p10a
ஆரோக்கிய உணவு

சிக் உடலுக்கு ஜி.எம் டயட்!

ஜெனரல் மோட்டார் நிறுவனம், தன் ஊழியர்கள் எடை குறைப்பதற்காக, ஆராய்ந்து கண்டுபிடித்த டயட்தான் ஜி.எம் டயட்! ஹாலிவுட், பாலிவுட் செலிபிரிட்டிகள் உள்பட விரைவாக எடை குறைக்க விரும்பும் பலரும் இந்த டயட்டைப் பின்பற்றுகிறார்கள்.

மிகவும் கட்டுப்பாடான டயட் என்பதால், ஆறு மாதங்களுக்கு ஒருமுறைதான் இதைப் பின்பற்ற வேண்டும். ஒரு கோர்ஸை ஏழு நாட்களுக்குப் பின்பற்ற வேண்டும். இதன்மூலம், அதிகபட்சமாக 10 கிலோ வரை எடை குறைத்து, ஸ்லிம் ஆக முடியும். சருமம் பொலிவு பெறும். நச்சுக்கள் நீங்கும். இதோ. கன்சல்டன்ட் நியூட்ரிஷியனிஸ்ட் அனிதா பாலமுரளி அளிக்கும் ஜி.எம் டயட் சார்ட்!

முதல் நாள்

p10a

பழங்களால் ஆன டயட்டே முதல் நாள் மெனு. பழங்களைத் தவிர காய்கறிகள், சாதம் எதையும் தொடவே கூடாது. தர்பூசணி, மாதுளை, ஆப்பிள், எலுமிச்சை, ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றைச் சாப்பிடலாம். வாழை, லிச்சி, மாம்பழம் மற்றும் திராட்சையைச் சேர்க்கக் கூடாது.

இரண்டாம் நாள்

p10b

முதல் நாள் பழங்களாகச் சாப்பிட்டதில் உடல் சற்று சோர்ந்திருக்கும். எனவே, போதிய எனர்ஜி கிடைப்பதற்காக வேகவைத்த ஓர் உருளைக்கிழங்கை ஒரு டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்துக் காலை உணவாகச் சாப்பிடலாம். வெண்ணெய் சேர்ப்பதால் நல்ல கொழுப்பு உடலில் சேரும். பின் காய்கறிகளைப் பச்சையாகவோ, எண்ணெய் சேர்க்காமல் வேகவைத்தோ மதியமும் இரவும் சாப்பிடலாம். கீரைகளையும் வேகவைத்துச் சாப்பிடலாம். முட்டைகோஸ், கேரட், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளை சாலட் செய்து நிறையவே சாப்பிடலாம்.

மூன்றாம் நாள்

p10c

வாழைப்பழம், உருளைக்கிழங்கைத் தவிர்த்து மற்ற காய்கறி, பழங்கள், கீரைகளைச் சாப்பிடலாம். சாலட், சமைத்தது என எந்தவிதத்திலும் காய்கறிகளை எடுத்துக்கொள்ளலாம்.

நான்காம் நாள்

p10d

ஒரு டம்ளர் பால் (ஸ்கிம்டு மில்க்) மற்றும் இரண்டு வாழைப்பழங்களை தலா மூன்று வேளையும் சாப்பிட வேண்டும். கடந்த மூன்று நாட்களாக ஜி.எம் டயட் பின்பற்றி இருப்பதால், உடலில் சோடியத்தின் அளவு குறைந்திருக்கும், வாழைப்பழத்தை உட்கொள்வதன் மூலம் உடலுக்கு வேண்டிய சோடியம் மற்றும் பொட்டாசியத்தைப் பெறலாம். பால் மற்றும் வாழைப்பழத்துடன் தக்காளி, வெங்காயம், குடமிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து, சூப் செய்து குடிக்கலாம்.

