறது. இந்த மலச்சிக்கல் பிரச்சனையை ஒருவர் ஆரம்பத்திலேயே கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால், பின் மூல நோய் வரக்கூடும். எனவே இக்கட்டுரையில் மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வளிக்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மலச்சிக்கலுக்கான அறிகுறிகள் * மிகவும் இறுக்கமான மலம் * வயிறு பாரமாக இருப்பது போன்ற உணர்வு * பசியின்மை * சில நேரங்களில் வயிற்றுப் பகுதியில் லேசான வலியை அனுபவிக்கக்கூடும்.

உலர் திராட்சை உலர் திராட்சை மலச்சிக்கல் பிரச்சனைக்கு நல்ல தீர்வளிக்கும். அதற்கு சிறிது உலர் திராட்சையை இரவில் தூங்கும் முன் சுடுநீரில் ஊற வைக்க வேண்டும். பின் மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் உலர் திராட்சை சாப்பிடுங்கள். மறக்காமல் நீரையும் குடியுங்கள். இதனால் அவற்றில் உள்ள நார்ச்சத்து குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும்.

பால் மற்றும் எலுமிச்சை சாறு மலச்சிக்கல் தீவிரமான நிலையில் இருப்பவர்கள், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சூடான பாலில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடியுங்கள். முக்கியமாக அதில் சுவைக்காக தேன் கலந்து கொள்ளுங்கள். இப்படி குடிக்கும் போது அது தீவிர மலச்சிக்கலால் ஏற்படும் மூல நோயில் இருந்தும் விடுவிக்கும்.

சுடுநீர் மற்றும் உப்பு காலையில் எழுந்ததும் 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு சேர்த்து கலந்து குடியுங்கள். பின் 15 நிமிடம் கழித்து காலை உணவை உட்கொள்ளுங்கள். இப்படி செய்யும் போது குடலியக்கம் சிறப்பாக இருப்பதோடு, செரிமான மண்டலமும் ஆரோக்கியமாக செயல்பட்டு, மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும்.

பால் மற்றும் பேரிச்சம் பழம் மலச்சிக்கல் தொல்லை தாங்க முடியவில்லையா? அப்படியானால் இரவு உணவு உட்கொண்ட பின் பேரிச்சம் பழத்தை சூடான பாலில் சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின் தூங்குவதற்கு முன் பேரிச்சம் பழத்துடன் பாலைக் குடியுங்கள். இப்படி செய்யும் போது, பேரிச்சம் பழத்தில் உள்ள நார்ச்சத்து குடலியக்கத்தை சீராகி, மலத்தை எளிதில் வெளியேற்ற உதவும்.

கற்றாழை சிறிது கற்றாழையை நன்கு காய வைத்து, பொடி செய்து கொள்ளுங்கள். பின் ஒரு டம்ளர் நீரில் 1 சிட்டிகை கற்றாழை பொடி மற்றும் 1 சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து கொள்ளுங்கள். இப்படி ஒரு தொடர்ந்து மூன்று முதல் நான்கு நாட்கள் குடித்து வர, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

அமரந்தஸ் அமரந்தஸ் கீரையின் இலைகளைக் கொண்டு ஜூஸ் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் 30-40 மிலி ஜூஸை எடுத்து, அத்துடன் சிறிது வெல்லம் சேர்த்து கலந்து, இரவில் தூங்கும் குடித்துவிட்டு தூங்குங்கள். இப்படி தொடர்ந்து 3 நாட்கள் குடித்து வர, மலச்சிக்கல் விரைவில் சரியாகும்.

விளக்கெண்ணெய் 1-2 டீஸ்பூன் விளக்கெண்ணெயை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் கலந்து, இரவில் படுக்கும் முன் தூங்க வேண்டும். இப்படி தொடர்ந்து 2-3 நாட்கள் இரவில் குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். இல்லாவிட்டால் விளக்கெண்ணெயை உள்ளங்கையில் சிறிது விட்டு அப்படியே சாப்பிட்டு, பின் ஒரு டம்ளர் சுடுநீர் குடியுங்கள். இதனாலும் நல்ல பலன் கிடைக்கும்.

சின்ன வெங்காயம் சின்ன வெங்காயத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. இத்தகைய சின்ன வெங்காயத்தை எண்ணெய் விட்டு வறுத்து, ஒரு கையளவு சாதத்துடன் சேர்த்து சாப்பிட, மலச்சிக்கல் நீங்கி, வயிறு சுத்தமாகும். இது மிகவும் எளிய முறை, முயற்சித்து தான் பாருங்களேன்.

