25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
shutterstock 89667619 19077 1
ஆரோக்கிய உணவு

இந்த 10 உணவுகளுடன் எளிதாகத் தவிர்க்கலாம் முழங்கால் மூட்டுவலி..!

இன்றைக்கு 40 வயதைத் தாண்டியவர்கள் பலரையும் பாடாகப்படுத்தும் பிரச்னை, முழங்கால் மூட்டுவலி. சிலருக்கு இது பெரிய பாதிப்பை உண்டாக்கி, மூட்டு மாற்று அறுவைசிகிச்சை வரை கொண்டுபோய் விடுவதும் உண்டு. மூட்டுகளுக்கு வலுசேர்க்கும் உணவுகளை உட்கொள்வது, உடற்பயிற்சி செய்வது என இவற்றை ஆரோக்கியமாக வைத்திருந்தால், இந்த வலியைத் தவிர்த்துவிடலாம். மூட்டுகள் உறுதிக்கு உதவும் 10 உணவுகள் இங்கே…

மூட்டு

மனித எலும்புகளின் கட்டமைப்பில் எலும்புதான் உடலுக்கு வடிவமும் பலமும் அளிக்கிறது. பிறக்கும்போது 300 எலும்புகளாக இருக்கும் இவை, வயது கூடக் கூட 206-ஆகக் குறைகின்றன.

எலும்பு மண்டலத்தின் முக்கிய வேலைகள்…

* உடல் உறுதி மற்றும் வடிவம் கொடுத்தல்.
* உடல் அசைவுகளுக்கு உதவுதல்.
* உடல் உள்ளுறுப்புகளை பாதுகாத்தல்.
* ரத்த அணுக்களை உற்பத்தி செய்தல்.
* கனிமங்கள் சேமித்தல்.
* நாளமில்லாச் சுரப்பிகளைச் சீர்படுத்துதல்.

முழங்கால் மூட்டு

முழங்கால் மூட்டு, உடலில் இருக்கும் மூட்டுகளிலேயே பெரியது. இது, காலில் உள்ள தொடை எலும்பும் முழங்காலுக்குக் கீழ் உள்ள (Shin bone) எலும்பும் சேரும் இடத்தில் கால்களை வளைக்க உதவுகிறது. முழங்கால் வளைவதால்தான் நம்மால் நடக்க, ஓட, ஏற, தாவ… எனப் பல்வேறு செயல்களைச் செய்ய முடிகிறது. முழங்கால் மூட்டின் கட்டமைப்பு எளிதில் கால்களுக்கு பாதிப்பு வராமல் தடுக்கும்.
shutterstock 89667619 19077
முழங்கால் மூட்டு

மெனிஸ்கஸ் கிழிதல் அல்லது குருத்தெலும்பு தசை கிழிதல் (Meniscus Tear)

மெனிஸ்கஸ் கிழிதல், பொதுவாகப் பலருக்கும் ஏற்படும் ஒரு பிரச்னை. இதற்குப் பொதுவான அறிகுறிகளோ, பிரச்னைகளோ தெரிவதில்லை. ஒரு சிலருக்கு வலி அல்லது நொறுங்கும் சத்தமோ, உணர்வோ ஏற்படலாம். இதன் பாதிப்பு அதிகரிக்கும்போது வீக்கமும் வலியும் ஏற்படும். முழங்காலை நீட்டும்போது அதிக வலி தோன்றும். பாதிப்பின் நிலையைப் பொறுத்து இதற்கான சிகிச்சையும் மருந்துகளும் மாறுபடும். முழங்கால் பாதிப்புகளை ஆய்வுசெய்ய, உடல் பரிசோதனையோடு நோயாளியின் மருத்துவ வரலாறும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.

