31.1 C
Chennai
Saturday, May 17, 2025
201702240922305785 fried coconut chutney SECVPF
சட்னி வகைகள்

வறுத்து அரைத்த தேங்காய் சட்னி

தேங்காய் சட்னி சாப்பிடு இருப்பீங்க. தேங்காயை எண்ணெயில் நன்றாக வறுத்து அதில் சட்னி செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இந்த சட்னியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

வறுத்து அரைத்த தேங்காய் சட்னி
தேவையான பொருட்கள் :

தேங்காய் துருவல் – ஒரு கப்,
காய்ந்த மிளகாய் – 4,
உளுந்தம்பருப்பு – 2 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – 3 டீஸ்பூன்,
புளி, கறிவேப்பிலை, எண்ணெய் – சிறிதளவு,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை :

* கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலையை வறுக்கவும்.

* இவை சற்று சிவந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஆற வைக்கவும்.

* நன்றாக ஆறியதும் அதனுடன் உப்பு, சிறிதளவு புளி சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாக, நைசாக அரைத்து கொள்ளவும்.

* சூப்பரான வறுத்து அரைத்த தேங்காய் சட்னி ரெடி.

குறிப்பு: இது ரசம் சாதம், தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள ஏற்றது. தண்ணீர் விடாமல் அரைத்தால், வெளியூர் பயணத்துக்கு புளி சாதம், இட்லி, தோசைக்கு சைட் டிஷ் ஆக உபயோகிக்கலாம். தேங்காய் துருவலை, பொன்னிறமாக, வாசனை வரும் வரை வறுக்க வேண்டியது அவசியம்.201702240922305785 fried coconut chutney SECVPF

Related posts

கார பூண்டு சட்னி!

nathan

நெல்லிக்காய் சட்னி

nathan

வெங்காய காரச்சட்னி

nathan

உங்களுக்கு தெரியுமா உடல் வெப்பத்தை தணிக்கும் மாங்காய் புதினா சட்னி

nathan

புதுமையான முள்ளங்கி சட்னி!!

nathan

தெரிஞ்சிக்கங்க…ஆரோக்கியத்தை தரும் பீர்க்கங்காய் சட்னி

nathan

சுவையான இஞ்சி சட்னி!….

sangika

பீட்ரூட் சட்னி

nathan

சூப்பரான கோங்குரா சட்னி

nathan