25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
f 13085
ஆரோக்கிய உணவு

இதயம்… செரிமானம்… ரத்த சுத்திகரிப்பு… பெரும் பயன்கள் தரும் பெருஞ்சீரக டீ

காலையில் எழுந்ததும் சுடச்சுட ஒரு காபியோ டீயோ குடித்தே ஆக வேண்டும். அதன்பிறகு முற்பகல் 10 அல்லது 11 மணிக்கு… மாலையில் ஒரு டீ எனக் குடித்தே ஆக வேண்டும். சிலருக்கு இது ஒரு புத்துணர்ச்சி பானம் என்ற தீராத நம்பிக்கை உள்ளது. நம்பிக்கை மட்டுமல்ல நேரம் தவறினாலோ, காபி டீ குடிக்கவில்லை என்றாலோ தலைவலிக்கும். இன்னும் சிலருக்கோ கோபம் தலைக்கேறி உச்சத்துக்குச் சென்று கத்தி கூப்பாடு போடவும் செய்வார்கள். ஆக, நம்மோடு பின்னிப்பிணைந்த அந்தப் பானங்களில் டீ நமக்கு நன்மை செய்கின்றதென்றால் உங்களால் நம்ப முடிகிறதா..? ஆனால் கொஞ்சம் வித்தியாசம். இது சாதாரண டீ அல்ல… பெருஞ்சீரக டீ. இதைக் குடிப்பதால் நமது உடலுக்குப் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன. அவை பற்றிப் பார்ப்போமா..!
f 13085
பெருஞ்சீரக டீ

முதலில் பெருஞ்சீரக டீ தயாரிப்பது எப்படி என்று அறிவோமா?

தேவையானவை:
டீத்தூள் – 2 டீஸ்பூன், பெருஞ்சீரகம் – 2 டீஸ்பூன், சர்க்கரை – தேவையான அளவு
shutterstock 585092338 13588
பெருஞ்சீரகம்

செய்முறை:
பெருஞ்சீரகத்தை வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும். ஒரு கப் தண்ணீரை அடுப்பில் வைத்து, டீ தூளைப் போட்டு கொதிக்க விடவும். நன்றாகக் கொதித்ததும் வறுத்த பெருஞ்சீரகத்தைப் போட்டு நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு, அதனை இறக்கி வடிகட்டி சர்க்கரை சேர்த்துப் பருகலாம்.

பெருஞ்சீரக டீ பருகுவதால் ஏற்படும் நன்மைகள்

இரைப்பை பிரச்னை
ஒரு கப் பெருஞ்சீரக டீயை தொடர்ந்து குடித்து வந்தால் இரைப்பையில் ஏற்படுகின்ற பிரச்னைகள் குணமாகும். மேலும் ஓரிரண்டு பெருஞ்சீரகத்தை வாயில் மென்று அசை போட்டு வர செரிமானமின்மையால் ஏற்படுகின்ற பிரச்னைகள் தீரும். மேலும் நெஞ்செரிச்சலுக்கு இது உடனடி தீர்வாக அமையும்..

மாதவிடாய்க்கோளாறு
பெருஞ்சீரக எண்ணெயில் பெண்மை சுரப்பியை தூண்டும் ஆற்றல் உள்ளதால் இது ஹார்மோன் பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையும். மேலும் பெருஞ்சீரகம் பாலுணர்வைத் தூண்டும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்ப் பிரச்னைகளுக்கும் பெருஞ்சீரக டீ நல்ல தீர்வாக அமையும். மெனோபாஸ் காலகட்டத்தில் ஏற்படக்கூடிய அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டால் அதற்குப் பெருஞ்சீரகம் நல்லதொரு மருந்தாகச் செயல்படும். அதோடு மூலிகை மருந்துகளில் பெருஞ்சீரகத்துக்குத் தனி இடம் உண்டு.
p42a 16133 13349
செரிமானக் கோளாறுகள்

செரிமானக்கோளாறு

இதைக் குடித்தால் எளிதாகச் செரிமானம் ஆகும். திடீரென ஏற்படும் விக்கலை நிறுத்த பெருஞ்சீரகம் உதவி புரியும். மேலும் இது நறுமணம் உள்ள வாய்வு நீக்கியாகவும் செயல்படும். அதிக அளவிலான வயிற்றுப்போக்கின்போது இதைப் பருகினால் உடனடி பலன் கிடைக்கும். வயிறு பருத்தல், வயிற்றுத் தசை பிடிப்பு போன்ற பிரச்னைகளுக்குப் பெருஞ்சீரகம் தீர்வாக அமையும்.

ஒட்டுண்ணிகள்
வயிற்றில் உள்ள ஒட்டுண்ணிகளைக் கொல்லக்கூடியது, பெருஞ்சீரகம். குடல்புழுக்களில் இருந்தும் விடுவித்துக் கொள்ள உதவுவதோடு, பாக்டீரியா போன்ற கிருமி நாசினிகளை அழிக்கக்கூடியது.

பெருங்குடல் பாதுகாப்பு
இது குழந்தைகளுக்கு நல்லதொரு பாதுகாப்பு அரணாக இருக்கும். மேலும், வயிற்றில் உள்ள குடலிறக்கப் பகுதியை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். மேலும் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுவலியை உடனடியாகக் குணப்படுத்த உதவும்.
shutterstock 199149272 16178 13407
ரத்த சுத்திகரிப்பு

ரத்த சுத்திகரிப்பு

அதிக அளவில் சிறுநீர் வெளியேற பெருஞ்சீரக டீ உதவியாக இருக்கும். மதுவால் பாதிக்கப்பட்ட கல்லீரலை குணப்படுத்த உதவிபுரிவதோடு மஞ்சள்காமாலைக்கும் மருந்தாக அமையும். சிறுநீரகக் கற்களை அகற்றக்கூடியது.

