27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
FVGcWr9
ஆரோக்கிய உணவு

புளிப்பாக சாப்பிடலாமா?

மாங்காய் சாப்பிடுவது, சாம்பலை ருசிப்பது என கர்ப்ப காலத்தில் பெண்களின் வித்தியாச தேடல் காலங்காலமாகத் தொடர்கிற ஒன்றே. கர்ப்பிணிப் பெண் கேட்டால் முடியாதெனச் சொல்லாமல், இவற்றை எல்லாம் வாங்கிக் கொடுக்கும் ஆட்கள் நிறைய பேர். மசக்கையின் போது இப்படி காரசார, புளிப்பு உணவுகளை உட்கொள்வது சரிதானா? மகப்பேறு மருத்துவர் டாக்டர் ப்ரியா கண்ணன் விளக்குகிறார்.

”கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உமிழ்நீரின் சுரப்பு அதிகமாக இருக்கும். வாந்தி உணர்வு இருக்கும். மாங்காய், நெல்லிக்காய் மாதிரி புளிப்புப் பொருட்களை சாப்பிட்டால் வாய்க்கு இதமாக இருக்கும். அதே நேரத்தில் புளிப்புப் பொருட்களை அதிகமாக சாப்பிட்டால் வயிற்றில் அமிலத்தன்மையை அதிகமாக்கி நெஞ்செரிச்சல், எதுக்களிப்பு ஆகிய பிரச்னைகளை ஏற்படுத்தும். கர்ப்பிணிகளுக்கு பொதுவாக இரும்புச்சத்து குறைவாக இருக்கும். இதனால் சிலர் சாம்பல் சாப்பிடுவதை விரும்புவார்கள். சாம்பலை சாப்பிடவே கூடாது. உப்பும், காரமும் அதிகமுள்ள ஊறுகாயைத் தவிர்க்க வேண்டும். உப்பு அதிகமுள்ள உணவுப்பொருட்களை கர்ப்பிணிகள் சாப்பிட்டால் உயர் ரத்த அழுத்தம் உருவாகும் வாய்ப்புண்டு. கர்ப்பிணிகள், ஆசைப்பட்ட உணவுகளை அளவோடு சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். காரமான உணவுகளை சாப்பிட நேர்ந்தால் கடைசியாக தயிரோ அல்லது நீர் மோரோ எடுத்துக்கொண்டால் வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மை ஓரளவு குறையும்.” FVGcWr9

Related posts

சாப்பாட்டை வெறுக்கும் குழந்தைகளுக்கு அற்புதமான எளிய தீர்வு

nathan

கோடை வெயிலுக்கு குளுமை தரும் மோர்

nathan

இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்கும் பிளம்ஸ்

nathan

ஆலு பன்னீர் கோப்தா

nathan

தினமும் குங்குமப்பூ நீர் குடிங்க, அப்புறம் பாருங்க என்னலாம் நடக்குதுன்னு..!

nathan

எந்தெந்த உணவுகளை மீண்டும் சூடாக்கக்கூடாது ?

nathan

ஆஹா பிரமாதம் -மாம்பழ மில்க் ஷேக்

nathan

நாம் நல்ல பழக்கம் என்று கடைப்பிடிக்கும் சிலவன உண்மையில் தீய பலனை தான் அளிக்கின்றன!!!வாரத்தில் ஒரு மு…

nathan

தெரிஞ்சிக்கங்க… வெள்ளை ஒயின் உடலுக்கு ஆபத்தானதா?

nathan