31.9 C
Chennai
Friday, May 31, 2024
12 oats roti
சிற்றுண்டி வகைகள்

சூப்பரான ஓட்ஸ் வெஜிடேபிள் ரொட்டி

தற்போது காலை உணவாக ஓட்ஸ் எடுத்துக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அதிலும் அத்தகைய ஓட்ஸை எப்போதும் பாலுடன் சேர்த்து தான் சாப்பிட்டிருப்பார்கள். ஆனால் அந்த ஓட்ஸை பலவாறு செய்து சாப்பிடலாம். இங்கு அவற்றில் ஒன்றான ஓட்ஸ் வெஜிடேபிள் ரொட்டியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம்.

இதில் காய்கள் சேர்த்து செய்வதால், இது இன்னும் ஆரோக்கியமான காலை உணவாக இருக்கும். சரி, இப்போது அந்த ஓட்ஸ் வெஜிடேபிள் ரொட்டியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – 1 கப்
ஓட்ஸ் – 3/4 கப் (பொடி செய்தது)
கடலை மாவு – 1/2 கப்
கேரட் – 1 (துருவியது)
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் பேஸ்ட் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – 3 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
மல்லி தூள் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தயிர் – 1/4 கப்
தண்ணீர் – 1/2 கப்
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் எண்ணெய் தவிர்த்து, அனைத்து பொருட்களையும் போட்டு, 10 நிமிடம் மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போன்று தேய்த்து, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் தடவி, தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை ஒவ்வொன்றாக போட்டு, முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், ஓட்ஸ் வெஜிடேபிள் ரொட்டி ரெடி!!!

Related posts

இட்லி 65

nathan

குரக்கன் ரொட்டி

nathan

நட்ஸ் டிரைஃப்ரூட்ஸ் ரிச் லட்டு

nathan

சுவையான சத்தான ஆலூ பசலைக்கீரை சப்பாத்தி

nathan

சத்தான சுவையான கோதுமை காக்ரா

nathan

பூசணி அப்பம்

nathan

சோளம் – தட்ட கொட்டை சுண்டல்

nathan

சுவையான மினி ரவை ஊத்தாப்பம்

nathan

பட்டாணி பூரி

nathan