625.500.560.350.160.300.053.80 2
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…மலச்சிக்கலால் பெரும் அவதியா? இதனை தீர்க்க இந்த பழம் ஒன்றே போதும்

பொதுவாக ஒருவர் அன்றாடம் மலம் கழித்தால் தான் உடல் ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம்.

வாரத்திற்கு 3 முறை கழிப்பவர்கள் அல்லது மலம் மிகவும் இறுக்கமானால், உடலின் செரிமான மண்டலம் மோசமான நிலையில் உள்ளது என்று கூறப்படும்.

இதுபோன்ற மலச்சிக்கலில் இருந்து விடுபட கண்ட கண்ட மருந்துகளை எடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

இதிலிருந்து எளிய முறையில் விடுபடவேண்டுமாயின் அந்தக்காலத்தில் நமது முன்னோர்கள் மலச்சிக்கலுக்கு பயன்படுத்தி வந்த அத்திப்பழத்தினை சாப்பிடுவதே சிறந்நது.

ஏனெனில் உலர்ந்த அத்திப்பழத்தை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால், மலச்சிக்கலில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

அந்தவகையில் தற்போது உலர்ந்த அத்திப்பழ நீரை எப்படி குடிக்கலாம்? இதன் நன்மைகள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.

எப்படி குடிக்க வேண்டும்?
  • முதலில் 2-3 உலர்ந்த அத்திப்பழத்தை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அல்லது குறைந்தது 4-5 மணிநேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் அதை மறுநாள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
  • முக்கியமாக ஒரு நாளைக்கு 2-3 உலர்ந்த அத்திப்பழத்திற்கு மேல் சாப்பிட வேண்டாம். இல்லாவிட்டால், வயிற்று பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
  • அத்திப்பழம் ஊற வைத்த நீரை எதற்கு குடிக்க வேண்டுமெனில், அதில் தான் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது.
  • இந்நீரைக் குடிக்கும் போது, அந்த நார்ச்சத்து எளிதில் உடலுக்கு கிடைத்து, மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
அத்திப்பழத்தை எடுத்து கொள்வதனால் நன்மை என்ன?
  • அத்திப்பழத்தில் நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் ஏ, பி போன்றவை அதிகம் உள்ளது.
  • அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் நிரம்பியுள்ளதால், இது வயிறு மற்றும் செரிமானத்திற்கு சிறப்பான உணவுப் பொருள். இதனால் தான் இது பல்வேறு வயிற்று பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.
  • நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுவதோடு, மலம் இறுக்கமடைவதைத் தடுக்கும் மற்றும் நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும்.
  • தினமும் இந்த பழத்தை உட்கொண்டு வந்தால் உடல் எடையிலும் மாற்றத்தைக் காணலாம்.
  • அத்திப்பழத்தில் சர்க்கரை மற்றும் கலோரிகள் மிகவும் குறைவு என்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு சாப்பிட ஏற்றப் பழம்.

Related posts

பெண்களை தாக்கும் கல்லீரல் நோய்கள்

nathan

டாப் 7 ஆன்டிஆக்ஸிடன்ட் மூலிகைகள்!

nathan

ஏலக்காயில் இவ்ளோ இருக்கா?

nathan

தோள்பட்டை வலி அதிகமா இருக்கா? இதோ எளிய நிவாரணம்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தைகளுக்கு இதய நோய்கள் வருவது எதனால்?

nathan

தசை சுளுக்கா? இதோ எளிய நிவாரணம்!

nathan

ஆறு மாதத்திற்கு மேல் மாதவிடாய் பிரச்சனையா? இப்படி இருந்தால் கட்டாயம் நீங்கள் மருத்துவரை சந்திக்கவும்!

nathan

சித்த மருத்துவ குறிப்புகள் 1

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…ஆண் மைக் குறைவை ஏற்படுத்தும் டெஸ்டோஸ் டிரோன் குறைவாக இருப்பதற்கான காரணங்கள்!!!

nathan