oth

கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ளும் போது பெண்கள் எதிர்பார்ப்பது என்ன தெரியுமா?

பல தம்பதிகளுக்கும் கர்ப்ப காலத்தில் உடலுறவில் ஈடுபடலாமா என்ற கேள்வி எழும். அதே சமயம் உடலுறவில் ஈடுபட்டால் சுகப்பிரசவம் எளிதில் நடைபெறும் என்ற கருத்தும் மக்களிடையே இருப்பதால், பல தம்பதிகள் கர்ப்ப காலத்தில் உடலுறவில் ஈடுபடுவார்கள்.

ஆனால் இக்காலத்தில் உடலுறவு கொள்ளும் போது, பல ஆண்களுக்கும் பெண்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்று சரியாக தெரியாது. கர்ப்பமாவதற்கு முன் உடலுறவின் போது பெண்களின் மனநிலை எப்படி இருக்குமோ, அப்படி தான் கர்ப்ப காலத்திலும் இருக்குமா என்று கேட்டால், நிச்சயம் இல்லை என்று தான் கூற வேண்டும்.

இக்காலத்தில் உடலுறவில் ஈடுபடும் போது, பெண்கள் ஒருசிலவற்றை தான் ஆண்களிடம் எதிர்பார்ப்பார்கள். இக்கட்டுரையில் அது என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தூண்டுதல் போதும்
கர்ப்ப காலத்தில் பெண்கள் தன் கணவனின் அன்பைப் பெறவே நினைப்பார்கள். அதுவும் தொடுதல், முத்தம், கட்டிப்பிடிப்பது போன்ற சிறு விஷயங்களைத் தான் எதிர்பார்ப்பார்கள். ஆகவே முத்தம், கட்டிப்பிடிப்பது போன்ற செயல்களால் அவர்களது தேவையை பூர்த்தி செய்யுங்கள்.

முன் விளையாட்டுக்கள்
முன் விளையாட்டுக்களால் கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் பாலுணர்ச்சியைத் தூண்ட முடியாவிட்டால் பரவாயில்லை. இதனால் உங்கள் மனைவி வருத்தப்படப் போவதும் இல்லை. சொல்லப்போனால், இக்காலத்தில் கணவனின் அரவணைப்பே மனைவிக்கு பேரின்பத்தை வழங்கும்.

மென்மையான மசாஜ்
ஆம், கர்ப்பமாக இருக்கும் உங்கள் மனைவியின் தோள்பட்டை, முதுகு, கழுத்துப் பகுதி போன்ற இடங்களில் மென்மையாக மசாஜ் செய்து விடுங்கள். நீங்கள் கடுமையான முறையில் மசாஜ் செய்தால், அது குறைப்பிரசவத்திற்கு கூட வழிவகுக்கும் என்பதால் கவனமாக இருங்கள். கர்ப்ப கால உடலுறவின் போது பெண்கள் இந்த சிறு விஷயத்தையும் தன் கணவனிடம் எதிர்பார்ப்பார்கள்.

மெதுவான இயக்கம்

முக்கியமாக கர்ப்ப காலத்தில் உடலுறவில் ஈடுபடும் போது, புதுபுது நிலைகளை முயற்சிக்காதீர்கள். மேலும் இக்காலத்தில் உடலுறவில் ஈடுபடுவதாக இருந்தால், பொறுமையுடன் ஈடுபடுவது மிகவும் அவசியம்.

கருத்துக்களை தெரிவித்தல்
பெண்கள் செயலை விட காதல் வார்த்தைகளை அதிகம் விரும்புவார்கள். படுக்கை என்று வந்தாலும், அங்கும் பெண்கள் அதையே விரும்புவார்கள். ஆனால் ஆண்களுக்கு உடலுறவின் போது பேச பிடிக்காது. இருப்பினும் கர்ப்ப காலத்தில் உங்கள் மனைவியை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வார்த்தை விளையாட்டுக்கள் அவசியம் அமைச்சரே!

முத்தம்
முத்தத்தை சாதாரணமாக எடைப் போடாதீர்கள். முத்தம் இருவரிடையே நெருக்கத்தை அதிகரிக்க உதவுவதோடு, உணர்வுகளையும் வெளிப்படுத்த உதவும்.

கட்டிப்பிடிப்பது
கர்ப்ப காலத்தில் உங்கள் மனைவியை அடிக்கடி கட்டிப் பிடியுங்கள். இது அவருக்கு ஒரு பாதுகாப்பான உணர்வை வழங்குவதோடு, இருவருக்குள்ளும் இருக்கும் பிணைப்பை அதிகரிக்கும் மற்றும் உங்கள் மனைவியின் டென்சன் மற்றும் மன அழுத்தத்தைப் போக்க உதவும்.25 1495711842 6 pregnant sex 600

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button