உடல் எடை குறைதல்
உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கத் துணைபுரியும். மேலும், வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டுவதோடு, பசியார்வத்தைச் சீராக்கும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வழிவகைச் செய்யும்.
joint 17072 13372
மூட்டுவலி பிரச்னை

மூட்டுவலி

இந்த டீயைக் குடித்தால் உடலில் உள்ள திசுக்கள் மற்றும் மூட்டுகளுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். மூட்டுவலி, கீல்வாதம் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

நோய் எதிர்ப்பு சக்தி
சளித் தொந்தரவை சரி செய்யும். காய்ச்சல், தொண்டைவலி போன்றவற்றைச் சரி செய்வதோடு ஆஸ்துமா, இருமல் போன்றவற்றுக்குத் தீர்வாக அமையும்.

ஆரோக்கியமான கண்கள்
சரியான தூக்கமின்மையால் புண்பட்ட கண்களுக்குப் பெருஞ்சீரகம் நல்ல மருந்தாகும். டீயை காட்டன் துணியால் நனைத்துக் கண் இமையில் 1௦ நிமிடங்கள் வைத்து வர கண் வலி குணமாகும்.
p32b 13480
வலிமையான இதயம்

இதயம்

வைட்டமின் மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட்டுகள் இருப்பதால் இது ஆரோக்கியமான இதயத்துக்கு வழிவகைச் செய்யும். வைட்டமின் மற்றும் ஆன்டிஆக்ஸிடெண்ட்டுகள் இரண்டும் கொழுப்புகளைக் குறைக்க உதவுவதோடு, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். எனவே இதயத்தை வலிமையாக வைத்திருக்க உதவும்.

சுவாசக்கோளாறுகள்
ஆஸ்துமா போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையும். மேலும் இது நுண்ணுயிர்க்கு எதிரியாகச் செயல்படக்கூடியது. அத்துடன் இதய வலிமையைக் குணப்படுத்த உதவி செய்யும்.

ஈறு நலம்

122828 thumb 13171ஈறு

பெருஞ்சீரகத்தில் வாய் கொப்பளித்து வர பூச்சி அரித்த ஈறுகள் குணமாகும். அதோடு பல் வலி, வாய் துர்நாற்றம் போன்றவற்றை இவை குணமாக்கும். பலமான ஈறுகளுக்கு உறுதுணையாக இருக்கும்.

பெண்கள் நலம்
உடல் சோர்வு, உடல் நலமின்மை போன்றவற்றுக்குத் தீர்வு அளிக்கக்கூடியது. மேலும், புண்பட்ட முலைக்காம்பை குணப்படுத்தவும் பெருஞ்சீரக டீ துணை புரியும். காட்டன் துணியைப் பெருஞ்சீரக டீயில் அமிழ்த்தி புண்பட்ட இடங்களில் ஒரு நாளைக்கு மூன்றுமுறை தடவி வர புண்கள் சரியாவதோடு பால் பொங்கி வழியவும் வழிவகைச் செய்யும்.

பயன்படுத்தக்கூடாதவர்கள்
இத்தனை நல்ல குணங்கள் இருந்தாலும் பெருஞ்சீரக டீயை சிலர் மட்டும் கட்டாயம் பயன்படுத்தக்கூடாது. அதாவது, கேரட் அல்லது மற்ற மூலிகைச் செடிகளைப் பயன்படுத்தினால் உடலில் அலர்ஜி வரும் என்று கூறுபவர்கள் பெருஞ்சீரக டீயை பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் பெருஞ்சீரகமும் கேரட் குடும்பத்தைச் சேர்ந்தது. எனவே மருத்துவரிடம் ஆலோசனை பெற்றே குடிக்க வேண்டும்.
shutterstock 585092359 13060
பெரும் சீரகம்

புற்றுநோய்க்காக கீமோதெரபி அல்லது ரேடியேஷன் தெரபி அளிக்கப்பட்டிருந்தால் அவர்கள் பெருஞ்சீரக டீ குடிக்கக் கூடாது. இதுதவிரக் குழந்தைகளுக்கு அதிக அளவு பெருஞ்சீரக டீ கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பொதுவாக ஒரு நாளைக்கு 2 முதல் 4 கப்களுக்கு மேல் கொடுக்கக்கூடாது.

ஆக, உடலுக்குப் பல்வேறு நன்மை அளிக்கக்கூடிய பெருஞ்சீரக டீயைப் பருகி உடல் ஆரோக்கியத்தோடு செழுமையாக வாழ்வோம்..

Related posts

பூண்டை வறுத்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

nathan

நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட பச்சை மிளகாய்

nathan

ஹெல்த் ஸ்பெஷல்! நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்!!!

nathan

தெரிஞ்சிக்கங்க…மலச்சிக்கல், வயிற்றுப் புழு, மற்றும் “மரு” போன்றவற்றிக்கு உடனடி தீர்வு இதோ…!!

nathan

எடை இழப்பதற்கான‌ டாப் 5 காய்கறி மற்றும் பழங்கள் ஷேக்ஸ்

nathan

கொளுத்தும் வெயில் உடல் சூட்டை தணிக்கனுமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உங்களுக்கு தெரியுமா உலர் திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்….!

nathan

தெரிஞ்சிக்கங்க…உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும் உளுந்து…!!

nathan

சுவையான ரிப்பன் பக்கோடா

nathan