26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
dLrNpji
ஆரோக்கிய உணவு

பிராய்லர் சிக்கனும் அதனால் ஏற்றப்படும்கொடிய சிக்கலும்!!

ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவம்தான் எனும் நடைமுறை ஒரு பண்பாட்டுச் செயல்பாடாகவே மாறிவிட்டது தமிழகத்தில். அதுவும், ஞாயிற்றுக்கிழமைகளில் சிக்கன்தான் பெரும்பாலானவர்களின் தேர்வு. சிக்கன் என்றாலே பிராய்லர் சிக்கன்தான் என்பதைச் சொல்ல வேண்டியது இல்லை. ஆனால், மிக மோசமான நவீன உணவுகள் பட்டியலில் சிக்கனுக்குத்தான் முக்கியமான இடம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

பிராய்லர் சிக்கன் என்றவுடனேயே தஞ்சையில் இருக்கும் `மொஹல் பிரியாணி’யை நினைவு கூராமல் இருக்க முடியாது. பிராய்லர் சிக்கன் பற்றி தெரிந்துகொள்ள விரும்பும் தஞ்சைவாசிகள் மொஹல் பிரியாணியில் போய் சிக்கன் பிரியாணி கேட்டால் போதும். பிராய்லர் சிக்கன் பாதிப்பு பற்றி கடை உரிமையாளரும், இயற்கை வாழ்வியல் ஆய்வாளருமான முனாஃப் தரும் விளக்கத்தில் சிக்கன் சாப்பிடுவதையே நிறுத்திவிடுவார். எல்லா கடைகளையும்போல சிக்கன், மட்டன் என உணவு தயாரித்துக்கொண்டிருந்த முனாஃப், பிராய்லர் சிக்கனின் தீங்குகளைப் பற்றி கேள்விப்பட்டவுடன் தன் உணவகத்தில் சிக்கன் உணவுகளை நிறுத்திவிட்டார். “வியாபாரம் குறைந்தாலும் பரவாயில்லை. கொடுக்கும் உணவு தீமைசெய்வது தெரிந்த பிறகு எப்படி விற்பது?” – இது அவரது வாதம். பன்னாட்டு நிறுவனங்களும் இப்படி மனசாட்சியோடு யோசித்தால், உணவு பற்றிய பயம் இன்றி நாமும் சாப்பிடும் வேலையை மட்டும் செய்யலாம். இப்படி உணவுக் கலப்படம் பற்றி வாசிக்கவேண்டிய அவசியம் இல்லாமல் போயிருக்கும்.

நம் நாட்டில் பிராய்லர் சிக்கன் எனப்படும் கோழி அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் அதில் அதிக அளவு புரதச்சத்து இருப்பதாகவும், இன்னும் பல்வேறு மருத்துவக்குணங்கள் இருப்பதாகவும் சிக்கன் கம்பெனிகளும், மருத்துவர்களும் அறிவித்துக்கொண்டே இருந்தார்கள். 90-களில் பிராய்லர் சிக்கனை எதிர்த்துப் பேசுவது என்பது நவீன அறிவியலையே எதிர்த்துப் பேசுவதாகத்தான் கருதப்பட்டது. புத்தாயிரத்தில் நவீன உணவுகளின் மீதான சந்தேகங்கள் வலுப்படத் தொடங்கின. முதலில் குழந்தை உணவுகளின் மீது தொடங்கிய சந்தேகப் பார்வை படிப்படியாக எல்லா வகையான ‘தயாரிக்கப்பட்ட’ உணவுகளின் மீதும் படிந்தது. இன்று, பிராய்லர் சிக்கன் மட்டும் இல்லாமல் பல்வேறு வகையான புது உணவுகளின் மீதான ஆய்வு முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அசைவ உணவுப் பிரியர்களின் தவிர்க்க முடியாத உணவாக இருப்பது பிராய்லர் சிக்கன்தான்.
`பிராய்லர் சிக்கனின் பாதிப்பால் புற்றுநோய் வரக்கூடும்’ என பிப்ரவரி முதல் வார நாளிதழ்கள் அலறியதைப் பார்த்திருப்பீர்கள். இது ஒன்றும் புதிய செய்தி அல்ல. அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் அமைந்துள்ள ‘ட்யூக்சென் பல்கலைக்கழகம்’ (Duquesne University) ஏற்கெனவே இதே வகையான முடிவுகளை அறிவித்துள்ளது பிராய்லர்

