26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
10 1441881942 1 exercise4 600
ஆரோக்கியம் குறிப்புகள்

சிக்ஸ் பேக் வைக்க நினைக்கும் ஆண்களுக்கான அதிபயங்கர எச்சரிக்கை!

முன்பெல்லாம் ஆண்கள் தற்காப்பு கலையான சிலம்பு, மல்யுத்தம், குத்துச்சண்டை ஆகியவற்றைக் கற்று தங்களின் உடலமைப்பைக் கட்டுக்கோப்புடன் பராமரித்தனர். நாளடைவில் கராத்தே, குங்பூ போன்றவற்றை மேற்கொண்டனர். தற்போது தங்களின் உடலமைப்பை பராமரிப்பதற்கு உடற்பயிற்சி கூடத்தில் பல மணிநேரங்களை செலவழிக்கின்றனர்.

திரைப்படங்களில் அமீர்கான், சூர்யா, சிம்பு போன்றோர் சிக்ஸ் பேக் வைத்து நடிப்பதைப் பார்த்து, தற்போது ஆண்களிடையே சிக்ஸ் பேக் மோகம் அதிகரித்துவிட்டது. மேலும் அந்த சிக்ஸ் பேக் வைப்பதற்காக ஸ்டீராய்டு என்னும் ஊக்கமருந்தை சிலர் பயன்படுத்துகின்றனர். ஆனால் இப்படி ஸ்டீராய்டு பயன்படுத்துவது உயிருக்கே உலை வைக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சிக்ஸ் பேக் என்றால் என்ன? பொதுவாக உடலில் சேரும் கொழுப்புக்கள் உடலியக்கத்தின் காரணமாக கரைந்துவிடும். ஆனால் சில கொழுப்புக்கள் கரையாமல் ஆங்காங்கு தங்கிவிடும். அப்படி தங்கும் கொழுப்புக்களைக் கரைத்து வயிற்றுப் பகுதியில் தசைகளாக உருமாற்றுவது தான் சிக்ஸ் பேக். இந்த சிக்ஸ் பேக்கை நீண்ட நாட்கள் பராமரிப்பது என்பது கடினம். அதற்காக தினமும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதோடு, சிலர் ஸ்டீராய்டு மருந்தை எடுத்து கொள்கிறார்கள்.

எதற்காக ஸ்டீராய்டு? ஸ்டீராய்டு எடுத்துக் கொள்வதால், உடலில் ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படும். அதனால் ஆண்மைக்கு காரணமான டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஹார்மோனின் அளவு அதிகமாகும். உடல் எடை அதிகரிக்கும். தசைகளின் வளர்ச்சி அதிகமாகும்

ஸ்டீராய்டு பக்கவிளைவுகள் ஸ்டீராய்டு எடுப்பதால், ஆண்மை குறைவு, கல்லீரல் புற்றுநோய், குரலில் மாற்றம், அதிக அளவிலான முடி வளர்ச்சி, பார்வை குறைபாடு, நரம்பு தளர்ச்சி போன்றவை ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே உடல் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு, தினமும் உடற்பயிற்சியும், ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு வந்தாலே போதும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்து சிக்ஸ் பேக் வைப்பவர்கள், உடலில் கொழுப்பை 9 சதவீதமாகவும், நீர்ச்சத்தை 40 சதவீதமாகவும் குறைத்து, புரதச்சத்தின் அளவை அதிகரிக்க வேண்டும். இப்படி புரதச்சத்தை அதிகம் எடுப்பதால், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிப்பிற்குள்ளாகும். ஒரு கட்டத்தில் சிறுநீரகம் செயலிழக்கக்கூட வாய்ப்புள்ளது. மேலும் சிக்ஸ் பேக் வைப்பதற்காக அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதால், உடலின் வெப்பமும் அதிகமாகும் என்கிறார்கள்.

எலும்பு சிகிச்சை நிபுணர்களின் கருத்து சிக்ஸ் பேக் வைப்பதற்காக, கடுமையான உடற்பயிற்சியை செய்யும் போது, தசைநார்கள் வெளியே தெரிய ஆரம்பிக்கும். ஒருவருக்கு மிகவும் வலிமையான தசைநார்கள் தான் அவசியம். ஏனெனில் தசைநார்கள் தான் முதுகு வலி, உடல் வலி, காயம் போன்றவை ஏற்படாமல் தடுக்கும். ஆனால் சிக்ஸ் பேக் வைக்க மேற்கொள்ளும் உடற்பயிற்சியினால், கடுமையான உடல் வலிகள் மற்றும் பிரச்சனைகளைத் தான் அதிகம் சந்திக்க நேரிடும்.

சிக்ஸ் பேக் மோகம் வேண்டாம் சிக்ஸ் பேக் அழகு என்றாலும், அழகுக்கு ஆசைப்பட்டு, ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். மேலும் உடல் கட்டமைப்புடன் இருக்க தினமும் உடற்பயிற்சியுடன், போதிய ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு, ஆரோக்கியமான பழக்கங்களைப் பின்பற்றுங்கள். அழகை விட ஆரோக்கியம் தான் முக்கியம்.

10 1441881942 1 exercise4 600

Related posts

உஷாரா இருங்க…! இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் ஆபத்தானவரை காதலிக்கிறீர்கள் என்று அர்த்தம்…

nathan

வெள்ளைமுடியை கருமையாக்கவும் முடி நன்றாக வளரவும் ‘இந்த’ படவுர் யூஸ் பண்ணா போதுமாம்…!தெரிஞ்சிக்கங்க…

nathan

பற்களில் காரை படிந்துள்ளதா..? இனி கவலை எதற்கு.

nathan

சூப்பர் டிப்ஸ்! கரப்பான் பூச்சிகளை விரட்டுவதற்கு சில எளிய வழி முறைகள்…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இரவில் உள்ளாடையுடன் உறங்குவது சரிதானா?

nathan

அறுசுவை உணவில் தயிரும் வந்தாச்சு

nathan

பெண்கள் ஆண்களிடம் கவனிக்கும் விஷயங்கள்

nathan

கண்கள் எதற்கு அடிக்கடி துடிக்குதுன்னு தெரியுமா?

nathan

தம்பதியர் குழந்தை பெற்றுக்கொள்ள தாமதிக்கலாமா? |

nathan