29.8 C
Chennai
Sunday, Nov 17, 2024
201705020944224046 Exercises to push your Hands fingers SECVPF
ஆரோக்கியம் குறிப்புகள்

கை, விரல்களில் வலிகள் தீர செய்ய வேண்டிய பயிற்சிகள்

எழுத்து, இசை மற்றும் கணினி பயன்படுத்தும் துறைகளில் வேலை பார்ப்போர் கைகள், விரல்கள் மற்றும் மூட்டுகள் ஆகியவற்றுக்கான அவசியப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

கை, விரல்களில் வலிகள் தீர செய்ய வேண்டிய பயிற்சிகள்
கை, விரல், கை மூட்டு, தோள் பட்டை ஆகிய இடங்களில் பிடிப்பு, வலி ஏற்படுவதை தசைநார் பிரச்சினை என்கிறோம். இதனால் கைகளை மடக்கவும், நீட்டவும் முடியாமல் வலி ஏற்படும். இந்த மாதிரியான தசைநார் பிரச்சினை ஏற்படும்போது, பெருவிரலில் அதிக அளவில் வலி ஏற்படும். அதை வைத்தே இது தசைநார் பிரச்சினை என அறிந்து கொள்ள முடியும். கைகளுக்கு இடைவெளியே இல்லாமல் தொடர்ந்து வேலை கொடுத்துக் கொண்டே இருப்பதால் தான் இது போன்ற தசைநார் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இதற்கு பேனாவைப் பிடித்து எழுதும் முறைகளும் ஒரு காரணம்தான். ஏனெனில், சிலர் பேனாக்களை இறுக்கமாகப் பிடித்து எழுதுவார்கள். ஒரு சிலர் சாய்த்து பிடித்து எழுதுவார்கள். தொடர்ச்சியாக இடைவெளியே இல்லாமல் எழுதிக்கொண்டே இருந்தாலும், தசை நார் பிரச்சினைகள் ஏற்படும். பெரும்பாலும் எழுத்துத் துறைகளில் உள்ளவர்களுக்கு, குறிப்பாக 30 முதல் 50 வயதுள்ளவர்களுக்கு இந்த பிரச்சினை வரும். சில மாணவர்களுக்கு அதிக அளவில் எழுதுவதால் கூட வரலாம்.

தட்டச்சு இயந்திரம் அல்லது கணினியில் தட்டச்சு செய்பவர்கள் விரல்களுக்கு அதிக அளவில் வேலை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கும் இது போன்ற பிரச்சினைகள் வரும். சில தட்டச்சுகள் கடினமானவையாக இருக்கும். அப்போது விரல்களுக்கு அதிக அளவு பளு கொடுப்பதால், விரல்கள் வலுவிழந்து வலியை ஏற்படுத்தும். டைப்ரைட்டிங், டேட்டா என்ட்ரி போன்ற தட்டச்சு தொடர்பான வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கும் இந்தப் பிரச்சினை வரலாம். மேலும், வீணை, கிடார், கீ போர்டு போன்ற இசைக்கருவிகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கும் கை விரல்களில் வலி, பிடிப்பு ஆகியவை ஏற்படும்.

எழுத்து, இசை மற்றும் கணினி பயன்படுத்தும் துறைகளில் வேலை பார்ப்போர் கைகள், விரல்கள் மற்றும் மூட்டுகள் ஆகியவற்றுக்கான அவசியப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எழுதுபவர்கள், சரியான முறையில் பேனாவைப் பிடித்து எழுதக் கற்றுக்கொள்ள வேண்டும். படுத்துக்கொண்டே எழுதுவது, சரியான நிலையில் இல்லாமல் எழுதுவது போன்ற செயல்களைத் தவிர்ப்பது நல்லது. எந்த வேலையாக இருந்தாலும், தொடர்ந்து செய்யாமல் சற்று இடைவெளிவிட்டுச் செய்வது நல்லது.

கைகள், விரல்களில் அடிக்கடி நெட்டி முறிப்பதைத் தவிர்க்கலாம். நெட்டி முறிப்பதால், இரண்டு மூட்டுகளின் இடையில் உள்ள வழவழப்புத்தன்மை பாதிக்கும். கடினமான தட்டச்சுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். நிமிர்ந்த நிலையில், சவுகரியமான நாற்காலியில் உட்கார்ந்து வேலை பார்க்க வேண்டும். கைகளிலும், விரல்களிலும் தேங்காய் எண்ணெய் தடவி, மென்மையாக மசாஜ் கொடுக்கலாம். தொடர்ந்து வலி, வேலை செய்ய முடியாத நிலை இருந்தால், மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

201705020944224046 Exercises to push your Hands fingers SECVPF

விரல்களுக்கு என சில பயிற்சிகளைச் செய்யலாம். ஸ்ட்ரெஸ் பால், குழந்தைகள் விளையாடும் களிமண் ஆகியவற்றைக் கைகளில் வைத்துப் பிசையலாம். இவையும் விரல்களுக்கான சிறந்த பயிற்சிகள்தான். வளைந்து கொடுக்கக்கூடிய கயிறுகளை, விரல்களுக்கு இடையே வைத்தும் விரல்களுக்கான பயிற்சிகளைச் செய்யலாம். இதற்கு ரப்பர் பேண்ட் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். ஏனெனில், பயிற்சி செய்யும்போது ரப்பர் பேண்ட் அறுந்து, கண்ணிலோ கைகளிலோ வேகமாகப் பட்டு காயங்களை ஏற்படுத்தக்கூடும்.

கை விரல்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை மடக்கி, நீட்டி வருவதும் நல்ல தீர்வாகும். வெந்தயம், மிளகு ஆகியவற்றைத் தட்டில் கொட்டி அதை ஒவ்வொன்றாக விரல்களால் எடுப்பதும் சிறந்த பயிற்சி.

கட்டைவிரல் நுனியோடு மோதிர விரலின் நுனி தொடுவது, அதுபோல, மற்ற அனைத்து விரல்களும் கட்டை விரல் நுனியைத் தொடுவது என்பதுபோல, இந்தப் பயிற்சியை ஒவ்வொரு விரலுக்கும் இரண்டு நிமிடங்கள் என நேரம் ஒதுக்கிச் செய்வது நல்லது.

Related posts

ஆண்கள் ஏன் மனைவியை விட்டு விலகிப் போகின்றார்கள் தெரியுமா ?அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்…

nathan

உங்களுக்கு தெரியுமா? ஓட்ஸை இப்படி சாப்பிட்டால் மிக வேகமாக எடை குறையுமாம்!

nathan

செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுகிறதா ?உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

முதுமையில் ஆரோக்கியமாய் வாழ இளமையில் செய்ய வேண்டியவை ?தெரிஞ்சிக்கங்க…

nathan

கோடை காலத்தில் யார் எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம்?

nathan

உங்களுக்கு அழகான தொடையை பெற வேண்டுமா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பமாக இந்த மாதம் மிகவும் சிறந்தது!

nathan

திரவ டயட் உண்மையில் எடையை குறைக்க உதவுமா? தெரிந்துகொள்வோமா?

nathan

நீரிழிவு நோயினால் அவதிப்படுபவர்கள் செய்ய வேண்டியவை..!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan