26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
625.500.56
ஆரோக்கியம் குறிப்புகள்

4ம் எண்ணில் பிறந்தவரா நீங்கள்? உங்களுக்குதான் இந்த விஷயம்

இப்போது சர்வவல்லமையுள்ள இராகு பகவானின் ஆதிக்கத்திற்குரிய எண்ணான 4ஐப் பற்றிப் பார்ப்போம். (சாதகத்தின்படி) நவக்கிரகங்களின் (நைசிக பலம்) பலத்தில், இராகு பகவான் தான் பலவான் என்றாலும், எண்களை சாத்திரத்தில் நான்கு எண் அவ்வளவு வலிமை மிகுந்த எண்ணாகச் சொல்லப்படவில்லை! சூரியனின் எண்ணான 1 ஆம் எண்ணைச் சார்ந்தே இதன் பலன்களும், நடைமுறைகளும், அதிர்ஷ்டங்களும் உள்ளன! மேலும் 1ம் எண்ணிற்கு மிகவும் நட்புடையதாகவும் விளங்குகிறது.

வெளிநாட்டு எண்கணித மேதைகள் இதை (4 எண்) யுரேனஸ் என்னும் கிரகத்தின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதாகக் கூறுகிறார்கள். இவர்கள் வாய்ப் பேச்சில் இன்பம் காண்பவர்கள். நாவன்மை அதிகமுள்ள இவர்கள் வீட்டிலும், ரோட்டிலும், காபி, டீக்கடைகளிலும், கோவில்களிலும் ஆற்றங்கரையிலும், கடற்கரையிலும், கையை ஆட்டி, குரலை ஏற்றி, இறக்கி, உணர்ச்சியுடன் பேசி மக்கள் மனதைக் கவருவார்கள். பல மணி நேரம் பேசும் இயல்பினர். ஒரு ஜனக்கூட்டம் எப்போதும் இவர்களைச் சுற்றியே நிற்கும்.

 

இவர்கள் இரகசியங்களைக் காப்பாற்ற மாட்டார்கள். எந்த ஒரு விஷயத்தையும், வேலையையும்,அடுத்தவரிடம் சொல்லிப் புலம்பாது இருக்கமாட்டார்கள். இவர்களிடமிருந்தே திட்டத்தை அறிந்து கொண்ட இவர்களது நண்பர்கள் அந்தத் திட்டத்தை அவர்களே விரைந்து சென்று செயலாற்றி, வெற்றி பெற்று விடுவார்கள்.

 

எனவே இவர்கள் அதிர்ஷ்டமான வாழ்க்கை வாழ வேண்டுமானால் முதலில் நாகாக்க வேண்டும். மேலும் 4, 3, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், தங்களது நண்பர்களாலும், சுற்றத்தார்களாலும், மற்றும் நம்பியவராலும் செய்வினைகள் மற்றும் ஏவல் கோளாறுகளை இவர்களது வாழக்கையில் அனுபவிக்க நேரிடுகிறது! இதே யோகம் 2, 8 ஆகிய தேதிகளில் பிறந்த அன்பர்களுக்கும் உண்டு.

13-ம் எண் & சில உண்மைகள்

 

வெளிநாட்டு மக்கள் (ஏன் நம்மவர்கள் கூட) 13-ம் எண்ணைக் கண்டு மிகவும் பயப்படுகிறார்கள். உலகின் சரித்திரத்தில் பல இயற்கைச் சீற்றங்கள் 3-ம் தேதியில்தான் நடந்துள்ளன. நெப்போலியன் வீழ்ந்தது ஒரு 13ந் தேதியில்தான். கி.பி.2026 நவம்பர் 13 வெள்ளிக்கிழமையில், உலகின் மக்கள் தொகை 5000 கோடி என்ற அளவில் உயர்ந்து, திடீரென உலகம் வெடிக்க வாய்ப்புள்ளது எனறு அமெரிக்க விஞ்ஞானிகள் ஒரு ஆராய்ச்சியின் முடிவாகக் கூறியுள்ளனர். மேலும் ஜாலியன் வாலாபாக் படுகொலையும் அமிர்தசரஸில் 13.4.1919 அன்றுதான் நடந்தது!

மேலும் 13 எண் பெயரில் வரும் அன்பர்கள் தங்களது வாழ்க்கையில் பல ஜீவ மரணப் போராட்டங்களை அவசியம் சந்தித்துத்தான் ஆக வேண்டும். பெரும்பாலும் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த அன்பர்களும், நான்காம் எண்ணில் பெயர் அமைந்த அரசு அதிகாரிகளும், ஊழியர்களும், அயராது உழைத்திட்ட போதிலும், ஏனோ மேலதிகாரிகளால் வெறுக்கப்படுகிறார்கள். அடிக்கடி இவர்கள் வீண் பழிகளைச் சந்திக்கின்றார்கள்.

