என்னென்ன தேவை?
தினை அரிசி – 100 கிராம்,
பாசிப்பருப்பு – 30 கிராம்,
வெல்லம் – 200 கிராம்,
நெய் – 2 டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய முந்திரி – 25 கிராம்,
திராட்சை – 25 கிராம்,
ஏலக்காய் – 3 (பொடிக்கவும்),
தண்ணீர் – 400 மி.லி,
பல் பல்லாக நறுக்கிய தேங்காய் – 1/2 மூடி.
எப்படிச் செய்வது?
ஒரு அடிகனமான பாத்திரத்தில் வெல்லம், சிறிது தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வைக்கவும். தினை அரிசி மற்றும் பாசிப்பருப்பைத் தனித்தனியாக வறுத்து நன்கு ஊறவைக்கவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த தினை, பாசிப்பருப்பை சேர்த்து நன்கு வேகவைக்கவும். இத்துடன் வெல்ல பாகு, சிறிது நெய், ஏலக்காய்தூள் சேர்த்து நன்கு கிளறி, அனைத்தும் ஒன்றாக சேர்ந்து பொங்கல் பதத்திற்கு வந்ததும் இறக்கவும். கடாயில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை, தேங்காயை பொன்னிறமாக வறுத்து பொங்கலில் கலந்து பரிமாறவும்.