32.6 C
Chennai
Friday, Jul 17, 2026
சைவம்

பீன்ஸ் பருப்பு மசியல் சமையல் குறிப்பு – Beans Paruppu masiyal Samayal kurippu

தேவையான பொருட்கள் :
பீன்ஸ் – கொஞ்சம் (நறுக்கியது )
துவரம் பருப்பு – அரை கப்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்
புளி – நெல்லிக்காய் அளவு
பச்சை மிளகாய் -ஒன்று
தக்காளி – ஒன்று
உப்பு – தேவைக்கு ஏற்ப

தாளிக்க :
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
கடுகு , கருவேப்பில்லை – கொஞ்சம்

செய்முறை:

கொஞ்சம் எண்ணெய் விட்டு பீன்சை லேசாக வதக்கவும் (பச்சை வாடை போவதற்கு)
பருப்பு, தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள் & மிளகாய் தூள், உப்பு, புளி + இரண்டு கப் தண்ணீர் , அனைத்தையும் பீன்சொடு சேர்க்கவும் . தக்காளி , மிளகாய் எல்லாம் நறுக்கனும்னு அவசியம் இல்ல. (காய், பருப்பை எல்லாம் கொஞ்சம் கழுவிட்டு போடுங்கப்பா !)
நாலு இல்ல ஐந்து விசில் குக்கரில் வைக்கவும் (2-3 விசில் கூட போயிட்டாலும் பரவா இல்லை )
குக்கர் விசில் அடங்கியதும் மூடிய திறந்து லைட்டா கடையனும்.
கடைசியா மேல தாளிச்சு கொட்ட வேண்டியது தான்.
குறிப்பு:

காய் எதுவும் போடாம, வெறும் பருப்பு கடைந்தலும் சுவையா இருக்கும்.
பீன்ஸ்-கு பதிலா சவ்-சவ், முட்டைகோஸ் , புடலங்காய் சேத்துக்கலாம்.

Related posts

உருளைக்கிழங்கு ரெய்தா

nathan

சத்து நிறைந்த நெல்லிக்காய் சாதம்

nathan

பஞ்சாப் உருளைக்கிழங்கு

nathan

வாழைக்காய் புட்டு ரெசிபி

nathan

ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்பை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

nathan

செய்வது எப்படி உருளைக்கிழங்கு கார குழம்பு

nathan

கேரட் தால்

nathan

சத்தான சுவையான பருப்பு திணை கிச்சடி

nathan

கூட்டுக்கறி

nathan