27.8 C
Chennai
Friday, Mar 13, 2026
1480662091 0054
ஆரோக்கிய உணவு

மருத்துவ குணம் நிறைந்த இஞ்சி தொக்கு!!

இஞ்சி அஜீரணம், வலிகளைப் போக்கக்கூடியது. ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். சளி, இருமல், ஜலதோஷம் இருப்பவர்களுக்கு கைகண்ட மருந்தாக உள்ளது.

தேவையான பொருட்கள்:

இஞ்சி – 20 கிராம்
தனியா – 2 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
தேங்காய் – 1 டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு
புளி கரைச்சல் – 1 கப்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

இஞ்சியைத் தோல் சீவி, துருவி, கொஞ்சம் எண்ணெய்விட்டு வதக்கி அரைத்துக்கொள்ளவும். பின்னர் தனியா, உளுந்தம் பருப்பு,மிளகாயுடன், தேங்காயையும் சேர்ந்து வறுத்து அரைத்துக்கொள்ளவும்.

கடாயில் சிறிது எண்ணெய்விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, புளியைக் கெட்டியாகக் கரைத்து ஊற்றிக் கொதிக்கவிடவும். கொதிக்கும்போது, தேங்காய், தனியா, மிளகாய் அரைத்த விழுது, இஞ்சி விழுது, உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். எண்ணெய் பொங்கிவரும்போது, துண்டு வெல்லம் சேர்த்து இறக்கவும்.

இதனை சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி என எல்லாவற்றுக்கும் தொட்டுக்கொள்ளலாம். சுவையாகவும் சத்துக்கள் நிறைந்தும், ஜீரணத்துக்கு நல்லது.1480662091 0054

Related posts

பன்னீர் செட்டிநாடு

nathan

sakkaravalli kilangu benefits in tamil – சக்கரவள்ளி கிழங்கு நன்மைகள்

nathan

தெரிஞ்சிக்கங்க…சர்க்கரை நோயாளிகள் வேர்க்கடலை சாப்பிடலாமா?

nathan

உங்களுக்கு தெரியுமா வெறும் வயிற்றில் தினமும் ஒரு துண்டு இஞ்சி சாப்பிடா இவ்வளவு நன்மை இருக்கா..?

nathan

இந்த பிரச்சனை உள்ளவர்கள் கொய்யாப்பழம் தெரியாமகூட சாப்பிட வேண்டாம்… அல்லது ஆபத்தானது…!

nathan

தெரிஞ்சிக்கங்க…இரண்டு கிராம்பை வாயில் போட்டு மென்று சாப்பிடுங்க…

nathan

இதயத்தை பாதுகாக்கும் ஆட்டுப்பால்

nathan

பேலன்ஸ் டயட் டிபன் ரெடி!

nathan

ஓமம் மோர்

nathan