25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
shutterstock 359953412 12196
ஆரோக்கிய உணவு

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி!

விளம்பரங்களில், `புஸ்ஸ்ஸ்ஸ்…’ எனப் பொங்கி வரும் பூரியைப் பார்த்தாலே சாப்பிட வேண்டும் என்று நமக்குத் தோன்றும். ஆனால், அதைத் தயாரிப்பதற்குத் தேவைப்படும் எண்ணெயைப் பார்த்தால், உடல் எடை, சர்க்கரை நோய், கொழுப்புச்சத்து போன்ற பல உபாதைகள் நினைவுக்கு வந்து, `எங்களுக்குப் பூரியே வேண்டாம்’ என்று சொல்லத் தோன்றும்.

பூரி

“எண்ணெய்க்குப் பதிலாக தண்ணீரில் ஹெல்த்தியான பூரியைச் சுடலாம் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? நிச்சயம் முடியும். அதிலும் அந்த பூரி நம் உடல் எடையைக் குறைக்க உதவுவது, சர்க்கரைநோயைக் குணப்படுத்துவது எனப் பல நன்மைகளைச் செய்யும்” என்கிற சித்த மருத்துவர் இரத்தினம் சக்திவேல், தண்ணீரில் பூரி தயாரிக்கும் முறையையும் அது தரும் பலன்களையும் பட்டியலிடுகிறார்…இரத்தினம் சக்திவேல்

தேவையானவை: (நான்கு நபர்களுக்கு):

கோதுமை மாவு / ராகி மாவு / கம்பு மாவு / சத்துமாவு (ஏதேனும் ஒன்று) – 150 கிராம்

காய்கறிச் சாறு / கீரைச் சாறு / மூலிகைச் சாறு (ஏதேனும் ஒன்று) – 50 கிராம்

இந்துப்பு / கறுப்பு உப்பு / எலுமிச்சைச் சாறு / நெல்லிப்பொடி (ஏதேனும் ஒன்று) – தேவையான அளவு

தேங்காய்த் துருவல் – அரை மூடி அல்லது முளைதானியப் பால் – தேவையான அளவு.

உலர் பழங்கள் / கரும்பு வெல்லத்தூள் / பனை வெல்லத்தூள் / தேன் / பேரீச்சை துண்டுகள் (ஏதேனும் ஒன்று) – 100 முதல் 150 கிராம் வரை (அல்லது) கூட்டு / பொரியல் / சட்னி வகை / தக்காளி குருமா (ஏதேனும் ஒன்று) – 200 கிராம்
5 லிட்டர் கடாய் அல்லது அகன்ற பாத்திரம் – 1

ஜல்லிக்கரண்டி / கண் கரண்டி – 1

மாவு பிசையும் முறை :

பூரி

நம்மில் பலர் சப்பாத்தி, பூரிக்கு மாவு பிசையும்போது சிறிது சமையல் எண்ணெய் கலந்து பாலில், தண்ணீரில் கோதுமை மாவு / அல்லது மைதா மாவு போட்டு தயாரிப்பார்கள். அதற்குப் பதிலாக இங்கு நாம் காய்கறிச்சாறுகளாக வெண்பூசணிச் சாறு / கேரட் சாறு / தக்காளிச் சாறு / பசலைக்கீரைச் சாறு / வெந்தயக்கீரைச் சாறு / அரைக்கீரைச் சாறு / மணத்தக்காளிச் சாறு / பூண்டுச் சாறு / வல்லாரைச் சாறு இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கலந்து சிறிது நீர்விட்டு நன்றாகப் பிசையவும். அதோடு கெட்டித் தேங்காய்ப் பால் அல்லது முளைதானியப் பாலைவிட்டு பிசைந்துகொள்ளவும்.

கடல் உப்புக்குப் பதிலாக இந்துப்பு / கறுப்பு உப்பு / எலுமிச்சைச் சாறு / நெல்லிப்பொடி இவற்றில் ஏதேனும் ஒன்றைச் சேர்த்துக்கொள்வதால் சோடியத்துக்குப் பதிலாக பொட்டாசியம் கிடைக்கும்.

பிசைந்த மாவை பூரிக்கட்டையில் வட்டமாகத் தேய்க்கவேண்டும்

(மைதாவை இதனுடன் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்).

