28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
p38b
ஆரோக்கிய உணவு

நீண்ட வாழ்வு தரும் உணவுப் பழக்கம்

எவ்வளவு காலம் வாழ வேண்டும் என்று நிர்ணயிக்கும் தன்மை நம் கையில் இல்லை. ஆனால், நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழிகள் இருக்கிறதா என்றால் இருக்கிறது. உடற்பயிற்சி, துடிப்பான வாழ்க்கை முறையுடன், எதை, எப்படி, எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது நம்முடைய ஆயுளை அதிகரிக்கச் செய்கிறது என நீண்ட காலம் வாழ்பவர்களை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அவர்கள், நீண்ட காலம் வாழ, முதுமையைத் தாமதப்படுத்தும் சில உணவுகளைப் பட்டியலிட்டுள்ளனர்.

*எந்த உணவில் அதிகமான நுண்ணூட்ட சத்துக்களும் குறைவான கலோரிகளும் உள்ளதோ அந்த வகை உணவுகளை உண்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும். புரொகோலி சாலட், திராட்சை உள்ளிட்ட பல காய்கறிகள், பழங்கள் இப்படி உள்ளன. இவை பலவகை புற்றுநோய் வராமல் காக்கும் திறன் கொண்டவை.

*நல்ல கொழுப்பு நிறைந்தது நல்லெண்ணெய். இது, இதய நோய்கள் வராமல் தடுக்கும். அதேசமயம் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தினமும் 2 டீஸ்பூன் நல்ல எண்ணெயை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

*சிவப்பு நிற காய்கறி, பழங்களான தக்காளி, மாதுளை, சிவப்பு கொய்யா போன்ற உணவுகளில் லைக்கோபீன் சத்து இருப்பதால் சிலவகை புற்றுநோய்களிலிருந்து தப்பிக்கலாம்.

*பீன்ஸ் வகை உணவுகளான பீன்ஸ், அவரை, துவரை, காராமணி, கிட்னி பீன்ஸ் போன்றவற்றில் ஃபேட்டி ஆசிட் புட்டிரேட் (fatty acid butyrate) சத்து உள்ளதால் ஊட்டச்சத்து குறைபாட்டால் நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.

*நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்களை உண்டால் கழிவுகள் வெளியேறி மலச்சிக்கல் இருக்காது. இதனால் சர்க்கரை நோய், இதய நோய், உடல்பருமன், ரத்தஅழுத்தம் ஆகியவை வராமல் தடுக்கலாம். ஃபோலிக் அமிலம் இருப்பதால், உடலில் செல்சிதைவு ஏற்படாமல் தடுக்கிறது.

*கிரீன் டீ, வெந்நீரில் தேன், எலுமிச்சை சாறு தலா ஒரு ஸ்பூன் கலந்து குடித்து வந்தால் சிறுநீரகம், கல்லீரலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். நோய் பாதிப்புக்கான வாய்ப்பு பெருமளவு குறைந்துவிடும். உடல் பருமன் குறைக்க, சூரியக் கதிர்வீச்சால் சருமம் பாதிப்படைவதைத் தடுக்க இது உதவுகிறது.

*உடலில் நல்ல கொழுப்பு சமநிலையாக இருந்தாலே, உடல்பருமன் ஏற்படாது. பாதாமில் வைட்டமின் இ, தயமின், நார்ச்சத்து, ரிபோஃபிளேவின், இரும்புசத்து, கால்சியம் நிறைவாக உள்ளன. தினம் நான்கு பாதாமை சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

*பச்சை, மஞ்சள், சிவப்பு குடமிளகாயில் வைட்டமின் சி, நார்ச்சத்து அதிகம். ஆரோக்கியத்தை மேம்படுத்த, வாரம் இருமுறை குடமிளகாய் உள்ளிட்ட காய்கறிகளை சாலட் செய்து சாப்பிடலாம்.

*கேரட், பப்பாளி, அன்னாசி உள்ளிட்ட ஆரஞ்சு நிற காய்கறி, பழங்களில் வைட்டமின் ஏ அதிகம். சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆயுள் முழுக்க தெளிவான பார்வையை பெற, கேரட்டுக்குத்தான் முதலிடம்.

*முட்டை மற்றும் மீனில், வைட்டமின் டி முக்கியமான விகிதத்தில் கலந்துள்ளது. இது எலும்பு சம்பந்தமான நோய்கள் உருவாகாமல் தடுக்கும். எலும்புகளின் தேய்மானத்தைக் குறைக்கும். வயோதிக காலத்திலும் நாம் ஓரளவுக்கு சமாளிக்க கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்துக்கள் கைக்கொடுக்கின்றன.

*சுண்டை வத்தல் மற்றும் வெல்லத்தில் இரும்புச்சத்து அதிகம். இவற்றை உட்கொள்வதால் ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும். ரத்தசோகை நோய் வராமல் தடுக்கும்.

*தயிர், வெண்ணெய், யோகர்ட் உள்ளிட்ட பால்பொருட்களில் நன்மை செய்யும் பாக்டீரியா அதிக அளவில் உள்ளது. செரிமானத்துக்கு உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம், சில வகை புற்றுநோயையும் இந்த பாக்டீரியா தடுக்கிறது.

*சீசனில் விளையும் உள்ளுர் காய்கறி, பழங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, ஆரஞ்சுப்பழம், அன்னாசி, சாத்துக்குடி. ஊளைச் சதை, கரப்பான், கண்நோய் போன்ற பிரச்னைகளை சரிசெய்யும். எலும்பு, பற்களை உறுதியாக்கும்.

*சிவப்பு அரிசி, கருப்பு அரிசி, பிரவுன் அரிசி ஆகியவற்றுக்கு உங்கள் தட்டில் இடம் கொடுங்கள். இதில் நார்ச்சத்து, பைட்டோகெமிக்கல், ஆன்டிஆக்சிடன்ட் அதிகம் என்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கலோரிகள் குறைவு ஆதலால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும்.

*ஜூஸ், சாலட், நொறுக்கு தீனி, மோர், இனிப்புகள் என எதை வீட்டில் செய்தாலும் அதில் ஆளிவிதைகள் இடம் பெறட்டும். இதிலுள்ள நார்ச்சத்து, ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகியவை புற்றுநோய்களை எதிர்க்க கூடியவை. கொழுப்பை கரைக்கும் தன்மையும் இதற்கு உண்டு.

நீடுழி வாழ வைக்கும் உணவுகளை சாப்பிட தொடங்குங்கள்!p38b

Related posts

தேனை ஏன் சூடு செய்து சாப்பிடக்கூடாது என உங்களுக்கு தெரியுமா?

nathan

தினமும் ஒரு பச்சை மிளகாய் சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மை

nathan

பாலில் இந்த அதிசய பொருளை சேர்த்து குடித்தாலே போதும்! சக்தி பலமடங்கு அதிகரிக்கும்

nathan

அவதானம்! உயிருக்கு உலை வைக்கும் பப்பாளி!

nathan

ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க…

nathan

இந்த ஜூஸ் குடிப்பதால் உங்கள் உடலில் ஏற்படும் மற்றம் என்ன எனத் தெரியுமா ?

nathan

நீரிழிவு நோயாளிகள் பலா பழத்தை சாப்பிடலாமா?

nathan

சொக்லேட் சாப்பிட்டால் இதய நோயை தடுக்கலாம்.

nathan

இந்த ஒரு பொருளுடன் அத்திப்பழம் சாப்பிட்டால் குண்டாகிடுவீங்க…தெரிஞ்சிக்கங்க…

nathan