28.1 C
Chennai
Saturday, Nov 16, 2024
29 1440841475 10 garlic2
ஆரோக்கிய உணவு

பலரும் அறிந்திராத பூண்டு பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!

மத்திய ஆசியாவை பூர்வீகமாக கொண்ட பூண்டை மனிதர்கள் 7000 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார்கள். காட்டேரிகளையும், தீய சக்திகளையும் விரட்டுவதற்கு பூண்டு மட்டும் ஏன் புராணங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது என எப்போதாவது நினைத்துள்ளீர்களா?

சொல்லப்போனால், நீங்கள் நினைப்பதை விட இந்த இந்த அதிசய உணவில் அதிக பயன்கள் அடங்கியுள்ளது. அதில் சில உண்மையாகவே மிகவும் சுவாரஸ்யமான விஷயங்களாக அமையும்.

தகவல் #1 பூண்டை மாயவித்தைக்கான கொடியாக பார்த்தனர் ஐரோப்பியர்கள். தீய சக்திகள் மற்றும் காட்டேரிகளை எதிர்க்க சக்தி வாய்ந்த பொருளாக பூண்டை மத்திய ஐரோப்பிய புராணங்கள் கருதின.

தகவல் #2 இஸ்லாமியத்தில், மசூதிக்கு செல்வதற்கு முன் பூண்டை பயன்படுத்த வேண்டாம் என பரிந்துரைக்கப்படுகிறது. அதற்கு காரணம் அதன் கவனச்சிதறல் வாசனையே. இதே காரணத்திற்காக தான் இந்து மதத்தில் பலரும் இதனை உண்ணுவதில்லை. இது காம இச்சையை அதிகரித்து, தெய்வ பக்தியை அழித்துவிடும் என்பது அவர்களது நம்பிக்கையாகும். ஜெயின் மதத்தை பின்பற்றுபவர்களும், புத்த மதத்தின் சில பிரிவினர்களும் கூட இதே காரணத்திற்காக தான் பூண்டை முழுமையாக தவிர்க்கின்றனர்.

தகவல் #3 பூண்டின் மீதான பயத்தை மருத்துவ ரீதியில் அல்லியும்ஃபோபியா என அழைக்கின்றனர்.

தகவல் #4 பூண்டை கற்பூரத்துடன் சேர்த்து எரித்தால், கொசுக்கள், பூச்சிகள் மற்றும் ஈக்கள் அண்டாது. நசுக்கிய பூண்டை தண்ணீருடன் கலப்பது, பூச்சிக்கொல்லிகளுக்கான பசுமை மாற்றாகும்.

தகவல் #5 பூண்டில் 17 அமினோ அமிலங்கள் அடங்கியுள்ளது. அனைத்து உடல் சார்ந்த செயல்முறைக்கும் அமினோ அமிலங்கள் அத்தியாவசியமானது. மனித உடலில் 75%-க்கு இது தேவைப்படுகிறது.

தகவல் #6 சீன உணவில் ஏன் அளவுக்கு அதிகமான பூண்டு இருக்கிறது என நீங்கள் யோசித்திருக்கிறீர்களா? இதோ அதற்கான விடை. உலகளாவிய பூண்டு உற்பத்தியில் சீனா மட்டும் 65%-ஐ வக்கிறது.

தகவல் #7 முதல் உலகப்போரின் போது சல்பர் இருப்புகள் குறைந்த போது, உடற்பகுதி அழுகலுக்கு எதிராக கிருமிநாசினியாக பூண்டு பயன்படுத்தப்பட்டு வந்தது.

தகவல் #8 கொலஸ்ட்ரால் அளவுகளை குறைப்பதால் இதயத்திற்கு பூண்டு நல்லது என நம் அனைவருக்கும் தெரியும். அதையும் தாண்டி, சளி மற்றும் இருமலுக்கு எதிராகவும் அது போராடும். ப்ரோ-பயோடிக்கான அது குடல்நாளத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

தகவல் #9 கையில் இருந்து பூண்டின் வாசனையை போக்க, குளிர்ந்த நீருக்குள் கையை விட்டு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பொருளின் மீது தேய்க்கவும்.

தகவல் #10 ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 19 ஆம் நாளை பூண்டு தினமாக கருதுகின்றனர்.

29 1440841475 10 garlic2

Related posts

உளுந்தங்கஞ்சி

nathan

சர்க்கரை நோய் இடர்பாட்டை அதிகரிக்கக்கூடிய 5 பழக்கவழக்கங்கள்!!!

nathan

சுவையான பச்சைப்பயறு மசியல்

nathan

பன்னீர் புலாவ்

nathan

சளி, இருமலைப் போக்கும் உணவுகள்!

nathan

அதிக அளவிலான நார்ச்சத்து எலுமிச்சை தோலில் செறிந்துள்ளதால் அல்சர் மற்றும் மலச்சிக்கலுக்கு நல்ல மருந்தாக உள்ளது.

nathan

புற்றுநோயை ஏற்படுத்தும் மீனைப் பற்றி தெரியுமா? கட்டாயம் இதை படியுங்கள்

nathan

நீரிழிவு நோயாளிகள் இந்த பழத்தை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

வயதாவதையும் குறைத்து இளமையை தக்க வைத்து கொள்ள வெந்நீர்!…

nathan