30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
கர்ப்பிணி பெண்களுக்குமருத்துவ குறிப்பு

தாய், சேய் ஆரோக்கியத்திற்கு உதவும் மூச்சுப்பயிற்சி

தாய், சேய் ஆரோக்கியத்திற்கு உதவும் மூச்சுப்பயிற்சி

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சீரான அளவில் மூச்சு விடுவது முக்கியம். கர்ப்பிணிகளின் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு தேவையான அளவுக்கு ஆக்ஸிஜன் கிடைக்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் மூச்சுப் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தால் குழந்தை தாய் ஆரோக்கியம் காக்கப்படும். 4 எளிதான மூச்சுப் பயிற்சிகளை இப்போது பார்க்கலாம்.• விரிப்பில் கால்களை மடக்கி வசதியாக உட்கார்ந்து கொண்டு, தாடை, தோள்கள் மற்றும் இடுப்பை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். பின் உங்கள் கையை வயிற்றில் வைத்துக் கொண்டு, மறு கையையும் அதன் மேல் வைத்துக் கொள்ளுங்கள். இதையடுத்து, அடி வயிற்றிலிருந்து மூச்சை இழுங்கள்.

அந்த நிலையில் வயிறு முழுவதும் மூச்சு பரவும் வகையில் 1, 2, 3… என்று 8 வரை எண்ணுங்கள். பின் மெதுவாக மூச்சை வெளியே விடுங்கள். இதே முறையை மீண்டும் மீண்டும் செய்யுங்கள். இந்த மூச்சுப் பயிற்சியைக் கர்ப்பிணிகள் தினமும் குறைந்தது 10 நிமிடங்களாவது செய்ய வேண்டும்.

• பாதங்களை இணையாக வைத்துக் கொண்டு நேராக நிற்கவும். வாயை மூடிக் கொண்டு, மூச்சை நன்றாக இழுத்து 10 வரை எண்ணவும். அப்போது கைகளை மார்பில் வைத்துக் கொள்ளுங்கள் (அழுத்தக் கூடாது). நுரையீரல் விரிவடைவதை உங்களால் உணர முடியும்.

அப்புறம், ஓரிரு நொடிகள் மூச்சை அப்படியே பிடித்துக் கொண்டிருந்து விட்டு, மெதுவாக மூச்சை வெளியே விட்டு, 10 வரை எண்ணவும். இதேபோல் இந்தப் பயிற்சியை 10 முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். 7வது மாதத்திற்குப் பின் இந்தப் பயிற்சியைச் செய்வது சிரமமாக இருந்தாலும், முடிந்த வரை தொடர்ந்து செய்து வர வேண்டும்.

• மல்லாக்க கீழே படுத்துக் கொண்டு, வாயை நன்றாகத் திறந்து மூச்சை வேகமாக இழுத்து விழுங்க வேண்டும். இதைத் தொடர்ந்து செய்தால் நுரையீரல்களுக்கு நல்லது. தினமும் ஒரு 5 நிமிடங்கள் இந்தப் பயிற்சியைச் செய்தால் நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கும். கருவில் உள்ள குழந்தைக்கும் ஆக்ஸிஜன் சீராகப் போகும்.

• உடலை நன்றாக ரிலாக்ஸ் செய்து கொண்டு, மூச்சை நன்றாக இழுத்து நிறுத்தவும். ஓரிரு நொடிகள் கழித்து, அதேபோல் உட்கொண்ட காற்றை மெதுவாக வெளியேற்றவும். பின் வாயைத் திறந்து, காற்றை இழுத்து விழுங்கி, 5 வரை எண்ணவும்.

பின் வாயை மூடிக் கொண்டு ஆழமாக மூச்சை இழுத்து விட வேண்டும். ஒரே நேரத்தில் 5 முறை இந்தப் பயிற்சியைச் செய்யலாம். இந்த பயிற்சியை நின்று கொண்டே செய்யலாம்; அல்லது வசதியாக உட்கார்ந்து கொண்டும் செய்யலாம்.

 

Related posts

ஆண்மையை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமான உண்மையான தகவல்கள்!!!

nathan

வேலைக்கு போகும் பெற்றோரால் குழந்தைகள் மனதில் ஏற்படும் தனிமை

nathan

கர்ப்ப காலத்தில் சிசுவின் அங்க வளர்ச்­சி­களை அறி­வது எவ்­வாறு

nathan

வைரஸ் காய்ச்சலை எதிர்கொள்ளும் சில எளிய கிராமத்து வைத்தியங்கள்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… எப்போது சிசேரியன் அவசியம்?

nathan

கர்ப்பமாவதற்கு முன் அவசியம் செய்ய வேண்டிய 5 பரிசோதனைகள்

nathan

ஒருவருக்குக் கொட்டாவி வந்தால் அருகில் உள்ளவர்களுக்கும் கொட்டாவி வருவது ஏன்?..!!

nathan

பாட்டி வைத்தியத்துல வாய்ப்புண்ணுக்கு இவ்ளோ மருநு்து இருக்கா?அப்ப இத படிங்க!

nathan

நீங்கள் சத்து மாத்திரைகளை எடுப்பவரா?ஆபத்துக்களைப் பற்றி தெரிஞ்சுக்கோங்க..

nathan