சிக்கனும். புற்றுநோயும்!
நம் ஊரில் பிராய்லர் கோழி வளர்ப்பைப் பார்த்தாலே அதில் இருக்கும் சிக்கல் புரிந்துவிடும். பிராய்லர் கோழிகளின் ஆயுள் மிகக் குறுகியது என்பதால், மிக வேகமாக வளர்க்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. குறிப்பிட்ட நாட்களில் அதிக எடையைப் பெறுவதற்காக இரவு நேரங்களிலும் மின்சார வெளிச்சத்தை உருவாக்கி, சாப்பிடவைத்துக்கொண்டே இருப்பார்கள்.

சரியாகத் தூங்காதவர்களை கிராமத்தில் ‘கோழித்தூக்கம் தூங்குபவன்’ என்று திட்டுவதைக் கேட்டிருப்போம். சாதாரணமாகவே, கோழிகள் மிகக் குறைவான உறக்கத்தையே மேற்கொள்ளும். அதிலும், பிராய்லர் கோழிகளைத் தூங்காமல் சாப்பிடச் செய்வதே முழு லாபம் தரும் உத்தி. இப்படி முறையற்ற உணவால், எடை அதிகமாக வளர்ந்த கோழியைக்கூட கணக்கில் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், இதையும் மீறி இன்னும் கூடுதல் வளர்ச்சி பெறுவதற்காக, பல வகையான ஹார்மோன் ஊசிகளைப் பயன்படுத்துகிறார்கள்.
சர்க்கரை நோய்க்குக் காரணம் `இன்சுலின்’ எனும் ஹார்மோன் குறைபாடு. இன்சுலின் ஏன் குறைகிறது என்பது இன்னும் ஆய்வுக்குரிய விஷயமாகத்தான் இருக்கிறது. அதேபோல, அட்ரினலின் ஹார்மோன் சமநிலை மாறுபாடே ரத்த அழுத்தம். இப்படி, ஒவ்வொரு ஹார்மோனும் சரியான அளவில் இல்லாமல், கூடுவதாலோ அல்லது குறைவதாலோ புதிய புதிய நோய்கள் தோன்றுகின்றன. இப்படிப்பட்ட ஹார்மோன்களில் சிலவற்றைத்தான் பிராய்லர் கோழிகளின் மிகை வளர்ச்சிக்குப் பயன்படுத்துகி றார்கள். பிராய்லர் கோழி வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு ஹார்மோன் தான் ஈஸ்ட்ரோஜன். இது, மிக வேகமான உடல் வளர்ச்சிக்குப் பயன்படுவதால் ஈஸ்ட்ரோஜன் கொடுக்கப்படும் கோழிகள் மிக வேகமாக வளர்கின்றன. அதிக எடை பெறுகின்றன.

ஈஸ்ட்ரோஜன் பெண்களுக்கும், புரோஜெஸ்டிரான் ஆண்களுக்கும் இரண் டாம் பருவப் பால் வேறுபாட்டில் முக்கியமான ஹார் மோன்கள் ஆகும். இவை சரியான அளவில் சுரந்தால் தான், ஆண்களுக்கு மீசை முளைப்பதில் தொடங்கி, முழு ஆணாக மாறுவதற்குரிய எல்லா மாற்றங்களும் நடக்கும். அதேபோல, பெண்களின் இரண்டாம் நிலை மாற்றங்கள் அனைத்தையும் ஈஸ்ட்ரோஜன் நிர்ணயிக்கிறது. கர்ப்பப்பை வளர்ச்சி, மார்பக வளர்ச்சி எனப் பலவிதமான பணிகளை ஈஸ்ட்ரோஜன் செய்கிறது. கோழியின் மூலமாக நம் உடலுக்குள் வரும் ஈஸ்ட்ரோஜனால் பலவிதமான ஆபத்துகள் ஏற்படும் வாய்ப்பு உருவாகிறது. டெல்லியில் இயங்கும் ‘அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம்’ தன்னுடைய அங்கமான ‘மாசுக் கண்காணிப்பு ஆய்வகம்’ மூலமாக பிராய்லர் சிக்கன் பற்றிய ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வுக்காக பிராய்லர் கோழியின் கறியும் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகிய உறுப்புகளும் எடுத்துக்கொள்ளப்பட்டன. பாிசோதனை முடிவில், கோழியின் வளர்ச்சிக்காகச் செலுத்தப்பட்ட ஆன்டிபயாட்டிக் ரசாயனங்கள் கோழியின் கறியிலும், கல்லீரலிலும், சிறுநீரகங்களிலும் தேங்கி இருந்தது கண்டறியப்பட்டது. இப்படி, கோழிகளின் கறியில் ஆன்டிபயாட்டிக்குகளைப் போல, ஹார்மோன்களும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. கறிக்கோழிகளில் போடப்படும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் சமைத்த பின்னரும் நிலைமாற்றமில்லாமல் உடலுக்குள் செல்வதால், இருபாலருக்கும் உடலில் பிரச்னைகள் ஏற்படுகின்றன. அதன் தொடர்ச்சியாகத்தான் புற்றுநோய் வரை ஏற்படும் ஆபத்து இருப்பதாக அமெரிக்கப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பிராய்லர் கோழியின் மூலமாக நம் உடலுக்குள் வரும் ஈஸ்ட்ரோஜன் ஆண்களுக்குக் கூடுதலானால் ‘கைனக்கோமாஸ்டியா’ (Gynaecomastia) எனப்படும் மார்பு வீக்க நோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு காரணமாக இருக்கிறது. பெண் குழந்தைகள் இளம் வயதிலேயே பூப்பெய்துவது உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

