29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
18386
ஆரோக்கிய உணவு

உடனடி எனர்ஜி வேண்டுமா? உங்களுக்கான 9 உணவுகள்

உணவு உண்பதே ஆற்றலைப் பெறத்தான். சிலருக்கு, அதிலும் சில உணவுகள் உடனடியாக ஆற்றலாக மாறி உடலையும் மனதையும் சுறுசுறுப்பாக்குகின்றன. உடல் சோர்வுற்று இருக்கும் நேரங்களில் இந்த உணவுகளை உண்பதன் மூலம் உடலுக்குத் தேவையான எனர்ஜியைப் பெருக்கி, சட்டென சுறுசுறுப்பாகலாம். உடனடி ஆற்றல் கிடைக்க கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

1. வாழைப்பழம்: வாழைப்பழத்தில், வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட், நார்ச்சத்து மற்றும் நல்ல கார்போஹைட்ரேட் நிறைவாக உள்ளன. இது உடனடி ஆற்றலைத் தரும். வாழை மட்டும் அல்ல… ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களும் உடனடி ஆற்றலைத் தரும். 100 கிராம் வாழையில் தோராயமாக 90 கலோரிகள் உள்ளன. இது உடனடி அற்றல் கிடைக்கச் செய்யும்.

2. முட்டை: முட்டையில் மஞ்சள் கருவில் பி வைட்டமின்கள் நிறைவாக உள்ளன. இவை, உணவை விரைவாக ஆற்றலாக மாற்ற உதவுகின்றன. மேலும், இதில் வைட்டமின் டி சத்தும் உள்ளது. கால்சியத்தை எலும்பு கிரகிக்க இது உதவுகிறது. முட்டையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி15, பி12, ஃபோலிக் அமிலம் உள்ளிட்ட சத்துக்களும் பாஸ்பரஸ், செலினியம் உள்ளிட்ட தாதுஉப்புகளும் நிறைவாக உள்ளன. எனவே, உடற்பயிற்சிக்குப் பிறகு அதிக ஆற்றல் தேவைப்படும் நேரத்தில் இதை எடுத்துக்கொள்வது நல்லது.

3. நட்ஸ்: நட்ஸில், நல்ல கொழுப்பு அதிகம் இருக்கிறது. மேலும், புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து இருக்கின்றன. உடல் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. அதிக ஆற்றலைக் கொடுக்கும். ரத்த செல்களின் உருவாக்கத்துக்கு உதவும். உடல் உறுப்புகளின் சீரான இயக்கத்துக்கு உதவும். வைட்டமின் இ நிறைந்திருப்பதால், செல்களைப் புத்துணர்வாக்கும்.

4. முளைகட்டிய தானியங்கள் மற்றும் பயறு: முளைகட்டிய தானியத்தில் புரதம் அதிகம். இதனுடன் காய்கறிகள் சேரும்போது, எலும்பை உறுதியாக்கும். கால்சியம் சற்று அதிகமாகவே கிடைக்கும். அனைத்துவிதமான ஊட்டச்சத்தும் நிறைந்த இவை, ஒரு முழுமையான உணவு. முளைகட்டிய பயறில் வைட்டமின்கள், தாதுஉப்புகள், என்சைம்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் போன்ற சத்துகள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கிறது. தோல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இதய நோய் ஏற்படாமல் தடுக்கிறது.

18386

5. தேன்: ஒரு ஸ்பூன் தேனைச் சாப்பிட்டுவந்தால் அரை மணி நேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்பாகும். உடலுக்குத் தேவையான கார்போஹைட்ரேடை அளித்து, நமக்குத் தேவையான எனர்ஜியைத் தருகிறது. சிறந்த ஆன்டிஏஜிங் பொருளாகச் செய்ல்படுகிறது. தொண்டை உலர்வதைத் தடுக்கிறது. புற ஊதாக் கதிர்வீச்சில் இருந்து பாதுகாத்து, செல்களுக்குப் புத்துயிர் அளிக்கிறது. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