நெய் ஒரு டீஸ்பூன் நெய்யை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலுடன் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் குடித்து வாருங்கள். இப்படி ஒரு 2 நாட்கள் பின்பற்றினாலே, மலச்சிக்கலில் இருந்து விடுபட்டிருப்பதை நன்கு காணலாம்.

பப்பாளி பப்பாளி மலச்சிக்கலை சரிசெய்வதில் மிகச்சிறந்தது. அதற்கு மலச்சிக்கல் இருப்பவர்கள், தினமும் பப்பாளியை வெறும் வயிற்றில் அதிகாலையில் சாப்பிட்டு வர, அது குடலியக்கத்தை சீராக்குவதோடு, செரிமானத்தை சீராக்கி, மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும்.

எலுமிச்சை ஜூஸ் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினைக் கலந்து குடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கல் நீங்குவதோடு, உடல் மற்றும் மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். மேலும் எலுமிச்சை ஜூஸ் செரிமான பிரச்சனைகள் இருந்தால், அதையும் சரிசெய்யும்.

தக்காளி, பீட்ரூட் பழங்கள் மற்றும் காய்கறிகளை அன்றாட உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக தக்காளி, பீட்ரூட் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதன் மூலம், அதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலில் இருந்து விரைவில் விடுவிக்கும். எனவே இந்த காய்கறிகளை மலச்சிக்கலின் போது அதிகம் சாப்பிடுங்கள்

சாலட் வெள்ளரிக்காய், கேரட், பூண்டு, சோயா சாஸ், வினிகர் போன்றவற்றைப் பயன்படுத்தி சாலட் போன்று தயாரித்து, தினமும் ஒருமுறை அல்லது வாரத்திற்கு 2 முறை உட்கொள்வதன் மூலம், குடலியக்கம் ஆரோக்கியமாகி, மலச்சிக்கல் பிரச்சனையில இருந்து விரைவில் விடுவிக்கும்.

சுடுநீர் உங்களுக்கு மலச்சிக்கல் மோசமான நிலையில் உள்ளதா? அப்படியானால் குளிர்ச்சியான நீரை நாள் முழுவதும் குடிப்பதைத் தவிர்த்து, சுடுநீரை நாள் முழுவதும் குடிக்க பழகிக் கொள்ளுங்கள். இதனால் மலச்சிக்கலில் இருந்து விரைவில் விடுபடலாம்.

செம்பருத்தி இலைகள் மருத்துவ குணம் நிறைந்த செம்பருத்தியின் இலைகளைக் கொண்டு மலச்சிக்கலுக்கு தீர்வு காணலாம். அதற்கு செம்பருத்தி இவைகளை உலர வைத்து அரைத்து பொடி செய்து நீரில் கலந்து குடித்து வாருங்கள். இதனால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

எள்ளு எள்ளு விதைகளும் மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வளிக்கும். அதற்கு எள்ளு விதைகளை அரைத்து பொடி செய்து, பனைவெல்லத்துடன் சேர்த்து கலந்து, தினமும் 4 டேபிள் ஸ்பூன் அளவில் சாப்பிட மலச்சிக்கல் பிரச்சனை காணாமல் போகும்.

ஆளி விதை ஆளி விதைகள் மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும். அதற்கு ஆளி விதைகளை வறுத்து பொடியாக்கி, உண்ணும் உணவின் மீது தூவி சாப்பிடுங்கள். இதனால் அவற்றில் உள்ள சத்துக்கள் குடலியக்கத்தை சீராக்குவதோடு, மலச்சிக்கவ்ல் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.

தர்பூசணி தர்பூசணியின் விதைகளை கொதிக்கும் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அந்நீரை தினமு குடித்து வருவதன் மூலம், மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம். வேண்டுமானால் அடுத்த முறை தர்பூசணி வாங்கினால் அதன் விதைளை தனியாக சேகரித்து, மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள்.

ஆலிவ் ஆயில் மற்றும் எலுமிச்சை 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றில் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, காலையில் உணவு உண்பதற்கு முன் பருக வேண்டும். ஒருவேளை மலச்சிக்கல் தவிரமாக இருந்தால், காலை மற்றும் இரவு உணவு உண்பதற்கு முன் குடியுங்கள். இதனால் மலச்சிக்கல் நீங்கி, குடலும் சுத்தமாகும்.

1 cons 1516877041

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button