செய்முறை:

பொதுவாக நாம் உருட்டிய மாவை, கொதிநிலையில் இருக்கும் எண்ணெயில் அழுத்திப் பொரித்து எடுப்போம். ஆனால் எண்ணெய்க்குப் பதிலாக இங்கு நாம் தண்ணீரை உபயோகிக்கிறோம்.

5 லிட்டர் கடாய் அல்லது வாய் அகன்ற பாத்திரத்தில் 3/4 பாகம் நீர்விட்டு நன்றாகக் கொதிக்கவிட வேண்டும்.

கரண்டியில் உருட்டித் தேய்த்த மாவை வைத்து கொதிநீரில் ஜல்லிக்கரண்டியுடன் இறக்கி இரண்டு நிமிடம் நீரில் வேகவைத்து அப்படியே, கரண்டியுடன் வெளியே எடுத்துவிட வேண்டும்.

* தண்ணீர் கொதிநிலையில் இருக்கும்போது மட்டுமே மாவு வேகும்; பூரிப் பதத்துக்கு வரும்.

* கேரட் சாறு, தக்காளிச் சாறு ஆகியவற்றில் செய்தால் மாவு சிவப்பாகவும், கீரைச் சாற்றில் செய்தால் மாவு பச்சையாகவும் இருக்கும்.

* தேங்காய்த் துருவலை சமைக்காமல் பயன்படுத்துவதால், கொலஸ்ட்ரால் தொல்லையும் இல்லை.

* இதை தக்காளி தொக்கு, விதவிதமான சட்னி, கூட்டு, பொரியல் ஏதாவது ஒன்றுடன் சாப்பிடலாம். அல்லது உலர் பழங்கள், பனை வெல்லத்தூள், கரும்பு வெல்லத்தூள், பேரீச்சை மற்றும் தேன் தடவியும் சாப்பிடலாம். வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்து சாப்பிடலாம்.

பலன்கள்:

எடை

* ஒரு சொட்டு எண்ணெய் இல்லாத இந்த உணவு உடலுக்கு பல வகைகளில் நன்மையளிக்கிறது.

* உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் நீங்கும்.

* தொப்பை மற்றும் எடை குறையும்.

* சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்த உணவு. இதனுடன் இனிப்பான பொருட்களைச் சேர்க்காமல் சாப்பிட முடியும். காய்கறி / கீரை சேர்த்து மாவு பிசைவதால் அதன் சுவையே போதுமானது.

* மற்ற பூரியைவிட தண்ணீர் பூரி அளவான கலோரி உடையது என்பதால், ஒரு வேளைக்கு 5 முதல் 8 பூரி வரை சாப்பிடலாம். ஒரு வேளை முழு உணவாகவும் இதனைச் சாப்பிடலாம். (ஒரு செட் தண்ணீர் பூரியின் கலோரி = 120)

* இந்த உணவில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், செரிமானக் கோளாறு வராமல் நம்மைப் பாதுகாக்கும். அத்துடன் அல்சர் போன்ற நோயையும் குணப்படுத்தும்.shutterstock 359953412 12196

Related posts

தைராய்டு… முட்டைகோஸ்… மோதிரம்?

nathan

வெள்ளை சர்க்கரையை விட நாட்டு சர்க்கரை உடலுக்கு ரொம்ப நல்லது!

nathan

சுவையான… ரவா ரொட்டி

nathan

சூப்பரான சுண்டைக்காய் வத்தக்குழம்பு

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு! சளிக்கு இதமாக இருக்கும் மைசூர் ரசம்

nathan

சர்க்கரை நோய் இடர்பாட்டை அதிகரிக்கக்கூடிய 5 பழக்கவழக்கங்கள்!!!

nathan

அடேங்கப்பா! எலுமிச்சை பழத்தில் இவ்வளவு நன்மைகளா ??

nathan

உங்களுக்கு தெரியுமா சர்க்கரை வியாதி உள்ளவர்கள் பயப்படாமல் இந்த 4 பழங்களையும் தாராளமாக சாப்பிடலாம்!

nathan

தெரிஞ்சிக்கங்க…மிக அதிக சர்க்கரையுள்ள இந்த உணவுகளையெல்லாம் கொஞ்சம் தள்ளி வச்சுடுங்க!!

nathan