பிராய்லர் கோழியின் அற்ப ஆயுள்போல அது ஏற்படுத்தும் பாதிப்பும் நம் ஆயுளையும் குறைத்துவிடுகிறது. பிராய்லரைத் தவிர்ப்பதே ஆரோக்கியமான வாழ்வுக்கான வழி.
பிராய்லர் கோழியில் இவ்வளவு பிரச்னைகள் இருக்கின்றன என்பதால் கோழி சாப்பிடுவதை விட்டுவிட வேண்டியது இல்லை. ஏனென்றால், தமிழர் உணவில் கோழி ஒரு முக்கியமான, தவிர்க்க முடியாத உணவு. கிராமங்களில் எலும்பு முறிவு ஏற்பட்ட நோயாளிகளுக்கும், சளி மற்றும் நுரையீரல் தொடர்பான தொந்தரவுகள் உள்ளவர்களுக்கும் கோழிச்சாறும் கோழிக்குழம்பும் சமைத்துக் கொடுக்கும் வழக்கம் இப்போதும் இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

சுறுசுறுப்பு இல்லாத வாலிபர்களுக்கு, உடல் வலு இல்லாத பூப்பெய்திய பெண்களுக்கு, புதிதாக திருமணமான மணமக்களுக்கு, நீடித்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, வயது முதிர்ந்து உடல் சோர்ந்த பெரியவர் களுக்கு என நம் வாழ்வின் எல்லா நிகழ்ச்சி களிலும் கோழி ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்திருந்தது. பிராய்லர் கோழிக்குப் பதிலாக, நாட்டுக்கோழியை உணவாகப் பயன்படுத்துவது சிறப்புdLrNpji

Related posts

இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிடுங்க! பல நன்மைகள் அள்ளித்தரும்

nathan

தெரிஞ்சிக்கங்க…நீரிழிவு நோயாளிகள் ஏன் நார்ச்சத்துள்ள உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிட வேண்டும்?

nathan

உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் வெள்ளை வெங்காயம் !!

nathan

இதோ நுரையீரல் தொற்றை தடுக்கும் சூப்பர் உணவுகள்! இத படிங்க

nathan

உங்களுக்கு தெரியுமா இரத்தத்தில் கொழுப்பு சேர்வதை தடுக்கும் வெங்காயம் ..!

nathan

எப்போதும் வெந்நீரில் துணி துவைப்பதால் ஏற்படும் குறைபாடுகள் என்ன?

nathan

தெரிஞ்சிக்கங்க…தயிரை இந்த நேரத்தில் சாப்பிட்டால் ஆபத்து?

nathan

சுவையான ஸ்வீட் கார்ன் மசாலா தயிர் வடை

nathan

உங்கள் உடலில் மிக அதிக நஞ்சை உருவாக்கும் 6 தினசரி உணவுகள்!! -அப்ப இத படிங்க!

nathan