அரிசி, இந்திய வேளாண்மையின் அரசன். உலகிலேயே அதிகம் அரிசியை ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியா தான். நிறைய அரிசி வகைகள் இந்தியாவில் பயிரிடப்பட்டாலும் கூட, மக்களால் அதிகம் விரும்பி சாப்பிடப்படும் அரிசி வகைகள் வெள்ளை அரிசி, கைக்குத்தல் அரிசி மற்றும், பாஸ்மதி அரிசி தான்.
அவரவர் பொருளாதாரத்தை வைத்து அவர்களுக்கு ஏற்ற விலையில் விற்கும் அரிசியை வாங்கி உண்ணும் பழக்கம் தான் இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் நடைமுறையில் உள்ளது. விலை அதிகம், குறைவு என்பதை விட, ஊட்டசத்து, ஆரோக்கியம் போன்றவை எதில் அதிகம், குறைவு என்று பார்க்க வேண்டிய தான் அவசியம்…..
வெள்ளை அரிசி நம்மில் பெரும்பாலும் வெள்ளை அரிசியை தான் சமையலில் பயன்படுத்துகிறோம். ஆனால் வெள்ளை அரிசி பாலிஷிங் செய்யும் போது அதில் இருக்கும் வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் பறிபோய்விடுகின்றன. உலக சுகாதார மையம் (WHO) -வும் கூட பாலிஷிங் செய்யும் போது அரிசியில் இருக்கும் வலுவூட்டும் சத்துக்கள் பறிபோகாத வண்ணம் செய்யும் படி வலியுறித்தி வருகிறது.
ஆரோக்கிய நலன்கள் இரைப்பை குடல்: வெள்ளை அரிசி மிகவும் எளிதாக செரிமானம் ஆகக்கூடியது. ஒருமணி நேரத்தில் இது செரித்துவிடும். இதனால் செரிமான மண்டலத்திற்கு எந்த சேதமும் வருவதில்லை.
வயிற்றுப்போக்கு வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு, பெருங்குடல் அழற்சி மற்றும் காலை வேளை உடல்சோர்வு (அ) நோய்களுக்கு நல்ல தீர்வளிக்கக் கூடியது வெள்ளை அரிசி.
உடல் சக்தி வெள்ளை அரிசி ஒட்டுமொத்தமாக உடலுக்கு நல்ல சக்தியளிக்க கூடியது ஆகும். உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட்சத்தை இது தரவல்லது. நீரிழிவு நோயாளிகள் இதை உட்கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கப் படுகிறார்கள்.
கைக்குத்தல் அரிசி கைக்குத்தல் அரிசியில் நிறைய ஆரோக்கிய நலன்கள் இருக்கின்றன. இப்போது யாரும் பெருவாரியாக கைக்குத்தல் அரிசியை வீட்டில் பயன்படுத்துவதில்லை.
நார்ச்சத்து அதிகம் கைக்குத்தல் அரிசியில் நார்ச்சத்து அதிகம். மற்றும் இது இதயத்தை பாதிக்கும் தீயக் கொழுப்பான எல்.டி.எல் கொழுப்பை குறைக்க உதவுகிறது. இரத்தக் கொதிப்பை கட்டுப்பாட்டில் வைக்கவும் கைக்குத்தல் அரிசி உதவுகிறது.
சர்க்கரை கைக்குத்தல் அரிசியின் மற்றுமொரு பெரிய பலன் என்னவெனில், இது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகம் கலக்காமல் வைத்துக் கொள்ள உதவுகிறது. இதில் வைட்டமின் மற்றும் மினரல் சத்துகள் அதிகம்.
பாஸ்மதி அரசி இந்தியாவில் மட்டுமே விளைவிக்கப்படும் தனி சிறப்பு கொண்டது பாஸ்மதி அரிசி. சுவைமிக்க பாஸ்மதி அரிசியை பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
பாஸ்மதி வகைகள் பாஸ்மதி அரிசியில் நிறைய வகைகள் இருக்கின்றன. இவை விலையால் வேறுப்பட்டு விற்கப்படுகின்றன. பிரவுன் பாஸ்மதி அரிசி கைக்குத்தல் அரிசியை விட 20% நார்சத்து அதிகம் என்று கூறப்படுகிறது. வெள்ளை பாஸ்மதி அரிசியும் வெள்ளை அரிசியும் ஒரே மாதிரியானவை தான் என்று கூறப்படுகிறது.
தனி மனம், ருசி பாஸ்மதி அரிசியில் தனி மனம் மற்றும் ருசி இருக்கிறது. இதற்கு காரணம் பாஸ்மதி அரிசியில் இருக்கும் 2-acetyl-1-pyrroline எனும் இரசாயன் கலப்பு என்று கூறப்படுகிறது.