28.1 C
Chennai
Saturday, Jul 11, 2026
சிற்றுண்டி வகைகள்

சத்து நிறைந்த சிறுதானிய பெசரட்டு

தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. அந்த வகையில் இன்று சிறுதானியங்களை வைத்து பெசரட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்து நிறைந்த சிறுதானிய பெசரட்டு
தேவையான பொருட்கள் :

முழு பாசிபயறு – 1/2 கப்
சோளம், தினை, குதிரைவாலி, வரகு கலந்து – 1/2 கப்
பச்சைமிளகாய் – 2
இஞ்சி – சிறிய துண்டு
வெங்காயம் – 1
சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவைக்கு
பெருங்காயம் – விரும்பினால் சேர்க்கலாம்



செய்முறை :

* வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சிறுதானியங்களுடன், பாசிபயறு சேர்த்து நாலு மணி நேரம் ஊறவிடவும்.

* நன்றாக ஊறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் இஞ்சி, சீரகம், பச்சை மிளகாயுடன் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து உப்பு, வெங்காயம் சேர்த்து கலந்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பிபோட்டு எடுக்கவும். அடை போல வார்க்கலாம்.

சத்து நிறைந்த சிறுதானிய பெசரட்டு ரெடி.

Related posts

ட்ரை கலர் சாண்ட்விச்

nathan

பேப்பர் ரோஸ்ட் தோசை

nathan

சுவையான மொறு மொறு பூண்டு பக்கோடா…

nathan

சூப்பரான பட்டாணி ஸ்டஃப்டு சப்பாத்தி

nathan

கோதுமை – கேழ்வரகு உருண்டை

nathan

சுரைக்காய் தோசை

nathan

ஹேவ் எ ஹெல்தி அண்ட் ஹேப்பி ஃபேமிலி!

nathan

மட்டன் போண்டா

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோதுமை ரவை இட்லி

nathan