பித்தம், தலைசுற்றல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு நார்த்தங்காய் நல்ல பலனை தரும். இன்று நார்த்தங்காய் வைத்து சூப்பரான சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
பித்தத்தைத் தணிக்கும் நார்த்தங்காய் சாதம்
தேவையான பொருட்கள் :
நார்த்தங்காய் – ஒன்று,
மிளகுத்தூள், சீரகத்தூள், கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு – தலா ஒரு ஸ்பூன்,
கடுகு – அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
பெருங்காயம் – சிறிதளவு,
சாதம் – ஒரு கப்,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
* நார்த்தங்காயை இரண்டாக நறுக்கி வைக்கவும். இரண்டு மூடியிலும் மிளகுத்தூள், சீரகத்தூளை தூவி, அடுப்பு பக்கத்தில் அனலில் வைக்கவும் (15 நிமிடம்).
* வாணலியில் எண்ணெய் விட்டு… கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, பெருங்காயம், மஞ்சள்தூள் தாளித்து, சாதத்தில் சேர்த்து நன்றாக கிளறவும்.
* கடைசியாக அனலில் வைத்த நார்த்தங்காயை எடுத்து சாறு பிழிந்து, உப்பு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
* சூப்பரான நார்த்தங்காய் சாதம் ரெடி.