நாம் இந்த பூமியில் பிறந்தது முதல் இறக்கும் வரை பல விஷயங்களை வாழ்க்கையில் சந்திக்கிறோம். நம்முடன் கடைசி வரை எதுவுமே உடன் வர போவதில்லை என்றாலும். நாம் இறந்த பிறகும் கூட நமது பேரும் புகழும் நிலைத்திருக்கும். அந்த பெயரையும் புகழையும் காப்பாற்றிக்கொள்ள நாம் நினைக்கிறோம், ஆனால் எந்த முயற்சியும் செய்வதில்லை. மாறாக பணம், காசு என்று அலைந்து கொண்டிருக்கிறோம். நல்ல மனிதனாக வாழந்து விட்டு போக வேண்டும் என்றே நாம் யாரும் நினைப்பதில்லை.
பணம் இருக்கிறது!
உங்களுக்கு ஒரு ஏழை நண்பர் இருந்தால் அவரிடம் சென்று என் அப்பா எனக்கு இந்த விலை உயர்ந்த பொருளை பரிசாக கொடுத்தார் என கூறுவது சிலரது பண்பாகும். ஆனால் உங்களது ஏழை நண்பன் தன் அப்பாவால் இது முடியவில்லையே என்று மனம் வருந்துவது பற்றி என்னைக்காவது யோசித்திருக்கிறீர்களா?
அறிவுரை!
மற்றவர்களுக்கு நாம் அதிகமாக அறிவுரைகளை கூறிக்கொண்டே இருப்போம், ஆனால் நாம் அதை எல்லாம் கடைபிடிக்கிறோமா என்றால் நிச்சயம் இல்லை. நம்மை திருத்திக்கொண்டு மற்றவர்களை திருத்த வேண்டும் என்று நினைப்பது தானே சரியானது..!
பின்னால் பேசுவது
ஒருவரை பற்றி பின்னால் பேசுவது அவர்களுக்கு எத்தனை வலியை கொடுக்கும் என்பதைப் பற்றி நாம் யாரும் நினைத்துக்கூட பார்ப்பதில்லை. ஒரு சில நிமிட மகிழ்ச்சிக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் எதை எதையோ முதுகுகிற்கு பின்னால் பேசிவிடுகிறோம். அதனால் உண்டாகும் பின்விளைவுகளை பற்றி நாம் கவலைப்படுவதே இல்லை.
உதவி செய்யாமல் இருப்பது
நமது கண்ணிற்கு முன்னால் எத்தனையோ ஏழைக்குழந்தைகள் பசியும் பட்டினியுமாக இருந்தாலும், அன்னதானம் தருவது, விசேஷ உணவுகள் போன்றவற்றை வீட்டில் சமைத்து வைத்துவிட்டு வருபவர்களுக்கு கொடுப்பதை விட, ஒருவேளை உணவுக்கே இல்லாத குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் உங்களுக்கு கடவுளின் ஆசிர்வாதமும் கிடைக்கும். மன திருப்தியும் கிடைக்கும்.
பிறர் பொருளுக்கு ஆசைப்படுவது
நமக்கு இருப்பதை பெரிதாக நினைத்து வாழாமல், பிறரது பொருளுக்கு ஆசைப்படுவது மிகப்பெரிய குற்றமாகும். உங்களது பொருளை மற்றவர் பறிக்க நினைத்தால் உங்களுக்கு ஏற்படும் மன வருத்தம் தான் மற்றவர்களுக்கும் ஏற்படும் என்பதை நினைத்துப்பார்த்தால் நீங்கள் இவ்வாறு நடந்து கொள்ளமாட்டீர்கள்.
Related posts
Click to comment