25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201703261212456659 Kidney problem body heat reduce Bottle Gourd SECVPF
ஆரோக்கிய உணவு

சிறுநீரக கோளாறு, உடல் சூட்டை குறைக்கும் சுரைக்காய்

சுரைக்காய் என்றால் பலரும் இதில் என்ன சத்துகள் இருக்க போகிறது என்றே நினைத்து கொள்கிறார்கள். அப்படி நினைப்பவராக இருந்தால் சுரைக்காயின் பயன்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

சிறுநீரக கோளாறு, உடல் சூட்டை குறைக்கும் சுரைக்காய்

சுரைக்காயில் வைட்டமின் பி, சி சத்துகளை கொண்டுள்ளது. நீர்சத்து 96.07 %, இரும்புச் சத்து 3.2%, தாது உப்பு 0.5 %, பாஸ்பரஸ் 0.2%, புரதம் 0.3%, கார்போஹைட்ரேட் 2.3% போன்ற சத்துகளை கொண்டுள்ளது சுரைக்காய்.

சுரைக்காயின் சதைப் பகுதியை ரசமாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாற்றை சேர்த்து பருகி வர சீறுநீரக கோளாறுகளிலிருந்து குணம் பெறலாம். சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு, ஆகிய நோய்களுக்கு சிறந்தது.

அஜீரணக்கோளாறு உள்ளவர்கள் சுரைக்காயை சாப்பிடலாம். கோடை காலத்தில் சுரைக்காயை சாப்பிட்டு வர தாகம் ஏற்படாது. மேலும் நாவறட்சியை போக்கும்.

கை, கால் எரிச்சல் நீங்க சுரைக்காயின் சதைபகுதியை எரிச்சல் உள்ள இடத்தில் வைத்து கட்டினால் எரிச்சல் குறையும். உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள விரும்பினால் சுரைக்காயை பயன்படுத்தலாம்.

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி தாகம் ஏற்பட்டு உடல் எடையும் குறையும். இதை தவிர்க்க சுரைக்காயின் சதைப்பகுதியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி சாம்பாரிலிட்டு சாப்பிட்டு வந்தால் தாகம் அடங்கும். மேலும் நீரிழிவு உள்ளவர்கள் இந்த காயை அடிக்கடி பயன்படுத்தி வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும்.

வெப்பத்தினால் வரும் தலைவலி நீங்க சுரைக்காயின் சதைப்பகுதியை அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி நீங்கும்.

வெப்பமண்டல நாடுகளில் உடல் சூடு இயல்பாகவே அதிகமாகக் காணப்படும். இதனால் உடலானது பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடும். இதனால் தான் நம் முன்னோர்கள் உடல் சூட்டைத் தணிக்க சுரைக்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்துள்ளனர். சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு தணியும்,வெப்ப நோய்கள் ஏதும் ஏற்படாது.

மனித உடலில் உள்ள தேவையற்ற வியர்வை, சிறுநீர் வழியாக வெளியேறும். சிறுநீரகமானது இரத்தத்தில் உள்ள இரசாயனத் தாதுக்களைப் பிரித்து வெளியேற்றுகிறது. சில சமயங்களில் இவை வெளியேறாமல் மீண்டும் இரத்தத்தால் உறிஞ்சப்பட்டு உடல் பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடுகிறது. இந்த நிலையைப் போக்கி சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்தாக விளங்குகிறது.

உணவு மாறுபாட்டாலும், மன அழுத்தத்தாலும் உடலினை இயக்குகின்ற வாத, பித்த, கபத்தில் பித்தத்தின் நிலை அதிகரிக்கும் போது உடல் பலவீனமடைந்து பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இந்த பித்தத்தைக் குறைக்க சுரைக்காய் சிறந்த மருந்தாகும்.

சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலை அடையும். சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து, உடலை வலுப்படுத்தும்.

பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும், இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். குடல் புண்ணை ஆற்றும், மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து.

சுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும். சுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கண்நோய் தீரும்.

சுரையின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும். காமாலை நோய்க்கும் பயன்படுத்தலாம்.

சுரைக்காய் மற்றும் அதன் விதைகளுக்கு ஆண்மையை பெருக்கும் சக்தி உண்டு. சுரைக்காயின் சதைப் பகுதியுடன் விதைகளையும் சேர்த்து சர்க்கரையுடன் கலந்து ஒரு மாதம் உண்டு வந்தால் பலன் கிடைக்கும்.

உடல் சோர்வு உள்ளவர்கள் சுரைக்காயை அன்றாடம் உணவில் எடுத்துக்கொண்டால் அசதி, சோர்வு நீக்கி விடும். நீர்சத்து அதிகம் கொண்டிருப்பதால் கர்ப்பிணி பெண்கள் இதை சமைத்து சாப்பிட்டால் உடல் வீக்கம் குறையும். தேவையற்ற தண்ணீர் சிறுநீர் வழியாக வெளியேறும்.201703261212456659 Kidney problem body heat reduce Bottle Gourd SECVPF

Related posts

பாடி பில்டர் போன்ற உடற்கட்டு பெற எப்படி உணவுப் பழக்கம் பின்பற்ற வேண்டும்!!!

nathan

எலும்பை பலவீனப்படுத்தும் உணவுகள்

nathan

கருப்பட்டிக்கு சுவை, மணம் இருப்பதோடு மட்டுமல்லாமல், மருத்துவ குணமும் அதிகம் இருக்கிறது.

nathan

உங்களுக்கு தெரியுமா நீரிழிவு நோய்க்கு முடிவுக்கட்ட இந்த ஒரு பொருள் போதும்!

nathan

பப்பாளிக்காயின் மருத்துவ பயன்கள்

nathan

வேண்டும் வெள்ளை உணவுகள்!

nathan

7 நாட்களில் தொப்பையை குறைக்க இதை மட்டும் பயன்படுத்துங்கள்!

nathan

சலரோகத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க!….

sangika

வல்லாரை ஞாபக சக்தியை அதிகரிப்பதோடு, மூளையையும் சுறுசுறுப்படையச் செய்யும்.

nathan