6. சிவப்பு அரிசி: தானிய வகைகளில் ஆரோக்கியம் நிறைந்த அறிய உணவு, சிவப்பு அரிசி. சிவப்பு அரிசியில், மக்னீசியம், மாங்கனீஸ், செலினியம், துத்தநாகம் போன்ற தாதுஉப்புகள் அதிக அளவில் உள்ளன. வைட்டமின் இ சிவப்பு அரிசியில் உள்ளது. இதில் நார்ச்சத்து நிறைந்து இருப்பதால், செரிமானம் சுலபமாகும். சிவப்பு அரிசியில் உள்ள காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவைக் கட்டுக்குள்வைக்க உதவுகிறது. இதில் உள்ள தாதுஉப்புகள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகின்றன.

green%20tea 18575

7. கிரீன் டீ: கிரீன் டீயில் ஃப்ளேவோனாய்டு, கேட்டச்சின் முதலான பாலிபீனால்கள் அதிகம் உள்ளன. இவை சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களாகச் செயல்பட்டு, உடலில் உள்ள செல்கள் சிதையாமல் பாதுகாக்கின்றன. மேலும், கிரீன் டீயில் உள்ள சிறிதளவு காஃபின், மூளையில் உள்ள நியூரோ டிரான்ஸ்மிட்டர்களைத் தூண்டி, நரம்பு இயக்கங்களைப் புத்துணர்ச்சி அடையச் செய்கிறது. மூளை நன்றாக இயங்கும். சுறுசுறுப்பான உணர்வு கிடைக்கும்.

18134

8. தயிர்: தயிரில் உள்ள புரதம் புதிய செல்கள் வளரவும் தசைகளை வலுவாக்கவும் செய்கிறது. இதில் உள்ள வைட்டமின் பி12, நோய் எதிர்ப்பு சக்தியைக் அதிகரிக்கிறது. புரோபயாடிக் நிறைந்த தயிரில் துத்தநாகம், வைட்டமின் இ, பாஸ்பரஸ் ஆகியவை இருக்கின்றன. எலும்பு மற்றும் பற்களுக்குத் தேவையான கால்சியம் கிடைக்க உதவும்.

juice1 18440

9. பழச்சாறு: குறிப்பாக ஆப்பிள், ஆரஞ்சு, எலுமிச்சைப் பழச்சாறு குடிப்பது சிறந்தது. ஆப்பிளில் வைட்டமின்கள், நார்ச்சத்து, புரதம் ஆகியவை உள்ளன. எச்சில் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது. ஆப்பிளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட், மூளையில் நியூரோ டிரான்ஸ்மிட்டர்களைத் தூண்டுகிறது. ஆரஞ்சில் உள்ள வைட்டமின் சி, உடலில் உள்ள செல்களிலும் உடலில் உற்பத்தியாகும் ரசாயனங்களிலும் ஏற்படும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கிறது. இதனால், செல்கள் பாதுகாக்கப்பட்டு, நோய்கள் தடுக்கப்படுகின்றன.

தண்ணீர்: ஊட்டச்சத்துக்களை உடல் முழுவதும் கொண்டு செல்லும் பணியை ரத்தம் செய்கிறது. இரண்டு டம்ளர் தண்ணீர் குடிக்க, ரத்தத்தின் ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்லும் பணி துரிதமாகும். எனவே, கார்போஹைட்ரேட் நிறைந்த உணவை உட்கொண்டதும் இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்துவது இன்னும் உடனடி ஆற்றல் கிடைக்க உதவும்.

Related posts

ஆரோக்கியப் பலன்கள் அள்ளித் தருவதில் இது, `முந்திரிக்கொட்டை!’

nathan

5 நிமிட கஞ்சி….. யாரெல்லாம் தினமும் சாப்பிடலாம்!

nathan

வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

பீன்ஸ் சாப்பிட்டு வந்தால் நீரிழிவை கட்டுப்படுத்தும்!

nathan

ப்ளூ டீ பற்றி உங்களுக்கு தெரியுமா?

nathan

இது சத்தான அழகு

nathan

மிளகாயில் முடியை பராமரிக்க உதவும் ஊட்டச்சத்துக்கள் உள்ளதா?

nathan

உங்களுக்கு தெரியுமா வாரம் ஒரு முறை கருணைகிழங்கை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன

nathan

தெரிஞ்சிக்கங்க…உடல் எடையை குறைக்க உதவும் மிகவும் சிறப்பான இந்திய காலை உணவுகள்!!!

nathan