அனைவரும் புளியோதரை மிகவும் பிடிக்கும். அன்று ஆந்திரா ஸ்டைலில் புளியோதரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
ஆந்திரா ஸ்பெஷல் புளியோதரை செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :
உதிரியாக வடித்த சாதம் – ஒரு கப்,
கடுகு – அரை டீஸ்பூன்,
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன்,
முந்திரிப்பருப்பு – 6,
பச்சை மிளகாய் – 2 (கீறவும்), தோல் சீவி, துருவிய இஞ்சி – ஒரு டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
பெருங்காயத்தூள், வெல்லம் – தலா அரை டீஸ்பூன்,
நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
கெட்டியாகக் கரைத்த புளி – கால் கப்,
மஞ்சள்தூள் – சிறிதளவு,
கறிவேப்பிலை – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
* வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு தாளித்து, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை, முந்திரி, இஞ்சி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
* அனைத்தும் நன்றாக வதங்கியதும் புளிக்கரைசல், உப்பு, வெல்லம், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
* கலவை கெட்டியான பிறகு ஆறிய சாதம் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.
* சூப்பரான ஆந்திரா புளியோதரை ரெடி.
* இதை அப்பளம், வடாம், சிப்ஸ் உடன் பரிமாறவும்.