27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
ஆரோக்கிய உணவு

கம்பு ஆலு சப்பாத்தி

கம்பு ஆலு சப்பாத்தி

தேவையான பொருட்கள்:கம்பு மாவு – 1 கப்
உருளைக்கிழங்கு – 1
வெங்காயம் – 1
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மாங்காய் தூள் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
தண்ணீர் – 1 கப்செய்முறை:• வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும்

• ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு, வேக வைத்த உருளைக்கிழங்கு, வெங்காயம், சீரகம், மிளகாய் தூள், மாங்காய் தூள், கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அதனை 30 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.

• பின்பு அந்த மாவை சிறு உருண்டைகளாக்கி, சப்பாத்தி போன்று தேய்த்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

• பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், ஆரோக்கியமான கம்பு ஆலு சப்பாத்தி ரெடி!!!

Related posts

இயற்கையாக வளரும் காளானில் பல மடங்கும் புரதச்சத்தும் மற்றும் மருத்துவ குணங்களும்

nathan

கர்ப்பிணி பெண்களுக்கு மரவள்ளி கிழங்கு கூட்டு

nathan

உடல் சூட்டை தணிக்கும் கற்றாழை ஜூஸ்

nathan

வெளியான உண்மை- தினமும் வேர்க்கடலை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

சூப்பர் டிப்ஸ்! உடல் எடை குறையணுமா? அப்ப உடனே இந்த உணவுகளுக்கு ‘குட்-பை’ சொல்லுங்க…

nathan

நீங்கள் காலை உணவை தவிர்ப்பவரா? அய்யய்யோ அப்படின்னா இதை படிங்க

nathan

உங்களுக்கு தெரியுமா தொப்பையை குறைக்க உதவும் 15 உணவுகள்

nathan

கோடை வெயிலுக்கு உடலுக்கு குளிர்ச்சி தரும் நுங்கு

nathan

ருசியான முட்டை இடியாப்பம்

nathan