36.6 C
Chennai
Friday, May 31, 2024
mint chicken curry 13 1455356487
அசைவ வகைகள்

புதினா சிக்கன் குழம்பு

உங்களுக்கு சிக்கன் ரொம்ப பிடிக்குமா? ஆனால் உங்களுக்கு சூடு பிடிக்குமா? அதைத் தவிர்க்க மிகவும் குளிர்ச்சிமிக்க புதினாவை சிக்கனுடன் சேர்த்து குழம்பு செய்து சாப்பிடுங்கள். இது நிச்சயம் வித்தியாசமான சுவையில் நீங்கள் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும்.

சரி, இப்போது புதினா சிக்கன் குழம்பை எப்படி எளிய முறையில் செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து விடுமுறை நாட்களில் செய்து சுவைத்து மகிழுங்கள்.

<
mint chicken curry 13 1455356487
தேவையான பொருட்கள்:

வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
சிக்கன் – 1/2 கிலோ
தண்ணீர் – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – சுவைக்கேற்ப

மசாலாவிற்கு…

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
பட்டை – 1 இன்ச்
சோம்பு – 2 டீஸ்பூன்
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 4 பற்கள்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 4-5 (நறுக்கியது)
புதினா – 2 கப்

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக நீரில் கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, சோம்பு சேர்த்து தாளித்து, இஞ்சி, பூண்டு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.

பின்பு அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் புதினாவை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

பிறகு அதனை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், சீரகம் சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

வெண்ணெய் மசாலாவிலிருந்து வெளியே வரும் நிலையில் இருக்கும் போது, சிக்கனை சேர்த்து நன்கு பிரட்டி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் சிக்கனை நன்கு வேக வைத்து இறக்கி, எலுமிச்சை சாற்றினை சேர்த்து கிளறினால், புதினா சிக்கன் குழம்பு ரெடி!!!

Related posts

சுவையான மீன் ரோஸ்ட் செய்வது எப்படி

nathan

ஆந்திரா சிக்கன் குழம்பு

nathan

முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு

nathan

பட்டர் சிக்கன்

nathan

பேபி கார்ன் 65

nathan

சுவையான கோபி 65 செய்வது எப்படி

nathan

ரம்ஜான் ஸ்பெஷல் சுவையான ஹலீம் வீட்டில் செய்வது எப்படி

nathan

சுவையான நெத்திலி மீன் வறுவல் செய்வது எப்படி

nathan

மட்டன் மிளகு கறி

nathan