ஆர்த்ரிட்டிஸ் (Arthritis)

மூட்டுகளில் ஏற்படும் வீக்கம், ஆர்த்ரிட்டிஸ் குறைபாட்டை ஏற்படுத்தும். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான வலி உண்டாகும். சில சமயங்களில் தாங்க முடியாத வலி ஏற்பட்டு, மூட்டுகளை அசைக்க முடியாத நிலைகூட வரலாம். ஆர்த்ரிட்டிஸின் அறிகுறிகள், அதன் வகைகளைப் பொறுத்து, (ரூமட்டாய்டு, ஆஸ்டியோஆர்த்ரிட்டிஸ் Rheumatoid / Osteoarthritis) மாறுபடும்.

பாதிக்கப்பட்ட மூட்டுகளில் உள்ள குருத்தெலும்பு தேயத் தொடங்குகிறது. இதுதான் மூட்டுகளுக்கு இடையில் உள்ள இடத்தைச் சுருக்கி, கால்களை அசைக்க முடியாத நிலை ஏற்படக் காரணமாகிறது.

எலும்புகளை வலுவாக்கும் உணவுகள்…

கனிமச் சத்து எலும்பு ஆரோக்கியத்துக்கு உறுதுணையாக இருக்கிறது. கனிமங்களில் கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம், பீட்டா கரோட்டின் போன்ற வைட்டமின்கள் மற்றும் புரதம், முழங்கால் மூட்டுக்கு வலுவூட்டும். எலும்புகளில் கால்சியம் குறைபாடு ஏற்பட்டால், கடுமையான எலும்பு நோயான ஆஸ்டியோபோரோசிஸ் (Oestroporosis) ஏற்படக்கூட வாய்ப்பு உள்ளது

பால்
p70a 19391
பால்

தொடர்ச்சியாகப் பால் அருந்திவந்தால், முழங்கால் மூட்டில் ஏற்படும் ஆர்த்ரிட்டிஸ் அதிகரிக்காமல் இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. பாலில் அனைத்துச் சத்துக்களும் இருக்கின்றன. எனவே, வயதானவர்களின் (எலும்பு சம்பந்தமான நோய்களால் எளிதில் பாதிக்கப்படுபவர்கள்) தினசரி உணவில் பால் கட்டாயமாக இடம்பெற வேண்டும். தினமும் ஒரு கிளாஸ் பால் அருந்திவந்தால், பெண்கள் முழங்கால் மூட்டு சம்பந்தமான பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம்.

சீஸ்

சீஸில் சத்து தரும் பாக்டீரியாவான புரோபையோட்டிக் (Probiotic) உள்ளது. இந்த வகை பாக்டீரியா, மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தையும் வலியையும் குறைக்கக்கூடியது. புரோபையோட்டிக் பாக்டீரியா அடர்த்தியான சீஸில் அதிகம் இருக்கிறது. இதோடு சீஸில் எலும்புகளை வலுப்படுத்தும் கால்சியம் சத்தும் உள்ளது. சிலருக்கு சீஸ் ஒவ்வாமை இருந்தால், மூட்டுகளில் வீக்கம் ஏற்படலாம். எனவே, அவர்கள் மட்டும் சீஸைத் தவிர்க்கவும்

சோயா பனீர்

சோயா பனீர், சோயாபீன்ஸ் தயிரில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது, இயற்கையாகவே க்ளுட்டன் சத்து இல்லாமல், குறைந்த கலோரிகொண்ட உணவாக இருக்கிறது. புரதம், இரும்பு மற்றும் கால்சியம் சத்து நிறைந்தது. சோயா பாலை கொதிக்கவைத்து திரித்தால், கால்சியம் நிறைந்த சோயா பனீர் கிடைக்கும். சோயா ஐஸோஃபிளேவான் (Soya Isoflavone) எலும்புத் தேய்மானத்தைக் குறைத்து, தாதுச் செறிவை மெனோபாஸ் சமயத்தில் அதிகப்படுத்தும்.