ஐந்தாம் நாள்

p10e

முளைகட்டிய பயறை வேகவைத்துச் சாப்பிடலாம். அல்லது பிரவுன் அரிசி சாதத்துடன் தயிரும் தக்காளியும் சேர்த்துச் சாப்பிடலாம். ஐந்தாம் நாளில் தக்காளி அவசியம் இருக்க வேண்டும். மேலும், வேகவைத்த சிக்கன் அல்லது மீல் மேக்கருடன் காட்டேஜ் சீஸையும் சேர்த்துக்கொள்ளலாம். இந்த நாளில் ஒரு பவுல் சூப்பும் எடுத்துக்கொள்ளலாம்.

ஆறாம் நாள்

p10f

ஐந்தாம் நாள் பின்பற்றியதைப்போல முளைகட்டிய பயறு அல்லது பிரவுன் அரிசி சாதத்துடன் தயிர் சாப்பிடலாம். சிக்கன் அல்லது மீல் மேக்கருடன் காட்டேஜ் சீஸ் சாப்பிடலாம். இதர காய்கறிகளும் சாப்பிடலாம். ஆனால், தக்காளி சேர்க்கக் கூடாது. சூப் குடிக்கலாம்.

ஏழாம் நாள்

p10g

பிரவுன் அரிசி சாதத்துடன் காய்கறிகள், கீரைகள், பழங்கள் என எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். முடிந்தவரை சாதத்தைக் குறைத்துக்கொண்டு காய்கறிகள், பழங்களை உண்பது மிகவும் நல்லது.

உங்கள் கவனத்துக்கு.

முதல் ஆறு நாட்களில் ஜூஸ், டீ, காபி குடிக்கக் கூடாது. பிளாக் டீ, பிளாக் காபி மற்றும் சர்க்கரை சேர்க்காத எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம்.

ஒவ்வொரு நாளும் தவறாமல் 45 நிமிடங்கள் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். களைப்பாக இருந்தால் போதிய ஓய்வு எடுத்துவிட்டு உடற்பயிற்சியைத் தொடர வேண்டும். ஜி.எம் டயட்டில் உடற்பயிற்சியும் ஓர் அங்கம். எனவே, தினமும் குறைந்தது 10 ஆயிரம் அடி அல்லது 3 கி.மீ. தூரம் நடப்பது. அரை மணி நேரம் நீந்துவது, சைக்கிளிங் போவது போன்ற கார்டியோ பயிற்சிகளை செய்யலாம்.

ஏழு நாளும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.

உங்களின் மருத்துவர் அல்லது டயட்டீஷியனிடம் தொடர்ந்து அறிவுரை பெற வேண்டும். அளவுக்கு அதிக சோர்வு, படபடப்பு, மயக்கம் இருந்தால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். சர்க்கரை நோய் உள்ளவர்கள், முதியவர்கள் இந்த டயட்டை முயற்சிக்க வேண்டாம்.

Related posts

கேரட் உருளைக்கிழங்கு சூப்

nathan

சூப்பர் டிப்ஸ் இரவில் ஊற வையுங்கள்! மறுநாள் சாப்பிடுங்கள்!

nathan

தெரிஞ்சிக்கங்க…கசகசாவை குறைந்த அளவில் சாப்பிட்டு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

குளிர்காலத்தில் சூடாக இருக்க உதவும் உணவுகள்!

nathan

சரியான சருமத்தை பெற சாப்பிட வேண்டிய 5 உணவுகள்

nathan

நீரிழிவு நோயாளிகள் இந்த பழங்களை தயவுசெய்து சாப்பிடாதீங்க… என்னென்ன பழங்கள்னு தெரியுமா?

nathan

ரமலான் நோன்பு இருக்கும் போது ஏன் பேரிச்சம்பழம் சாப்பிட வேண்டுமென்று தெரியுமா?

nathan

தேனை தண்ணீரில் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா இட்லி சாம்பார் ஈசியாக செய்வது எப்படி என்று?

nathan