28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
201702241436307461 drink Sesame oil on an empty stomach SECVPF
ஆரோக்கிய உணவு

நல்லெண்ணெயை வெறும் வயிற்றில் குடிக்கலாமா?

எள் கொண்டு தயாரிக்கப்படும் நல்லெண்ணெயில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளது. நல்லெண்ணெயை எடுத்துக் கொள்வதன் மூலம் பெறும் நன்மைகளைப் பற்றிப் பார்ப்போம்.

நல்லெண்ணெயை வெறும் வயிற்றில் குடிக்கலாமா?
எள் கொண்டு தயாரிக்கப்படும் நல்லெண்ணெயில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளது. இதற்கு அதில் நிறைந்துள்ள வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் தான் காரணம். அதிலும் நல்லெண்ணெயில் வைட்டமின், ஈ, வைட்டமின் பி6, மக்னீசியம், காப்பர், கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க் போன்றவை வளமாக நிறைந்துள்ளது.

இது உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித் தருவதால் தான் என்னவோ, நம் முன்னோர்கள் இதனை நல்லெண்ணெய் என்று அழைக்கின்றனர் போலும். இந்த நல்லெண்ணெயை சமையலிலும் சேர்க்கலாம் அல்லது காலையில் வெறும் வயிற்றில் 1 டீஸ்பூன் குடித்தும் வரலாம். இப்போது நல்லெண்ணெயை எடுத்துக் கொள்வதன் மூலம் பெறும் நன்மைகளைப் பற்றிப் பார்ப்போம்.

நல்லெண்ணெயை காலையில் வெறும் வயிற்றில் சிறிது குடித்தால், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

நல்லெண்ணெயில் லெசித்தின் என்னும் பொருளும், லினோலிக் என்னும் அமிலமும் இருப்பதால், இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்பைக் கரைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.

உடல் சூட்டினால் அவஸ்தைப்படுபவர்கள், நல்லெண்ணெயை சிறிது குடித்தால், உடல் வெப்பம் தணிந்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும்.

நல்லெண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளதால், இவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். குறிப்பாக நல்லெண்ணெய் குடிப்பதால், இரத்த அழுத்த மருந்துகளை நாளடைவில் குறைத்துவிடலாம்.

நல்லெண்ணெயில் கால்சியம் மற்றும் ஜிங்க் வளமாக இருப்பதால், தினமும் சிறிது நல்லெண்ணெயை வெறும் வயிற்றில் குடித்தால், ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்புப்புரையின் தாக்கம் குறைந்து, எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.

நல்லெண்ணெய் மன அழுத்தத்தைக் குறைத்து, மனநிலையை மேம்படுத்தும். மேலும் இது இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற செய்து கடுமையான சோர்வில் இருந்து விடுபடச் செய்து, உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

மூட்டு வலிகளால் கஷ்டப்படுபவர்கள், நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதன் மூலமோ அல்லது குடிப்பதன் மூலமோ குணப்படுத்தலாம்.

நல்லெண்ணெயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மையினால், இந்த எண்ணெயைக் தினமும் காலையில் வாயில் சிறிது ஊற்றி, 10 நிமிடம் கொப்பளித்து, வர வேண்டும். இப்படி செய்து வந்தால், பல் வலி, ஈறு பிரச்சனைகள் போன்றவை நீங்கி வாய் ஆரோக்கியம் மேம்படும்.

வயிற்றுப்போக்கின் போது நல்லெண்ணெயின் உபயோகத்தைத் நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், அது உடலில் நீர்வறட்சியை ஏற்படுத்திவிடும். முக்கியமாக இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், மருத்துவரின் பரிந்துரையின்றி, அதற்கான மருந்து மாத்திரைகளை நிறுத்தக்கூடாது. மேலும் நல்லெண்ணெய் உங்களுக்கு அலர்ஜி என்றால், அதனை பயன்படுத்த வேண்டாம்.201702241436307461 drink Sesame oil on an empty stomach SECVPF

Related posts

உங்களுக்கு தெரியுமா பால் குடிப்பதால் ஏற்படும் தீவிரமான 7 பக்க விளைவுகள்!!!

nathan

கார்ன் பாலக் கிரேவி

nathan

பழங்கள் தரும் பலன்கள்

nathan

சத்தான வெஜிடபிள் பணியாரம்

nathan

நோய்களை நீக்கி ஆரோக்கியத்தை அள்ளித்தரும் அத்திப்பழ மில்க் ஷேக் எப்படி செய்வது

nathan

சூப்பரான வெண்டைக்காய் பெப்பர் பிரை.! இன்றே செய்து பாருங்கள்..!

nathan

தெரிந்துகொள்வோமா? வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க உதவும் 25 ஆரோக்கிய உணவுகள்!

nathan

கொள்ளு இட்லி பொடி செய்வது எப்படி

nathan

தந்தூரி உணவுகள் உடலுக்கு ஆரோக்கியமானதா?

nathan