எள்

எள்

எள்ளில் தாமிரம், மாங்கனீஸ், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு, துத்தநாகம் மற்றும் மாலிப்டினம் (Molybdenum) ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. எள், ஆன்டிஆக்ஸிடன்ட்களை உருவாக்கி, முடக்கு வாதத்தையும் அதனால் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கும். எலும்புகளுக்கும் மூட்டுகளுக்கும் அடிப்படையாக அமையும் கொலாஜன் மற்றும் எலாஸ்டினை (Elastin) இணைக்கும் பணியை எள்ளிலுள்ள தாமிரம் செய்கிறது.

கீரை
கீரை வகைகளில் எலும்பை பலப்படுத்தும் கால்சியம், தாதுக்கள், வைட்டமின் கே, ஃபோலேட், வைட்டமின்- சி நிறைந்துள்ளன.

பீன்ஸ்

பீன்ஸில் புரதச்சத்து நிறைந்து காணப்படுகிறது. இது, எலும்புகளை உறுதியாக்கும்.

மீன்கள்

மத்தி மீன் வகை வைட்டமின் டி நிறைந்தது. இது, எலும்புகளுக்கு தேவையான கால்சியம் மற்றும் பிற தாதுக்கள் உறிஞ்சப்படும் அளவை அதிகப்படுத்தக்கூடியது.

நட்ஸ்
பாதாம் பருப்பு போன்ற நட்ஸ் வகைகளில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரதம் நிறைந்துள்ளன. எனவே, சத்தான எலும்புகள் பெற தினமும் நட்ஸ் சாப்பிடுவது சிறந்தது.

பழங்கள்

ஆரஞ்சு

ஆரஞ்சு, லெமன் ஆகியவை வைட்டமின் சி நிறைந்தவை. எனவே, கால்சியம் நிறைந்த உணவைச் சாப்பிட்ட பின்னர் இந்தப் பழங்களை உண்பதால் கால்சியம் உறிஞ்சப்படுவது அதிகரிக்கும்.

உலர்ந்த பழங்கள்

உலர்ந்த பழங்களிலுள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி, எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க உதவுவது.

எலும்பு உறுதிக்கு உதவும் வெள்ளரி – எள் சாலட்

தேவையானவை:

வெள்ளரி – 2 கப்
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் – ½ டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் – 1
பெருங்காயம் – ¼ டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
எள் – 2 டேபிள்ஸ்பூன்
உடைத்த வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன்
சிறியதாக நறுக்கிய கொத்தமல்லி – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

வாணலியில் எண்ணெயை ஊற்றி சீரகம், பெருங்காயம் மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து, அடுப்பை இளம் தீயில் வைத்து வதக்கவும். பிறகு அதில் வெள்ளரி மற்றும் உப்பு சேர்க்கவும். கடைசியாக எள், உடைத்த வேர்க்கடலை, சிறியதாக நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்த்து, கலந்து பரிமாறவும்.

Related posts

வயிற்று கோளாறுகளை குணமாக்கும் புதினா

nathan

உங்கள் கவனத்துக்கு உருளைக்கிழங்கை தோலுடன் சாப்பிடுவது நல்லதா?

nathan

நீங்கள் அதிக அளவில் தக்காளி பயன்படுத்துபவரா? அப்ப இத படியுங்கள்…

nathan

சூப்பரான கருப்பு உளுந்து கஞ்சி

nathan

வயிற்றில் நார்த்திசுக்கட்டி உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!!

nathan

ஆவாரம் பூ (Aavaram Poo) நன்மைகள் – aavaram poo benefits in tamil

nathan

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க கொரோனா நோயாளிகள் சாப்பிட வேண்டிய காலை உணவுகள் என்னென்ன ?

nathan

குடல் நோய், நுரையீரல் கோளாறை குணமாக்கும் கொய்யா

nathan

உடல் பலம் பெற சாப்பிட வேண்டிய உணவுகள்!

nathan