தேவையான பொருட்கள்:தூதுவளை கீரை – 200 கிராம்
சிறிய வெங்காயம் – 50 கிராம்
பூண்டு – 5 பல்
சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
வேகவைத்த துவரம் பருப்பு – 50 கிராம்
உப்பு – தேவைக்கு
நெய் – 3 தேக்கரண்டிசெய்முறை:* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சிறிய வெங்காயம் – 50 கிராம்
பூண்டு – 5 பல்
சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
வேகவைத்த துவரம் பருப்பு – 50 கிராம்
உப்பு – தேவைக்கு
நெய் – 3 தேக்கரண்டிசெய்முறை:* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* தூதுவளை கீரையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் தாளித்து, வெங்காயம் மற்றும் பூண்டுவை வதக்கிக் கொள்ளுங்கள்.
* பின்பு அதில் தூதுவளை கீரையை இட்டு நன்றாக கிளறுங்கள்.
* அத்துடன் வேகவைத்த துவரம்பருப்பு, உப்பு, மிளகுதூள் கலந்து, சிறிதளவு நீரும் விட்டு வேகவையுங்கள்.
* இந்த கீரை துவட்டலை சூடான சாதத்தில் கலந்து சாப்பிடலாம். இது நுரையீரலின் நுண்ணிய காற்றறைகளை பலப்படுத்தும். உடல் உள்ளுறுப்புகளை பலப்படுத்தி வலிமையையும், பலத்தையும் தரும்.