oth

சுவாரஸ்சியா தகவல்! கர்ப்ப கால தாம்பத்தியம் ஆபத்தானதா..? ஆரோக்கியமானதா?

கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ளலாமா என்று சந்தேகம் பலருக்கு ஏற்படுகிறது. அதற்கான தீர்வை விரிவாக அறிந்து கொள்ளலாம்.

கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ளக்கூடாது என்பது வழி வழியாக இருந்து வரும் நம்பிக்கை. கருச்சிதைவு ஏற்பட்டிருந்தாலோ, பெண்ணுறுப்பில் அளவுக்கு அதிகமான இரத்தக் கசிவு ஏற்பட்டிருந்தாலோ, பனிக்குடலில் நீர் கசிவு ஏற்பட்டிருந்தாலோ அல்லது தகுதியற்ற கர்ப்பவாய் இருந்தாலோ, உங்கள் மருத்துவர் உடலுறவு கொள்ள வேண்டாம் என அறிவுறுத்துவார். மேலும் கர்ப்பம் தரித்த ஆரம்ப காலத்தில் ஏற்படும் கருச்சிதைவு, மரபுத்திரி அசாதாரண அமைப்புகள் அல்லது குழந்தை வளர்ச்சியில் ஏற்படும் பிரச்சனைகளால் தான் ஏற்படும்.

பொதுவாக கர்ப்ப காலத்தில் பல பெண்களுக்கு உடலுறவில் அதிக ஈடுபாடு ஏற்படும். இந்த பாலுணர்ச்சி உந்துதலுக்கு ஹார்மோன்கள் தான் காரணம். கர்ப்ப காலத்தின் போது ஹார்மோன் அளவு ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். அதுவே பாலுணர்ச்சியை தூண்ட காரணமாக அமையும்.

விலங்குகள் இனப்பெருக்க காலத்தில் மட்டுமே பாலுறவு கொள்ளக் கூடியவை. ஆனால் மனிதர்கள் எல்லா நாள்களிலும் பாலுறவு கொள்ளும் திறன் பெற்று இருக்கிறார்கள். கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு பாலுணர்வு கூடலாம் அல்லது குறையலாம். அதேபோல் கணவன் தனது மனைவியின் மேல் இருந்து பாலுறவு கொள்ள சிரமமாக இருக்கும். கர்ப்ப காலத்தில் பெண்ணின் பிறப்புறுப்பில் கிருமிகள் அதிகம் இருக்கலாம். அதனால் பாலுறவின் போது கிருமிகள் உள்ளே நுழைய வாய்ப்புகள் அதிகம்.

உடலுறவு மூலமாக பரவும் நோய்களில் இருந்து கர்ப்பம் உங்களை பாதுகாக்காது என்று நோய் கட்டுப்பாட்டு மையம் கூறுகிறது. கர்ப்ப காலத்தில் இவ்வகை நோய் உங்களை தாக்கினால், அது உங்கள் குழந்தையையும் பாதிக்கும். கர்ப்ப காலத்தில் இவ்வகை வியாதியிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள, இந்த வியாதி இல்லாத ஒருவருடனே உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் உடலுறவின் போது ஆணுறை பயன்படுத்துவதும் பாதுகாப்பை அதிகரிக்கும் என்று நோய் கட்டுப்பாட்டு மையம் கூறுகிறது.

இதன் காரணமாக கருப்பை நோய் தொற்று ஏற்படலாம். எனவே பாதுகாப்பான முறையில் பாலுறவு கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது பல நேரங்களில் பாதுகாப்பானதே என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உடலுறவு மற்றும் பாலுணர்வு கண்டிப்பாக கருச்சிதைவை ஏற்படுத்தாது. சொல்லப்போனால், பாலுணர்ச்சியால் ஏற்படும் சுருங்குதலுக்கும், பிரசவத்தால் ஏற்படும் சுருங்குதலுக்கும் வித்தியாசம் உள்ளது. இருப்பினும் மறுபடியும் மருத்துவரை அணுகி, உடலுறவு கொள்வது ஆபத்தை விளைவிக்காது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.pregnancy women health-Source: maalaimalar

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button