29.1 C
Chennai
Monday, May 12, 2025
31 1485861822 lotus
முகப் பராமரிப்பு

கருவளையம் சீக்கிரம் மறைய என்ன செய்யலாம்?

கருவளையம் கண்களை மட்டுமல்லாது முக அழகையும் கெடுக்கும். வயதான தோற்றத்தை தரும். கருவளையத்திற்கு மிக முக்கிய காரணம் தூக்கமின்மையே.

அதன் பின் அதிக நேரம் மொபைல், டிவி பார்ப்பது. கவலைகள், மாத்திரகள் என பலவிதமன காரணங்களாலும் கருவளையம் உண்டாகிறது.

எத்தனையோ குறிப்புகளை பயன்படுத்தியிருப்பீர்கள். இருப்பினும் சரியாகவில்லையா. இங்கே சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகள் விரைவில் பலன் தரும். செய்து பாருங்கள்.

அரிசி மற்றும் கருஞ்சீரகம் : அரிசி, கருஞ்சீரகம் தலா 2 ஸ்பூன் எடுத்து அரை கிளாஸ் நீரில் போட்டு கொதிக்க வையுங்கள். பின் அந்த நீரை ஆற வைத்து வடிகட்டிக் கொள்ளுங்கள். இந்த நீரில் ரோஸ் வாட்டரை கலந்து இந்த நீரை பஞ்சினால் தொட்டு கண்கலில் வைக்கவும். தினமும் இரவில் செய்து வந்தால் வேகமாக கருவளையம் மறையும்.

சாமந்தி இதழ் : நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து நன்றாக கொதிக்க வையுன்ங்கள் பின் அடுப்பை அணைத்து அதில் சாமந்தி இதழ்களை போட்டு மூடி வைக்கவும் அதனை அப்படியே ஃப்ரிட்ஜில் வைத்து அவ்வப்போது பஞ்சினால் கண்கலீல் ஒற்றிக் கொள்ளுங்கள். உடனடியாக பலன் தரும்.

தாமரை பூ : தாமரை பூ இதழை தண்ணி விடாமல் அரைத்து அதனுடன் விளக்கெண்ணெய் மற்றும் தேன் 1 ஸ்பூன் கலந்து 7 மணி நேரம் அறை வெப்பத்திலேயே வைத்திருங்கள். பின்னர் அதனை ஃப்ரிட்ஜில் வைத்து, இரவுகளில் இந்த கலவையை கண்களை சுற்றியும் போடுங்கள்.

முள்ளங்கி பீட்ரூட் : முள்ளங்கி, பீட்ரூட் மற்றும் கேரட் சாறை சம அளவு எடுத்து அதனை கண்களை சுற்றியும் தடவுங்கள். தினமும் செய்தால் ஒரே வாரத்தில் பலனை காணலாம்.

31 1485861822 lotus

Related posts

முகத்துக்கு ஆவி பிடிக்கலாமா?

nathan

தளர்ந்த சருமத்தை இளமையாக மாற்றும் காபி ஸ்க்ரப் !!

nathan

சருமத்தை பொலிவாக்கும் குங்குமாதி தைலம்

nathan

சூப்பர் டிப்ஸ்! மின்னும் முகப்பொலிவை வீட்டிலிருந்தப்படியே பெற சில பேஷியல் டிப்ஸ்!

nathan

நீங்கள் கருப்பாக இருக்கிறீர்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

தேவதை போன்று உங்கள் காதலி மாற வேண்டுமா..? அப்ப இத படிங்க!

nathan

பருக்கள் உள்ளவர்களுக்கான பிரத்யேக ஃபேஷியல்கள் பற்றிக் கேட்டறிந்து அவற்றைச் செய்து கொள்வதே சிறந்தது.

nathan

மஞ்சளை எப்படியெல்லாம் பயன்படுத்தினால், என்ன பிரச்சனை நீக்கும்……

sangika

முகம் எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா?

nathan