நமது நகங்கள் நம் உடல் ஆரோக்கியம் குறித்து பல விஷயங்களைச் சொல்லும். அதில் ஊட்டச்சத்து குறைபாடு முதல் உடலில் உள்ள நோய்த்தொற்றுகள் வரை அனைத்தையும் நமது நகங்கள் நமக்கு ஒருசில மாறுதல்களால் சுட்டிக் காட்டும். அப்படி நகங்கள் வெளிப்படுத்தும் ஓர் அறிகுறி தான் அது மஞ்சளாக மாறுவது.
நகங்கள் திடீரென்று மஞ்சளாக மாறினால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இக்கட்டுரையில் எந்த காரணங்களுக்கு எல்லாம் நகங்கள் மஞ்சளாக மாறும் என கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.
அடர் நிற நெயில் பாலிஷ் நகங்களுக்கு அடர் நிறத்தில் நெயில் பாலிஷை அதிகம் பயன்படுத்தினால், அந்த நெயில் பாலிஷில் உள்ள சாயங்கள் நகங்களில் அப்படியே தங்கி, நகங்களை மஞ்சளாக மாற்றும். இச்செயல் இப்படியே நீடித்தால், அது நகங்களின் ஆரோக்கியத்தையே அழித்துவிடும்.
கல்லீரல் நோய்கள்
நகங்கள் மஞ்சளாக இருந்தால், அனைவரது மனதிலும் முதலில் எழுவது மஞ்சள் காமாலையாக இருக்குமோ என்ற எண்ணம் தான். ஆனால் அது உண்மையே. உடலில் பிலிரூபினின் அளவு அதிகமாக இருந்தால், இம்மாதிரி நகங்கள் மஞ்சளாகும்.
சிறுநீரக நோய்கள்
இரத்தத்தில் பிலிரூபின் அளவு அதிகத்தால், அது கல்லீரல் நோய்களை மட்டுமின்றி, சிறுநீரக நோய்களின் அபாயத்தையும் குறைக்கும். ஆகுவே நகங்கள் மஞ்சளாக இருப்பின், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
மருந்துகள்
ஆம், மருந்துகளும் நகங்களை மஞ்சளாக்கும். அதிலும் மருந்து மாத்திரைகள் மஞ்சள் நிறத்தில் இருந்தால், அது இரத்தம் மற்றும் நகங்களில் கலந்து மஞ்சளாக்கும்.
நுரையீரல் நோய்
நுரையீரலில் அளவுக்கு அதிகமாக திரவங்கள் தேங்கும் போது, அது நகங்களை மஞ்சளாக்கும். எனவே நகங்கள் திடீரென்று மஞ்சளானால், தாமதிக்காமல் மருத்துவரை உடனே சந்தித்து சோதித்துக் கொள்ளுங்கள்.
Related posts
Click to comment