33.9 C
Chennai
Wednesday, Jun 26, 2024
10 1441865129 4amazinghealthbenefitsofmathifish
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு மத்தி மீன் பிடிக்குமா??? அப்ப இனிமேல் கொஞ்சம் அதிகமாவே சாப்பிடுங்க!!!!

பெரும்பாலான நடுத்தர மக்களின் வீட்டில் ஞாயிறுகளில் கமகமக்கும் குழம்பு, மத்தி மீன் குழம்பு. மற்ற மீன்களோடு ஒப்பிடுகையில் மத்தி மீனின் விலை மிகவும் குறைவு தான். 2000-களில் கிலோ ஐந்து, பத்து ரூபாய்க்கு கூட மத்தி மீன் கிடைத்து வந்தது.

விலையில் குறைவாக இருந்தாலும், நலனில் நிறைவானது மத்தி மீன். கண், இதயம், நீரிழிவு, எலும்பின் வலிமை என உடல் முழுக்க பல நலனை தருகிறது மத்தி மீன். உங்கள் உணவுப் பழக்கத்தில் மத்தி மீனை சேர்த்துக் கொள்வதால் உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது….

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்
நீரிழிவு நோய் உள்ளவர்கள் மத்தி மீன் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாகி, இரத்தத்தில் இருக்கும் சர்கரையின் அளவை கட்டுக்குள் கொண்டவர முடியும்.

எலும்புகள் வலிமையடையும்
மத்தி மீனில் இருக்கும் கால்சியம் சத்து எலும்புகளின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும் நல்ல பலனளிக்கிறது.

இதய பாதிப்பை குறைக்கும்
மத்தி மீனில் இருக்கும் வைட்டமின் பி 12 உடலில் இருக்கும் ஹோமோசைஸ்டீன் அளவை சமநிலைப்படுத்தி இதய சுவர்கள் பாதிப்படைவதை தடுக்கிறது.

முன் கழுத்துகழலை நோய்
மத்தி மீனில் இருக்கும் அயோடின் தாதுசத்து முன் கழுத்துகழலை நோய் ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கிறது.

கால்சியம் மாத்திரைகள்
மத்தி மீனில் செல்களில் இருந்து தான் கால்சியம் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த மாத்திரைகளை சாப்பிடுபவர்களுக்கு சருமம் பளிச்சிடும்.

கண்பார்வை அதிகரிக்கும்
மத்திமீனை உணவில் சேர்த்துக் கொள்வதால் கண்பார்வை குறைபாடுகள் நீங்கி. பார்வை திறன் அதிகரிக்கும்.

டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள் விலையில் குறைவாகவும், நலனில் நிறைவாகவும் இருக்கும் மத்தி மீனை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்வதால் உங்களக்கு நல்ல உடல்திறன் கிடைக்கப் பெரும்.

10 1441865129 4amazinghealthbenefitsofmathifish

Related posts

தினம் 3 உலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

மணத்தக்காளி கடைசல்

nathan

நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த அவரைக்காய்

nathan

காலையில் சத்தான டிபன் ராகி உப்புமா

nathan

கட்டாயம் தவிர்க்க வேண்டிய உப்பு அதிகம் நிறைந்த உணவுப் பொருட்கள்!!!

nathan

ஆண்களே கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க முருங்கைக்காயில் இவ்வளவு நன்மைகளா?..

nathan

தெரிஞ்சிக்கங்க…அதிக அளவில் வைட்டமின் சி அடங்கிய உணவுகள் எவை தெரியுமா?

nathan

சுவையான நெத்திலி கருவாடு தொக்கு!

nathan

தெரிஞ்சிக்கங்க…ஆரோக்கியமான தமிழ்நாட்டு காலை உணவுகளும்… அதன் நன்மைகளும்…

nathan