28.4 C
Chennai
Wednesday, Nov 13, 2024
18 1495080340 1 thyroid problems 300x225
ஆரோக்கிய உணவு

இதை காலையிலும், மாலையிலும் சாப்பிட்டால், தைராய்டு பிரச்சனை முற்றிலும் குணமாகும் தெரியுமா?

இங்கு தைராய்டு பிரச்சனையை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
கழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போதைய மோசமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையால், ஏராளமானோருக்கு தைராய்டு பிரச்சனை ஏற்படுகிறது.
பொதுவாக தைராய்டு சுரப்பியில் சுரக்கப்படும் ஹார்மோன்கள் உடலின் மெட்டபாலிசம் மற்றும் வளர்ச்சியில் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த தைராய்டு சுரப்பியில் இருவகையான பிரச்சனைகள் வரக்கூடும்.
அவை ஹைப்பர் தைராய்டு மற்றும் ஹைப்போ தைராய்டு ஆகும். இங்கு இந்த தைராய்டு பிரச்சனையை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

ஹைப்பர் தைராய்டு:
ஹைப்பர் தைராய்டு என்பது தைராய்டு சுரப்பியில் அளவுக்கு அதிகமாக தைராய்டு ஹார்மோன்கள் சுரக்கும் நிலையாகும்.

அறிகுறிகள்:
* அதிகமாக வியர்ப்பது
* தும்மல்
* எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருப்பது
* நினைவாற்றல் பிரச்சனை
* மோசமான குடலியக்கம்
* படபடப்பு
* மன அழுத்தம்
* எடை குறைவு
* மாதவிடாய் பிரச்சனைகள்
* அதிகப்படியான சோர்வு

ஹைப்போ தைராய்டு:
ஹைப்போ தைராய்டு என்பது தைராய்டு சுரப்பியின் மோசமான செயல்பாட்டால், போதிய அளவு தைராய்டு ஹார்மோன்கள் சுரக்கப்படாத நிலையாகும்.

அறிகுறிகள்:
* நகங்களில் வெடிப்பு
* மலச்சிக்கல்
* உடல் பருமன்
* தசைப் பிடிப்புகள்
* மோசமான மாதவிடாய் கால இரத்தப் போக்கு
* கழுத்தின் முன் பகுதியில் வீக்கம்
* மிகுதியான களைப்பு
* நினைவாற்றல் பிரச்சனை
* வறட்சியான சருமம் மற்றும் தலைமுடி
* மன இறுக்கம்
தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக்க ஓர் அற்புத நாட்டு மருந்து உள்ளது. அதை ஒருவர் உட்கொண்டு வந்தால், தைராய்டு பிரச்சனையை விரைவில் சரிசெய்யலாம்.

தேவையான பொருட்கள்:
பச்சை வால்நட்ஸ் – 40
தேன் – 1 கிலோ

செய்முறை:
வால்நட்ஸ் காயை துண்டுகளாக்கி கண்ணாடி பாட்டிலில் போட்டு, அதில் தேன் ஊற்றி, 40 நாட்கள் ஊற வைக்க வேண்டும். முக்கியமாக இந்த பாட்டிலை பகலில் சூரியக்கதிர்கள் படும் இடத்தில் வைத்து, அவ்வப்போது பாட்டிலைக் குலுக்க வேண்டும். 40 நாட்கள் கழித்து, அதில் உள்ள வால்நட்ஸ் காயை நீக்கிவிட வேண்டும்.

உட்கொள்ளும் முறை:
இந்த தேனை தினமும் காலை மற்றும் மாலையில் 2 ஸ்பூன் சாப்பிட்டு வர, தைராய்டு பிரச்சனை விரைவில் குணமாகும். இப்போது இதன் இதர நன்மைகளைக் காண்போம்.

நன்மை #1
இதில் வைட்டமின் சி, அயோடின் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால், இரத்த சோகை இருப்பவர்கள் தினமும் உட்கொண்டு வந்தால், சீக்கிரம் இரத்த சோகை நீங்கும்.

நன்மை #2
பச்சை வால்நட்ஸை தேனில் ஊற வைத்து, அந்த தேனை தினமும் சாப்பிடும் போது கல்லீரல், வயிறு மற்றும் இரத்தம் சுத்தமாகும்.

நன்மை #3
அடிக்கடி நோய்வாய்ப்படுபவர்கள், இதை சாப்பிட்டால் பலவீனமாக இருக்கும் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்.

நன்மை #4
மாதவிடாய் காலத்தில் அதிக பிரச்சனையை சந்திக்கும் பெண்கள், பச்சை வால்நட்ஸ் ஊற வைத்த தேனை சாப்பிட்டால், பிரச்சனைகள் விரைவில் குணமாகும்.

நன்மை #5
முக்கியமாக இந்த தேன் சுவாச பாதை மற்றும் மூச்சுக் குழாயில் உள்ள பிரச்சனைகளைப் போக்கி, அவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.18 1495080340 1 thyroid problems 300x225

Related posts

உடல் எடையை குறைக்க உதவும் சோயா பீன்ஸ் கூட்டு

nathan

உங்களுக்கு தெரியுமா பூண்டை இப்படி சாப்பிட்டால் சர்க்கரை நோய் உங்களை நெருங்கவே நெருங்காது!!

nathan

தைராய்டுக்கும் முட்டைகோஸுக்கும் என்ன சம்பந்தம்?

nathan

பஜ்ஜி, போண்டா, கெ.எப்.சி, சிக்கன் 65 அதிகமா சாப்பிட பிடிக்குமா? அப்ப நீங்க இதப் படிச்சே ஆகணும்!

nathan

வயிற்று உபாதைகளுக்கு உகந்த வெந்தயக் குழம்பு

nathan

நாக்கு ஊறும் சுவையான மட்டன் குழம்பு…

nathan

தேங்காய் எண்ணெயில் இவ்வளவு நன்மைகளா? தெரிந்துகொள்வோமா!.

nathan

தினமும் முட்டைகோஸ் சாப்பிடலாமா? யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?தெரிந்துகொள்வோமா?

nathan

உருளைக்கிழங்கின் மருத்துவ குணங்கள்

nathan