பல அன்பர்கள் அரசாங்க வேலையை இடையிலேயே இழந்துவிடும் அவயோகமும் உண்டு. அடிக்கடி ஓடிக் கொண்டிருக்கும் வண்டி வாகனங்களுக்குத் தவிர, மனிதனின் வாழ்க்கைக்கு இந்த 13-ம் எண் ஏற்றதல்ல! அதுமல்மல்ல 22-ஆம் எண்ணும், 13-ஐப் போன்றே பயப்பட வேண்டியதுதான் 22-ந் தேதியில் பிறந்தவர்கள் அல்லது பெயர் எண் உள்ளவர்களில் பலர் திடீரெனத் தாழ்ந்து விடுவார்கள்.

 

பிறரால் வஞ்சிக்கப்படுவார்கள். பல அன்பர்கள் அடுத்துக் கெடுக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்தையும் இவர்களிடம் அன்பு பாராட்டியவர்களே செய்து விடுவார்கள் என்பது வேதனையான விஷயம் இந்த எண்ணின் தொடர்புடையவர்களின் வாழக்கையானது எவ்வளவு வேகமாக உயர்கிறதோ, அதே வேகத்தில் திடீரெனத் தாழ்ந்து விடும் என்பதையும் மறக்கக் கூடாது!

 

மேலும் இந்தக் கிரகத்தின் ஆதிக்கத்திலுள்ள அன்பர்களுக்கு அடிக்க இடமாற்றம் 13, 22 எண்ணில் பிறந்தவர்கள் சுதந்திரப் பிரியர்கள். எவருக்கும் கட்டுப்பட்டு வாழ விரும்பாதவர்கள். இவர்கள் தங்களது மேலதிகாரிகள், முதலளிகள் ஆலோசனைக்குக் கட்டுப்பட விரும்ப மாட்டார்கள்.

 

ரோஷமும், தன்மான உணர்வும் மிகுந்த இவர்களில், அடுத்தவர்களுக்கு அடிமையாக இருந்து முன்னேறுவதைவிட அந்த வேலையை விட்டு விலகி ஏதாவது செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று எதிர்த்து நிற்பார்கள். எனவேதான் இவர்களுக்குப் பல பிரச்சினைகளும், முன்னேற்றத் தடைகளும், தொழிலில் உண்டாகின்றன. தங்களது மேலதிகாரிகள், முதலாளிகள் போன்றோர்களை அனுசரித்துச் சென்றால் இவர்களும் மிகுந்த முன்னேற்றம் பெறலாம்.

உடல் அமைப்பு

 

இந்த நான்கு எண்காரர்கள் நடுத்தரமான உயரம் உடையவர்கள். வட்ட வடிவமான முகத்தோற்றமும், சற்றுப் பருமனான உடல் அமைப்பும் உண்டு. ஆழ்ந்த கண்கள் இருக்கும். தலைமுடி கருமையாகவும், அதே சமயம் அழுத்தமாகப் படியாமல், சற்றுச் சுருண்டும் காணப்படும். அதிகமான நோய்கள் இவர்களை அணுகாது. உணவு விஷயத்தில் மட்டும் கட்டுப்பாட்டுன் நடந்து கொண்டால், ஆரோக்கியம் உறுதி!

Related posts

பெண்களே கர்ப்ப காலத்தில் இந்த அறிகுறிகள் தென்பட்டால் அவதானமாக இருங்க!

nathan

என்னதான் பல் தேய்த்தாலும் பற்களில் மஞ்சள் கறையா? கவலையே வேண்டாம்…

sangika

பானி பூரி உடலுக்கு நன்மையை தருகிறதா? பானி பூரியை விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்?

nathan

உங்களுக்கு தெரியுமா வெயில் காலங்களில் பச்சிளம் குழந்தை பராமரிப்பு எப்படி !!

nathan

அன்னையர் தினம் எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது தெரியுமா?தெரிந்துகொள்வோமா?

nathan

சூப்பர் டிப்ஸ்.. மார்ப்பு பகுதியில் உள்ள சுருக்கங்களை நீக்க இத ட்ரை செஞ்சி பாருங்க…

nathan

பருவமடைந்த பெண்களுக்குரிய உணவுகள்

nathan

உடல்நலத்திற்கு கேடு தரும் நாப்கின்கள்

nathan

எப்போதும் கவலைப்படுகிறீர்களா? சிறப்பான தீர்வு!…

nathan