30.6 C
Chennai
Saturday, May 18, 2024
1493878473 7511
பழரச வகைகள்

வெயிலுக்கு குளுமையான ஸ்மூத்தி வகைகளை பார்ப்போம்….

பழங்களை மிருதுவாக்கி அதாவது ஸ்மூத்திகளாக செய்து உங்கள் காலை உணவு, மதிய உணவு மற்றும் இடைப்பட்ட உணவுகளை திட்டம் தீட்டி கொள்ள வேண்டும். இவற்றை முறையான நேரங்களில் உட்கொள்வதால் உங்கள் உடலில் உள்ள நச்சுக்களைப் போக்கி புத்துணர்ச்சி அளிப்பதுடன் ஆரோக்கியத்தையும் வழங்கும் பானங்களில் நிறைய உள்ளன. அவற்றில் மில்க் ஷேக், ஸ்மூத்தி போன்றவை குறிப்பிடத்தக்கவை.

1. மாம்பழ தேங்காய் பால் ஸ்மூத்தியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

மாம்பழம் – 1
தேங்காய் பால் – 1/2 கப்
குளிர்ந்த பால் – 1/4 கப் (காய்ச்சி ஆற வைத்த பால்)
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்
பாதாம் – 4
உலர் திராட்சை – 4

செய்முறை:

முதலில் மாம்பழத்தின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸியில் மாம்பழம், தேங்காய் பால், குளிர்ந்த பால், தயிர், தேன், சர்க்கரை, பாதாம், உலர் திராட்சை ஆகிய அனைத்தையும் ஒன்றாக போட்டு, நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதனை டம்ளரில் ஊற்றி பரிமாறினால், சுவையான மாம்பழ தேங்காய் பால் ஸ்மூத்தி தயார்.

2. ஸ்ட்ராபெர்ரி பொமிகிரனேட் ஸ்மூத்தி எப்படி செய்வதென்று கீழே தெரிந்து கொள்வோம்.

தேவையானவை:

ஸ்ட்ராபெர்ரி – 5 முதல் 6
பொமிகிரனேட் – 1 (உறித்தது)
குளிர்ந்த பால் – ஒரு கப் (காய்ச்சி ஆற வைத்த பால்)
சர்க்கரை அல்லது தேன் – சுவைக்கேற்ப

செய்முறை:

ஸ்ட்ராபெர்ரியின் காம்புகளை நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இதனை மாதுளை முத்துக்களோடு கலந்து பிளெண்டரில் போட்டு நன்கு பிளெண்ட் செய்யவும். பிறகு, வடிகட்டவும். காய்ச்சிக் குளிர வைத்த பாலை இதில் சேர்த்து தேவையான அளவு சர்க்கரை அல்லது தேனைக் கலந்து சில்லென்றுப் பரிமாறவும். சுவையான ஸ்ட்ராபெர்ரி பொமிகிரனேட் ஸ்மூத்தி தயார்.1493878473 7511

Related posts

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நெல்லிக்காய் ஜூஸ்

nathan

லெமன் பார்லி

nathan

இஞ்சி கற்றாழை ஜூஸ்

nathan

மாம்பழ மில்க் ஷேக்

nathan

கம்பு ஜூஸ் செய்வது எப்படினு தெரிஞ்சிக்கணுமா..?

sangika

அவுரிநெல்லி ஸ்மூத்தீ

nathan

சுவையான மாதுளை லஸ்ஸி தயாரிக்கும் முறை

nathan

கேரட் லஸ்ஸி

nathan

செம்பருத்தி பூ சர்பத்

nathan