டியர் கேர்ள்ஸ், செல்போன் மூலமாக ஆண்களுக்கு சொல்லக்கூடாத 10 விஷயங்கள் என்னென்ன தெரியுமா…?
1. நாம இரண்டு பேரும் உடனே பேசணும் (We need to talk):
இப்படி ஒரு மெசேஜை, தன் ஆண் நண்பருக்கு ஒரு பெண் அனுப்பினால், அதற்கு ‘it’s over’ என்று ஆண்களால் அர்த்தம் கொள்ளப்படுகிறது. இது காதல் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமல்ல, அலுவலக ரீதியாகவும் ‘திக்’ என்ற மனநிலையை ஆண்களுக்குத் தரும். ஆக மொத்தத்தில் இந்த வார்த்தை நல்ல விஷயத்தில் முடியாது என்று அர்த்தம்.
2. நான் வரத் தாமதமாகும் 🙁 I’m late…)
இப்படி ஒரு மெசேஜை, காரணங்கள் ஏதுமின்றி ‘பிளைனாக’ அனுப்பி வைத்தால், ஆண்களால் இது பலவிதங்களில் அர்த்தம் கொள்ளப்படும். அதாவது, ‘பொய் சொல்கிறார்’ என்று.
‘period’ ஆக இருக்கும், தனிப்பட்ட மறைக்கக்கூடிய ரகசியம், அலுவலகத்தில் யாராலோ பிரச்னை… நேற்று பாஸ் திட்டியதால்… இப்படி…! காரணமில்லாமல் இப்படி ஒரு மெசேஜை உங்கள் ஆண் நண்பருக்கு அனுப்பாமல் இருப்பது நல்லது.
3. உண்மையிலேயே உனக்கு என்னைப் பிடிக்குமா? (Do you really love me or love me?)
பெண்களின் டிக்ஷனரியில் முதலில் இருப்பது இந்த வார்த்தைதான். ஏதாவது ஒரு காரியம் ஆகவேண்டும் என்றால் பெண்கள் பெரும்பாலும் இப்படித்தான் கேட்பார்கள் என்பது பாய்ஸ் மைன்ட் செட். சோ, இப்படி மெசேஜ் மூலமாக கேட்பதை முடிந்த அளவு தவிர்க்கவும்.
4. எல்லாம் முடிந்தது (அ) இத்தோடு முடித்துக் கொள்வோம் (It’s over);
இப்படி ஒரு மெசேஜை எந்த ஆண்களுக்கு அனுப்பினாலும் அதற்கு உறவு முறிந்தது என்றுதான் அர்த்தம். இப்படி அனுப்பிய மெசேஜிற்கு பதில் வரவில்லை என்றால், நீங்கள் பயப்படத் தயாராக வேண்டியிருக்கும். எனவே, எக்காரணம் கொண்டும் நல்ல உறவில் உள்ள ஆண்களுக்கு இப்படி ஒரு மெசேஜை அனுப்பிவிடாதீர்கள். பிறகு, அழுது தீர்க்காதீர்கள்.
5. அடுத்து என்ன செய்ய இருக்க?
இந்த வார்த்தை ஆண்களை இரண்டு விதத்தில் யோசிக்க வைக்கும். ஆண் நண்பரை பார்க்க விருப்பம் இல்லாமல் இருப்பது அல்லது அவர் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறீர்கள் என்பதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. மேலும், சமீபத்தில் என்ன பிரச்னை நடந்தது என்கிற அளவுக்கு ஆண்கள் யோசிக்க ஆரம்பிப்பார்கள். இறுதியில் நீங்கள் அவரை ‘செக்’ செய்வதாக எடுத்துக்கொள்ளப்படும். மொத்தத்தில் பிரச்னையை இன்னும் பெரிதாக்கிவிடும்.
6. நான் உன்னை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் (I see you)
இந்த பழமையான வார்த்தையை எப்பொழுதும் SMS ல் அனுப்பாதீர்கள். ‘அவளுக்கு என்மீது ஏதோ சந்தேகம் இருக்கு. அதனாலதான் இப்படி அனுப்பியிருக்கா..?’ என அவர்களை யோசிக்க வைக்க இது காரணமாகலாம்.
7. என்னை உனக்கு புடிக்கலையா… என்னை வெறுக்கிறியா…? (Are you ignoring me?)
நீங்கள் இப்படி மெசேஜை அனுப்பி வைத்து விட்டு, காத்திருங்கள். ஒன்று, ‘அப்படி எல்லாம் ஒன்றும் இல்ல’ என்று ரிப்ளை வரும். கண்டிப்பாக அந்த பதில் வெறுப்பு வார்த்தையாகவும், வெற்று வார்த்தையாகவும்தான் இருக்கும். அதற்கு இதுபோன்ற வார்த்தையை கேட்காமல் இருப்பதே நல்லது.
8. நான் உன்னை விரும்புகிறேன். (I love you)
முதன் முதலில் ஒருவரிடம் உங்கள் காதலை சொல்லும்போது, அதை SMS மூலமாக சொல்வதை தவிருங்கள். உங்கள் காதலை அவரிடம் நேரில் சொல்லுங்கள். உண்மையான, உணர்ச்சிகரமான அனுபவத்தை பெறுவீர்கள்.
9. பழைய மெசேஜின் ஸ்கிரீன் ஷாட்
இருவருக்கும் இடையில் மனஸ்தாபங்கள் ஏற்படும்போது, சில சமயம் உங்கள் நண்பர் சாட்டினை ஸ்கிரீன் ஷாட் செய்து அனுப்பும் போது மனஸ்தாபமானது, பிரச்னையாக உருவெடுக்கும்.
சில சமயம் ஸ்கிரீன் ஷாட் ப்ரூப்ஸ், பிரச்னையை உண்டாக்காமல் இருந்தாலும், ஒரு சில நேரங்களில் உங்களின் பிரிவுக்கு இது காரணமாகலாம். முடிந்த வரை ஸ்கிரீன் ஷாட் அனுப்புவதை க்ளியர் கட்டாக செய்யாமல் இருப்பது உங்கள் உறவு மேம்பட வழிசெய்யும்.
10. எதிரில் இருக்கும்போதே மெசேஜ் அனுப்புவது
பல நண்பர்கள் எதிர் எதிரே இருக்கும்போது கூட, மெசேஜில் பேசிக் கொள்வார்கள். ஹோட்டல், பார்க், இன்னும் சொல்லப் போனால் வீட்டிற்குள்ளேயே… உங்களுடைய துணையோ, நண்பரோ எதிரில் அமர்ந்திருக்கும்போது நேரடியாக எதையும் பேசிவிடுவது நல்லது. மெசேஜ் செய்து பேசும்போது ஒன்று அவரை பார்ப்பதை தவிர்ப்பதாக பொருள் கொள்ளப்படும்.