30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
ஆரோக்கியம் குறிப்புகள்

நோய் எதிர்ப்பு சக்தி தாறுமாறாக அதிகரிக்க வேண்டுமா? இதை படியுங்கள்

பொதுவாக ஆயுர்வேத மருத்துவ முறையில் தேங்காய் பால் மிகவும் சத்தானதாக கருதப்படுகிறது. தேங்காய் பாலில் ஹைப்பர்லிபிடெமிக் சமநிலைப் பண்புகளைக் கொண்டுள்ளது.

இதில், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன. மேலும், இதில் அதிக அளவு லாரிக் அமிலம், மெக்னீசியம், இரும்புச் சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துகள் காணப்படுகிறன.

இதில் தினமும் டீ போட்டு குடிப்பதனால் உடலுக்கு பல நன்மைகளை தருவதாக கூறப்படுகின்றது. தற்போது அதில் எப்படி டீ தயாரிக்கலாம்? இதன் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.

தேவைப்படும் பொருட்கள்
தண்ணீர் – 4 கப்

கிரீன் டீ பைகள் – 3

தேங்காய்பால் – கால் கப்

கிரீம் பால் – 2 தேக்கரண்டி

நாட்டுச் சர்க்கரை -1 தேக்கரண்டி

செய்முறை
தேங்காய் பால் கிரீன் டீ தயாரிக்க, ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீரை கொதிக்க வைத்து விட்டு, மூன்று கிரீன் டீ பைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பின் 1/4 கப் தேங்காய் பால் மற்றும் 2 டீஸ்பூன் கிரீம் பாலை சேர்த்து நன்றாகக் குலுக்கி விட்டு, பின் கிரீன் டீ பையை அகற்றிக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமிருந்தால், நீங்கள் அதில் ஒரு தேக்கரண்டி நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்துக் கொள்ளலாம்.

குறிப்பு
தேங்காய் பால் டீயை அதிகமாக அருந்துவதன் மூலம் கர்ப்பிணிகள் அல்லது பாலூட்டும் பெண்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்படும். அதோடு, செரிமானப் பிரச்சனைகளும் ஏற்படும்.

நன்மைகள்
தேங்காய் பாலில் டீ அருந்துவது உங்கள் சருமத்தை அற்புதமாக வைத்திருக்க உதவும்.

தேங்காய் பால் டீயும் உடல் எடையைக் குறைக்க உதவும். எடையை அதிகரிக்கச் செய்யும் கொழுப்புகளை அழிக்கும்.

நீங்கள் தேங்காய் பால் டீயை அருந்தினாலும், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

செரிமானக் கோளாறுகள் மற்றும் எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி ஆகியவற்றில் இருந்தும் விடுபட தேங்காய் பால் டீ வழிவகுக்கும்.

Related posts

30 வயதுகளில் இருக்கும் பெண்கள் எடையை வேகமாக குறைக்க என்ன செய்யணும் தெரியுமா?

nathan

ரத்தத்தை சுத்தமாக வைப்பது எப்படி?தெரிந்துகொள்வோமா?

nathan

குழந்தை வயிற்றுப்போக்கு நிற்க வீட்டு வைத்தியம்

nathan

பெரும்பாலான பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை வீட்டு வைத்திய முறையில் இதை சரி செய்யலாம்

nathan

ஒரு வாரத்தில் உடல் பருமனையும் குறைக்க சூப்பர் பானம்!…

nathan

உங்களுக்கு தெரியுமா சிறுநீரகங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மிகவும் மோசமான பழக்கங்கள்!!!

nathan

boy baby symptoms in tamil – ஆண் குழந்தை அறிகுறிகள்

nathan

நயன்தாராவின் கம்பீரமான அழகுக்கு காரணம் இந்த ரகசியங்கள்தானாம்…!

nathan

நீங்க சிக்கன் அதிகம் சாப்பிடுவீங்களா? அப்ப கட்டாயம் படிச்சு பாருங்க.

nathan