31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

சுய்யம்

என்னென்ன தேவை?

மைதா – 1 கப்
தண்ணீர் – தேவையான அளவு
வெல்லம் / பனை வெல்லம் – 1 கப்
கடலைபருப்பு – 1 கப்
துருவிய தேங்காய் – 1 கப்
ஏலக்காய் பொடி – 1 தேக்கரண்டி
நெய் – 1 தேக்கரண்டி

எப்படிச் செய்வது?

கடலைபருப்பை குக்கரில் எடுத்து தண்ணீர் சேர்த்து வேக விடவும். ஒரு கடாயில் வெல்லம் எடுத்து தண்ணீர் விட்டு உருக்கவும். இப்போது அதை வடிக்கட்டி எடுத்து வைக்கவும். அதே கடாயில் சமைத்த வைத்த கடலை பருப்பு எடுத்து வெல்லப் பாகு, துருவிய தேங்காய், சிறிது உப்பு சேர்த்து நன்றாக வேக விடவும். அது கெட்டியாக வரும்போது ஏலக்காய் பொடி மற்றும் நெய் சேர்த்து கலந்து வைக்கவும். பின்னர் அவற்றை சிறு உருண்டையாக உருட்டி வைக்கவும். ஒரு கிண்ணத்தில் மாவை எடுத்து தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, உருட்டி வைத்த உருண்டையை மாவில் முக்கி எண்ணெய்யில் போட்டு பொறித்து எடுக்கவும். சுவையான சுய்யம் தயார்!!!

Related posts

விளாம்பழ துவையல் செய்முறை விளக்கம்

nathan

ரவா அப்பம்

nathan

குபூஸ்(அரேபியன் ரொட்டி)

nathan

சுவையான மங்களூர் போண்டா சாப்பிடனுமா? வீட்டிலேயே செய்யலாம்!

nathan

இன்ஸ்டண்ட் கோதுமை ரவா இட்லி – MTR Style Instant Wheat Rava Idli Recipe – Instant Breakfast Recipes

nathan

சத்தான சுவையான வெந்தயக்கீரை தோசை

nathan

குருணை கோதுமைக் களி

nathan

மூங்தால் பன்னீர் சப்பாத்தி

nathan

கார்ன் சீஸ் டோஸ்ட்

nathan